புள்ளி விளக்கப்படம் (புள்ளியியல்)

புள்ளி விளக்கப்படம் அல்லது புள்ளிப் படம் (dot chart, dot plot) என்பது ஒரு புள்ளியியல் விளக்கப்படம் ஆகும். இந்த விளக்கப்படத்தில் தரவுப் புள்ளிகள் எளிய அளவீடு கொண்டு நிறைவட்டங்களால் (filled in circles) குறிக்கப்பட்டிருக்கும். பயன்பாட்டில் இருவகையான புள்ளிப்படங்கள் உள்ளன. ஒன்று கணினி காலத்திற்கு முன்னர் 1884 ஆம் ஆண்டுதொட்டு கையால் வரையப்பட்டவை;[1] மற்றொன்று வில்லியம் எஸ். கிளீவ்லேன்டால் செவ்வகப் படத்திற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட புள்ளிப்படம். இதில் வகையின மாறிகளுடன் இணைப்பான எண்சார் மதிப்புகள் புள்ளிகள் பயன்படுத்தப்படுகிறது.[2]

0 - 9 வரையிலான 50 சமவாய்ப்பு மதிப்புகளின் புள்ளிப்படம்.

ஒரு பரவலின் உருவகிப்பாக புள்ளிப்படமானது எளிய அளவீடு கொண்டு குறிக்கப்பட்டப் புள்ளிகளைக் கொண்டிருக்கும். தொடர்ச்சியான, அளவுசார்ந்த, ஓருறுப்புமாறி தரவுகளுக்கு புள்ளிப்படம் வரையப்படுகிறது. தரவுப் புள்ளிகளின் எண்ணிக்கை குறைந்தளவில் இருந்தால், அப்புள்ளிகளுக்கு பெயரிடலாம். சிறியது முதல் அளவான தரவுகளுக்குப் பொருத்தமான விளக்கப்படங்களுள் புள்ளிப்படமும் ஒன்றாகும்.

மேற்கோள்கள் தொகு