புளுட்டோனியம் போரைடு
புளுட்டோனியம் போரைடு (plutonium boride) என்பது புளுட்டோனியமும் போரானும் நேரடியாக வெற்றிடச் சூழலில் குறைக்கப்பட்ட அழுத்தத்தில் வினைபுரிந்து உண்டாகும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
TiB, ZrB மற்றும் HfB சேர்மங்களைப் போல செல்சியசு வெப்பநிலையில் 40 முதல் 70 சதவீத போரான் சேர்ந்துள்ள புளுட்டோனியம் போரைடு உருவாவதாகவும், அதில் Pu-B பிணைப்பு நீளம் 2.46 Å மற்றும் NaCl படிக அமைப்புடனும் காணப்படும் என்றும் கருதப்படுகிறது.[1] புளுட்டோனியம் போரைடின் இருப்பு குறித்து பல்வேறு எதிர்ப்புகள் தோன்றி விவாதிக்கப்பட்டு வருகின்றன[2]
செல்சியசு வெப்பநிலையில் PuB2 உருவாகிறது. மற்ற இருபோரைடுகள் போலவே புளுட்டோனியம் இருபோரைடும் படிக அமைப்பைக் கொண்டுள்ளது.
செல்சியசு வெப்பநிலையில் 70 முதல் 85 சதவீத அளவு போரானுடன் சேர்ந்தால் PuB4 மற்றும் PuB6 போரைடுகளின் கலவை உண்டாகிறது. வெப்பநிலை அதிகரிக்கும் போது PuB6 அதிகமாக உருவாகிறது. PuB4 சேர்மம் UB4 சேர்மத்தைப்போல நான்முக அமைப்பையும், PuB6 , CaB6, LaB6 சேர்மங்கள் போல கனசதுர அமைப்பையும் கொண்டுள்ளன[1].
PuB100 என்ற போரைடு மிகவும் குறிப்பிடத்தக்க விவாதங்களுக்கு இடமளித்துள்ளது. இதன் இருப்பு போரான் மாசடைதலின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. போரைடுகள் 1 சதவீத மாசு அடைந்திருந்தாலும் அவற்றின் படிக வடிவங்கள் மாறுபடுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 B. J. McDonald; W. I. Stuart (1960). "The crystal structures of some plutonium borides". Acta Cryst. 13 (5): 447–448. doi:10.1107/S0365110X60001059.
- ↑ H. A. Eick (1965). "Plutonium Borides". Inorganic Chemistry 4 (8): 1237–1239. doi:10.1021/ic50030a037.