புறொக்சி சேவர்

கணினி வலையமைப்பில் புறொக்ஸி செர்வர்/சேவர் (ஈட்டுவழங்கி) என்பது வாங்கிகள் (கிளையண்ட்) இன் கோரிக்கைகளை உள்வாங்கித் தன் சார்பாக ஏனைய வழங்கிகளுக்கு (சேவர்) அனுப்பும் ஓர் மென்பொருளாகும். வாங்கியானது ஓர் இணையப்பக்கத்தையோ, கோப்பினையோ வேறேதேனும் வழங்கியில் ஓர் சேமிக்கப்பட்ட விடயத்தையோ அதன் சார்பாகப் பெற்றுக்கொண்டு வாங்கிக்கு வழங்கும். புறொக்ஸி சேவரானது வழங்கியின் விண்ணப்பதைச் சிலசமயம் மாற்றுவதோடு பலசமயங்களில் எடுத்துக்காட்டாக இணையப்பக்கங்கள் போன்றவை ஏற்கனவே அணுகியிருந்தால் வழங்கியிடம் இருந்தல்லாமல் சேமித்ததை வழங்கும். இச்செயற்பாட்டிற்காக தேக்கம் (cache) என்றவாறு அழைக்கப்படும் சேமிப்பு வசதியினைக் கொண்டதாகும். போதுவாக வாங்கிகள் வழங்கியிடம் இருந்து சேவை ஒன்றைப் பெற விண்ணப்பிக்கும் பொழுது ஈட்டுவழங்கியில்( புறோக்ஸியில்) அது சேமிக்கப்படும் எனவே மீண்டும் அதே விபரத்தை வேறு ஓர் வாங்கி பெற முயற்சி செய்தால் புறொக்ஸி சேவர் வழங்கிக்கொள்ளும். இதன் மூலம் வேகமாக சேவையை வழங்கிகளுக்கு வழங்கிக் கொள்ளும்.

ஓர் வலையமைப்பில் வாங்கிகளின் கோரிக்கையை மாற்றம் ஏதும் செய்யாமல் வழங்கும் புறொக்ஸி சேவரானது கேட்வே (Gateway) அல்லது சுரங்க புறோக்ஸி எனப்பொருள்படும் டனலிங் புறொக்ஸி என்றழைக்கப்படும் (tunneling proxy)

ஓர் புறோக்ஸி சேவர் ஆனது பயனரின் கணினியிலோ அல்லது பயனரின் கணினிக்கும் இணையத்தை அணுகுவதற்கும் இடையிலே இருக்கலாம்.

வகைகளும் பயன்பாடும் தொகு

புறொக்ஸி சேவரானது கீழ்வரும் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பயன்பாட்டினை உடையது.

காஷிங் புறொக்ஸிசேவர் தொகு

ஓர் புறொக்ஸி சேவரானது ஓர் வாங்கியின் கோரிக்கையை வழங்கியிடம் இருந்தல்லாமல் ஏற்கனே அந்தக் வாங்கியோ அல்லது பிறிதோர் வாங்கியோ விடுத்த விண்ணப்பத்தில் இருந்து சேமிக்கப்பட்டதை வழங்கும் ரகமே காஷிங் புறொக்ஸி சேவராகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புறொக்சி_சேவர்&oldid=3823803" இலிருந்து மீள்விக்கப்பட்டது