பூஞ்சைப் பருந்து
பூஞ்சைப் பருந்து | |
---|---|
![]() | |
இந்தியாவில் பூஞ்சைப் பருந்து | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகெலும்புள்ளவை |
வகுப்பு: | பறவை |
வரிசை: | அசிபித்ரிபார்மசு |
குடும்பம்: | அசிபித்ரிடே |
பேரினம்: | Hieraaetus |
இனம்: | H. pennatus |
இருசொற் பெயரீடு | |
Hieraaetus pennatus (Gmelin, 1788) | |
வேறு பெயர்கள் | |
|

பூஞ்சைப் பருந்து (Booted Eagle) இப்பறவை ஒரு நடுத்தர தோற்றம் கொண்ட ஊன் உண்ணிப்பறவை இனத்தைச் சார்ந்த பறவையாகும். இதன் உடலின் நீளம் சாதாரண நிலையில் 46 செ.மீற்றர்களும், சிறகு விரிந்த நிலையில் 120 செ. மீற்றர்களும் கொண்டு தோற்றம் அளிக்கிறது. இதன் குடும்பப்பெயர் அக்சிபிட்ரிடே என அறியப்படுகிறது. [1]
விளக்கம்தொகு
இப்பறவைப்போல் மேலும் பல பருந்துகள் இதன் தோற்றத்திலேயே காணப்படுகிறது. இவற்றில் ஆண் பறவை 510 கிராம் முதல் 770 கிராம் வரையும், பெண் பறவை 950 கிராம் முதல் 1,000 கிராம் வரையும் உடல் வாகுவைக்கொண்டு காணப்படுகிறது. இவற்றில் ஆண் பெண் இரண்டும் தனித்துவமான இறகுகளைக்கொண்டு காணப்படுகிறது. வெளிறிய சாமபல் நிறத்துடன் இதன் தலைப்பகுதி காணப்படுகிறது. பூஞ்சைப் பருந்துவின் இறகுகள் விமான இறக்கைபோல் காட்சி அளிக்கிறது.
இனப்பெருக்கம் மற்றும் வாழிடம்தொகு
இவை தெற்கு ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா ஆசியா போன்ற பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படுகிறது. முழுவதும் பெருக்கி வருகிறது. ஆப்பிரிக்காவின் சகாரா பகுதிகளின் பனிக்கலங்களின் இனப்பெருக்கத்திற்க்க இடம்பெயர்ந்து செல்லுகிறது. பெரிய மரங்கள் செங்குத்தான பாறைகளின்மேல் கூடுகட்டி வாழுகிறது. இவை ஒன்று அல்லதி இரண்டு முட்டைகலை இடுகிறது.