புழுதிப் புயல்
புழுதிப் புயல் (dust storm) அல்லது மணற்புயல் (sandstorm) எனப்படுவது வறண்ட அல்லது பகுதி-வறண்ட பகுதிகளில் ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வாகும். இது காற்று மண்டலத்தின் வேகம் ஒரு குறிப்பிட்ட வேகத்தை விட அதிகரிக்கும் போது மணல் மற்றும் தூசிகளை வறண்ட நிலங்களில் இருந்து அகற்றி தன்னுடன் எடுத்துச் செல்வதால் ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது மணல் துணிக்கைகள் ஓரிடத்தில் இருந்து அகற்றப்பட்டு வேறோர் இடத்தில் குவிக்கப்படுகின்றன. அராபியத் தீபகற்பத்தை அண்டியுள்ள சகாரா மற்றும் பாலைவனங்கள் புழுதிப்புயலை உருவாக்கும் முக்கிய பகுதிகளாகும். இவற்றைவிட அரபிக்கடலை அண்டியுள்ள ஈரான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளின் பகுதிகளிலும், மற்றும் சீனாவிலும் குறைந்த அளவில் புழுதிப்புயல் ஏற்படுகின்றன. இவ்வாறான புழுதிப் புயல் ஏற்பட்டால் நிலம் தரிசாக மாறிவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன[1]. அண்மைய ஆய்வுகளின்படி, தரிசு நிலங்கள் முறையாகப் பாதுகாக்கப்படாமை போன்ற பூமியின் வறண்ட பகுதிகளின் மேலாண்மைக் குறைபாடுகளே, புழுதிப்புயல் ஏற்படக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது[2].
குறிப்பிடத்தக்க புழுதிப்புயல்கள்
தொகு- 1930கள்: ஐக்கிய அமெரிக்காவின் நடுப் பகுதியிலும், கனடாவிலும் இடம்பெற்ற தொடர் புழுதிப்புயலினால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இடம்பெயர்ந்தனர்.
- 1954-1991: வட அமெரிக்காவில் 1954-56, 1976-78, and 1987-91 காலப்பகுதிகளில் இடம்பெற்ற வறண்ட புழுதிப்புயல்கள் குறிப்பிடத்தக்கவை. இவை 30களில் இடம்பெற்ற புயல்களைப் போன்றவை.
- 1983: ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் பெப்ரவரி 8 இல் நிகழ்ந்த புழுதிப்புயல் நகரையே மூடியது.
- 2007: பெப்ரவரி 24 இல் மேற்கு டெக்சாசில் முழு நகரையும் மூடியது. பலத்த காற்று கட்டிடங்காள், மற்றும் சொத்துக்களுக்கு சேதத்தை உண்டு பண்ணியது.
- 2007: ஜூன் மாதத்தில் கராச்சியில் இடம்பெற்ற புழுதிப்புயல் அதன்பின்னர் ஏற்பட்ட பலத்த மழை காரணமாக 200 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 2008: மே 2 இல் நாகை மாவட்டம், வேதாரண்யம், கோடியக்கரையில் சூறாவளி, மற்றும் புழுதிப்புயல் ஏற்பட்டது[3].
- 2009: செப்டம்பர் 23 இல் தெற்கு ஆஸ்திரேலியாவில் தொடங்கிய புழுதிப்புயல் நியூ சவுத் வேல்சில் சிட்னி நகரை மூடி நகரின் வான்பரப்பை கரும் செம்மஞ்சள் நிறமாக்கியது[4]. இது பின்னர் வடக்கு நோக்கி குயின்ஸ்லாந்து வரை நகர்ந்தது[5].
- 2011, ஏப்ரல் 8 இல் வடக்கு செருமனியில் பெரும் மணற்புயல் திடீரென நெடுஞ்சாலை ஒன்றைத் தாக்கியதில் சாலையில் பயணித்த 80 இற்கும் அதிகமான வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாயின. இவ்விபத்தில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டுப் பலர் காயமடைந்தனர்[6].
இவற்றையும் பார்க்கவும்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Climate data offer clues to Dust Bowl drought[தொடர்பிழந்த இணைப்பு], Swissinfo,ch
- ↑ Physics, Mechanics and Processes of Dust and Sandstorms பரணிடப்பட்டது 2008-07-18 at the வந்தவழி இயந்திரம், அடிலெய்ட் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா
- ↑ கோடியக்கரை கடலில் சூறாவளி: புழுதிப் புயல்-மீனவர்கள் பீதி[தொடர்பிழந்த இணைப்பு], தட்ஸ்தமிழ்
- ↑ http://www.smh.com.au/environment/sydney-turns-red-dust-storm-blankets-city-20090923-g0so.html
- ↑ http://www.abc.net.au/news/stories/2009/09/23/2694096.htm
- ↑ 8 killed in German pile-up caused by sand storm, டெலிகிராஃப், ஏப்ரல் 9, 2011
வெளி இணைப்புகள்
தொகு
- Slide Show of a Dust Storm பரணிடப்பட்டது 2004-06-23 at the வந்தவழி இயந்திரம்
- Dust in the Wind
- Video of a dust storm in Al Asad Iraq, April 27, 2005 பரணிடப்பட்டது 2007-09-02 at the வந்தவழி இயந்திரம்
- Photos of dust storms hosted by the Portal to Texas History.
- The Bibliography of Aeolian Research பரணிடப்பட்டது 2017-06-07 at the வந்தவழி இயந்திரம்
- Storms tear through Texas, neighbor states; Property damage, fires, injuries reported; Arkansas hit hardest பரணிடப்பட்டது 2010-11-30 at the வந்தவழி இயந்திரம்
- Dallas dust storm causes LAX delays, cancellations பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்
- University of Arizona Dust Model Page பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம்
- Photos of a sandstorm in Riyadh in 2009 from the BBC Newsbeat website