புன்னாலைக்கட்டுவன்

புன்னாலைக்கட்டுவன் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசசபைப் பிரிவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். யாழ் நகரில் இருந்து பலாலி வீதியால் செல்லும் போது நகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இக் கிராமம் உள்ளது. வடக்கே வயாவிளான், கிழக்கே அச்செழு, தெற்கே ஊரெழு, மேற்கே குப்பிளான் ஆகிய கிராமங்களும் எல்லைகளாகவுள்ளன. ஆதி காலத்தில் ஏராளமான புன்னை மரங்கள் நிறைந்து வளர்ந்ததாகவும் அதன் காரணமாக புன்னை நகர் என அழைக்கபட்டு பின்னர் இப்பெயர் மருவி புன்னாலைக்கட்டுவன் ஆனதாகவும் கதை உண்டு.

பாடசாலைகள்

தொகு
  • புன்னாலைக்கட்டுவன் மகாவித்தியாலயம்

1908ம் ஆண்டு இந்த பாடசாலையை ஆரம்பித்தவர் கணேசையரின் மைத்துனரான பிரம்மஸ்ரீ ஐயாத்துரை துரைசாமி ஐயர் ஆவார்.தனது சொந்த நிலபுலன்களை ஈடுவைத்தே இந்த பாடசாலையை ஆரம்பித்து நடாத்தினார். ஆனால் அவர் தனது நாற்பத்தேழாவது வயதில் நோய்வாய்ப்பட்டதும் பாடசாலை செயலிழக்கும் தறுவாயில் 1913ம் ஆண்டு அவரது மைத்துனர் கதிர்காமையர் செல்லையர் என்பவரால் பிரித்தானிய வெஸ்லியன் மெதடிஸ் மிசனரியினருக்கு விற்கப்பட்டது.

இப்பாடசாலை ஆரம்பகாலத்தில் இரண்டு பரப்பு நிலத்தில் தற்போதய புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் பாடசாலைக்கு வடக்கு பக்கமாக சில யார் தூரத்தில் அமைந்திருந்தது. 1917ம் ஆண்டு புன்னாலைக்கட்டுவன் வடக்கில் 15பரப்பு நிலம் இப்பாடசாலைக்கு அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றதும் பாடசாலையை இங்கிருந்து புதிய காணிக்கு மாற்றினர்.

1956ம் ஆண்டின் பிற்பகுதிகளில் இப்பாடசாலை கல்வி அமைச்சினால் பொறுப்பேற்கப்பட்டு புன்னாலைக்கட்டுவன் மகா வித்தியாலயம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டு க.பொ.த (சாதாரணதரம்) வரையான வகுப்புகளை கொண்ட பாடசாலையாக இயங்கியது.1990களின் பிற்பகுதிகளில் உள்நாட்டு யுத்தத்தினால் மிகவும் பாதிப்படையத்தொடங்கியது. பாடசாலையும் உள்ளக இடப்பெயர்வுகளில் இடம்பெயர்ந்தது. 1999ம் ஆண்டு தரம் 9 வரை வகுப்புகளை கொண்டு காணப்பட்டது. 1999ம் ஆண்டில் இருந்து தரம் 5 வரையான வகுப்புக்களை கொண்ட பாடசாலையாக மாற்றப்பட்டது. தற்போது இது பிள்ளைநேய ஆரம்பப்பாடசாலையாக இயங்குகின்றது.

ஆலயங்கள்

தொகு
  • ஆயாக்கடவை சித்திவிநாயகர் ஆலயம்
  • அய்யனார் கோவில்
  • பூதராயர் கோவில்
  • வயிரவர் கோவில்
  • நாச்சிமார் அம்மன் கோவில்

இங்கு பிறந்த புகழ் பூத்தவர்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புன்னாலைக்கட்டுவன்&oldid=3912542" இலிருந்து மீள்விக்கப்பட்டது