பூனா உடன்படிக்கை

இரண்டாம் பாகிராவுக்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையிலான ஒப்பந்தம்

பூனா உடன்படிக்கை (Treaty of Poona) பூனாவை ஆட்சி செய்துவந்த பேசுவா இரண்டாம் பாகிராவுக்கும் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியினருக்கும் இடையே 1817 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும். இதன் விளைவாக நருமதை ஆற்றுக்கு வடக்கிலுள்ள பிரதேசமும் துங்கபத்திரை ஆற்றுக்கு தெற்கிலுள்ள பகுதிகளும் பிரித்தானியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பாகிராவ் கெயிக்வாட் வம்சம் மீதான உரிமைகளை கம்பெனிக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை உருவானது. இறுதியாக கிழக்கிந்திய கம்பெனியாரின் அனுமதியின்றி வேறு எந்த இந்திய அரசர்களுடனும் பாகிராவ் தொடர்பு கொள்ளவும் முடியாத நிலை ஏற்பட்டது [1][2].

மேற்கோள்கள் தொகு

  1. Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. பக். 79-80. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131300343. 
  2. Bundelkhand - Encyclopædia Britannica
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூனா_உடன்படிக்கை&oldid=2953074" இலிருந்து மீள்விக்கப்பட்டது