புளுட்டோனியம்(IV) அயோடேட்டு

புளுட்டோனியம்(IV) அயோடேட்டு (Plutonium(IV) iodate) என்பது Pu(IO3)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்த உப்பு 540° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் புளுட்டோனியம்(IV) ஆக்சைடாக சிதைவடைகிறது.[3] புளுட்டோனியம்(IV) நைட்ரேட்டு சேர்மத்துடன் அயோடிக் அமிலத்தைச் சேர்த்து வினை புரியச் செய்தால் புளுட்டோனியம்(IV) அயோடேட்டு உருவாகும். ஆனால் இந்த முறையில் ஒரு தூய புளுட்டோனியம்(IV) அயோடேட்டைப் பெற இயலாது.[3] பொட்டாசியம் அயோடேட்டு மற்றும் நீர்த்த நைட்ரிக் அமிலத்துடன் புளுட்டோனியம்(IV) நைட்ரேட்டு அல்லது புளுட்டோனியம்(IV) குளோரைடு ஆகியவற்றின் வினையால் உருவாக்குவது மற்றொரு தயாரிப்பு முறையாகும்.[4] P42/n என்ற இடக்குழுவில் நாற்கோணப் படிகத் திட்டத்தில் புளுட்டோனியம்(IV) அயோடேட்டு படிகமாகிறது.[2]

புளுட்டோனியம்(IV) அயோடேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
புளுட்டோனியம் டெட்ரா அயோடேட்டு
இனங்காட்டிகள்
13778-14-8 Y
InChI
  • InChI=1S/Pu.4HIO3/c;4*2-1(3)4/h;4*(H,2,3,4)/q+4;;;;/p-4
    Key: KZCPVUXVUIMYAF-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
  • [O-]I(=O)=O.[O-]I(=O)=O.[O-]I(=O)=O.[O-]I(=O)=O.[Pu+4]
பண்புகள்
Pu(IO3)4
வாய்ப்பாட்டு எடை 943.61
தோற்றம் படிகக் கோணத்திற்கு ஏற்ப பச்சை முதல் பழுப்பு நிறம் வரை[1]
அடர்த்தி 6.074 கி·செ.மீ-3(−80 °செல்சியசு)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Travis Henry Bray. Crossroads and Terminations in Transuranium Chemistry. Auburn University, 2008.
  2. 2.0 2.1 Bray, Travis H.; Ling, Jie; Choi, Eun Sang; Brooks, James S.; Beitz, James V.; Sykora, Richard E.; Haire, Richard G.; Stanbury, David M. et al. (2007-04-30). "Critical Role of Water Content in the Formation and Reactivity of Uranium, Neptunium, and Plutonium Iodates under Hydrothermal Conditions: Implications for the Oxidative Dissolution of Spent Nuclear Fuel" (in en). Inorganic Chemistry 46 (9): 3663–3668. doi:10.1021/ic070170d. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:17397146. https://pubs.acs.org/doi/10.1021/ic070170d. 
  3. 3.0 3.1 Dawson, J. K.; Elliott, R. M. The thermogravimetry of some plutonium compounds. Atomic Energy Research Estab. (Gt. Brit.), 1957.
  4. Zolotov, Yu. A. (Oct 2006). "News in Zhurnal Analiticheskoi Khimii". Journal of Analytical Chemistry 61 (10): 935. doi:10.1134/s1061934806100017. பன்னாட்டுத் தர தொடர் எண்:1061-9348. http://dx.doi.org/10.1134/s1061934806100017.