பூமாலை நடவடிக்கை

பூமாலை நடவடிக்கை என்பது 1987 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் நாள் இலங்கையின் ஆளுகைக்குட்பட்ட வான்பரப்பில் அத்து மீறி உள்நுழைந்த இந்திய வான்படை விமானங்கள் யாழ் குடாநாட்டின் மீது உணவுப் பொருட்களை இட்ட நடவடிக்கைக்கான பெயராகும். யாழ் குடாநாட்டை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கும் நோக்கில் இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேசன் லிபரேசன் எனப்படும் நடவடிக்கையின் போது யாழ் குடாநாட்டில் நிலவிவந்த உணவுப் பொருள் பற்றாக்குறைக் காரணமாக இந்தியா இந்நடவடிக்கையை எடுத்தது. 1971 ஆம் ஆண்டின் இந்திய-பாகிஸ்தானிய போருக்குப் பின் இந்திய விமானப்படை இன்னொரு நாட்டின் ஆளுமைக்குட்பட்ட வான்பரப்பை மீறியதும், இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா நேரடியாக தலையிட்டதும் இதுவே முதல் முறையாகும்.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமாலை_நடவடிக்கை&oldid=3248068" இலிருந்து மீள்விக்கப்பட்டது