புரூரவசு இந்து தொன்மவியலின் படி பூலோகத்து அரசனும், இந்திரனின் நண்பரும், தேவ கன்னிகையான ஊர்வசியின் கணவனும் ஆவார்.

இவர் ஊர்வசியையும், சித்திரலோகையையும் கடத்தி சென்ற கேசி என்ற அரசனுடன் போரிட்டு இருவரையும் மீட்டார். பின் இருவரையும் தேவலோகத்தில் சேர்த்தார். இதன் காரணமாக ஊர்வசிக்கு புரூரவசுவின் மேல் காதல் ஏற்பட்டது. பரதரின் நாட்டிய நாடகத்தில் தன்னை மறந்து ஊர்வசி தன் காதலை வெளிப்படுத்தியமையால், பரதரின் சாபத்தால் பூலோகத்தில் கொடியாக 50 வருடங்கள் இருந்து பின் புரூரவசுவை மணம் செய்தார். மாயாதரன் எனும் அசுரனை வெல்ல இந்திரனுக்கு துணையாக இருந்தார். அதன் பின் இந்திர லோகத்தில் நடந்த நடன நிகழ்ச்சியில் ஆடிய ரம்பையின் நடத்தினை விமர்சனம் செய்தார். இதனால் ரம்பையின் நடன ஆசிரியரான தும்புரு ஊர்வசியை விட்டு புரூரவசு பிரிய சாபம் தந்தார். இதனால் புரூரவசு ஊர்வசியைப் பிரிந்து பின் திருமாலை நோக்கி கடுஞ்தவம் செய்து அந்த தவத்தின் பலனால் மீண்டும் ஊர்வசியை அடைந்தார்.

கருவி நூல் தொகு

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் - வீ. அரசு - இளங்கணி பதிப்பகம்

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூரவசு&oldid=3738976" இலிருந்து மீள்விக்கப்பட்டது