புஷ்பக பிராமணர்கள்

புஷ்பக பிராமணர் (Pushpaka Brahmin) என்பது அம்பலவாசி சமூகத்தில் கேரளாவின் பல்வேறு இந்து பிராமண சாதிகளின் ஒரு குழுவைக் குறிக்கும் பொதுவான சொல்லாகும். [1] இவர்கள் முதன்மையாக புஷ்பகாக்கள் (அல்லது புஷ்பகா உன்னிகள்) நம்பீசன்கள் என்ற இரண்டு சாதிகளை உள்ளடக்கியுள்ளனர். இவர்கள் இந்து கோவில்களில் பூக்களைக் கொண்டு மாலைகள் தயாரிக்கும் பணியை செய்து வந்தனர். மேலும், இந்து கோவில்களுடன் தொடர்புடைய பாடசாலைகளில் புனித நூல்களையும் சமசுகிருத மொழியையும் கற்பிப்பதற்கான உரிமைகள் இவர்களுக்கு வழங்கப்பட்டன. பிற்காலத்தில் இதேபோன்ற கலாச்சாரத்தையும், கோயில் தொடர்பான வேலைகளையும் கொண்ட தீயாட்டு உன்னிகள், குருக்கள்கள், புப்பள்ளிகள் போன்ற சில சமூகங்களும் புஷ்பக பிராமணர்களாக கருதப்பட்டன. [2]

புஷ்பக பிராமணப் பெண்களின் திருமணத் தாலி

சமூக நலன்

தொகு

இப்போதெல்லாம், இவர்கள் தங்களின் பாரம்பரிய தொழில்களான பாடசாலைகளில் ஆத்யாபனம் (கற்பித்தல்), மாலக்கெட்டு (மாலையை உருவாக்குதல்), விளக்கெடுப்பு (விளக்கு தாங்குதல்) போன்ற பணிகளைச் செய்யத் தயங்குகிறார்கள். தொழில்களில் வரும் குறைந்த வருமானமே இதற்கு காரணமாகும். சிறீ புஷ்பகாபிரம்ம சேவா சங்கம் என்பது புஷ்பக பிராமண சாதிகளின் நலனுக்காக செயல்படும் ஒரு அமைப்பாகும்..

மேற்கோள்கள்

தொகு
  1. Rose, Suma (2004). Polity, Society, and Women: With Special Reference to Travancore, 1700-1900 A.D. Carmel International Publishing House. p. 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788187655374. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.
  2. Report of the Commission for Reservation of Seats in Educational Institutions, Kerala, 1965. Commission for Reservation of Seats in Educational Institutions.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புஷ்பக_பிராமணர்கள்&oldid=3036448" இலிருந்து மீள்விக்கப்பட்டது