புவான் ஸ்ரீ

மலேசியாவில் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான டான் ஸ்ரீ விருதைப் பெற்ற ஒருவரின் துணைவியாரை, புவான் ஸ்ரீ (Puan Sri) என்று அழைக்கிறார்கள். அதே டான் ஸ்ரீ விருது, அரிய சேவைகளைச் செய்த பெண்களுக்கு, தனிப்பட்ட வகையில் வழங்கப்படுமானால், அந்தப் பெண்மணியை டான் ஸ்ரீ என்றே அழைக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, மலேசிய அரசியல்வாதி டான் ஸ்ரீ தேவகி கிருஷ்ணனைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.[1] அவரை டான் ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் என்றே அழைக்கிறார்கள். இவர் மலேசியத் தேர்தல்களில் போட்டியிட்ட முதல் இந்தியப் பெண்மணி. ஜான்சிராணிப் படையில் சேர்ந்து இந்திய விடுதலைக்காகப் போராடியவர்.

மலேசிய இந்தியர்களில் டான் ஸ்ரீ விருது பெற்ற வி. மாணிக்கவாசகம், ஆதி நாகப்பன், ஜி.கே. ராம ஐயர், பி.சி. சேகர், கே.எஸ். நிஜார், கே. தனபாலசிங்கம், கே.ஆர். சோமசுந்தரம், எம். தம்பிராஜா, மணி ஜெகதீசன், ரமோன் நவரத்தினம், டோனி பெர்னாண்டஸ், கிசு திராத்திரை போன்றவர்களின் துணைவியார்களை, புவான் ஸ்ரீ எனும் கௌரவ அடைமொழியுடன் அழைக்கிறார்கள்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவான்_ஸ்ரீ&oldid=1901055" இருந்து மீள்விக்கப்பட்டது