பூசணி
(பூசனிக்காய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பூசணி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Cucurbita spp. |
இனங்கள் | |
பூசணி, (ⓘ, பேரினம் : Cucurbita spp.) சமையலில் பயன்படும் பூசணிக்காய்களைத் தரும் தாவரமாகும். பூசணிக்காய் தாவரவியலின்படி, பழம் என்றாலும், பொதுவாக காய்கறியாகக் கருதப்படுகிறது. பூசணிக்காய்கள் பொதுவாக செம்மஞ்சள், மஞ்சள் நிறமானவை; கரும்பச்சை, வெளிர்பச்சை, வெள்ளை போன்ற நிறங்களிலும் காணப்படுவதுண்டு. இதன் தாயகம் வட அமெரிக்கா[1] ஆகும்.
- சொற்பொருள்
பூசணிக் கொடியிலும், இலையிலும் பூஞ்சுணைகள் (மென்மையான சுணைகள்) இருக்கும். பூசுணைக்கொடி என்பது பூசணிக்கொடி என மருவிற்று.
- வேறுபாடு
- மஞ்சள் பூசணியைப் பறங்கிக்காய் என்பர். அதன் பொருள் பறை போல் உள்ள காய் என்பது. தமிழகத்தின் சில பகுதிகளில் அரசாணிக்காய் எனவும் அழைக்கப்படுகிறது
- வெள்ளைநிறப் பூசணிக்காய்தான் பூசணிக்காய் என்னும் பெயரால் வழங்கப்படும்.[சான்று தேவை]
பயன்கள்
தொகு- பூசணிக்காய் கறி சமைக்கவும், ரசம் தயாரிக்கவும் பயன்படுகிறது. பூசணி விதைகளும், சுட்டு உண்ணப்படுவதுண்டு.
- தமிழக இறை வழிபாடுகளில், பூசணியைப் பயன்படுத்துவர். குறிப்பாக அமாவாசை அன்று சமைத்து உண்பர்.
- தமிழகத்தில் சாம்பல் பூசணி வகையை கண் திருட்டியிலிருந்து காக்கும் வண்ணம் இறைவழிபாட்டிற்குப் பின், சாலைகளில் போட்டு உடைப்பர். அதனால் பல சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. தமிழக அரசு இங்ஙனம் சாலைகளில் பூசணிக்காய் உடைக்கக் கூடாது என்பதற்கு சட்டம் இயற்றியுள்ளது.
- அமெரிக்கா போன்ற சில நாடுகளில், பூசணியைக் கலைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். (எ.கா.) ஆலோவின்
மேற்கோள்கள்
தொகு- ↑ Robinson, RW, Decker-Walters, DS (1997). "Cucurbits". Cab International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85199-133-5. Archived from the original on 2015-09-13. பார்க்கப்பட்ட நாள் 2018-06-14.