பூர்வாஞ்சல்

பூர்வாஞ்சல் (Purvanchal) வட இந்தியாவின் கிழக்கு உத்திரப் பிரதேச மாநிலத்தின் நிலவியல் அமைப்பை குறிப்பதாகும். பூர்வாஞ்சல் பகுதியில் அதிகம் பேசப்படும் மொழிகள் இந்தி, போஜ்புரி, உருது மற்றும் அவதி ஆகும்.

உத்தரப் பிரதேசத்தின் ரோகில்கண்ட், தோவாப், புந்தேல்கண்ட், அவத், பகேல்கண்ட் மற்றும் பூர்வாஞ்சல் (அடர் பச்சை நிறத்தில்) பிராந்தியங்கள்
வாரணாசியின் ஓவியம், ஆண்டு 1890
வாரணாசியின் படித்துறைகள்
கோரக்கநாதர் மடம், கோரக்பூர்

எல்லைகள்

தொகு

பூர்வாஞ்சலின் வடக்கில் நேபாளம், கிழக்கில் பிகார், தெற்கில் மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கில் உத்திரப் பிரதேசத்தின் அவத் பிராந்தியம் மற்றும் கீழ் தோவாப் பிராந்தியங்கள் எல்லைகளாகக் கொண்டது.

அரசியல்

தொகு

உத்தரப் பிரதேசத்தின் மொத்தமுள்ள 80 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களில் 30 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களும்; மொத்தமுள்ள 403 உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களில் 117 உறுப்பினர்களும் பூர்வாஞ்சல் பகுதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பொருளாதாரம்

தொகு

பூர்வாஞ்சல் பகுதியில் வேளாண்மை நன்கு வளர்ச்சி அடைந்திருப்பினும் மக்கள் தொகை அதிகரிப்பாலும்; அடர்த்தியாலும் வேலை வாய்ப்பின்மையாலும் மக்கள் மனதில் அரசிற்கு எதிராக அதிருப்தி வளர்ந்துள்ளது. பூர்வாஞ்சல் பகுதியின் வளர்ச்சி திட்டங்களுக்காக 1991ஆம் ஆண்டு முதல் உத்தரப் பிரதேச மாநில அரசு பூர்வாஞ்சல் வளர்ச்சி நிதி ஆண்டு தோறும் ஒதுக்கிடு செய்து வருகிறது.

எனவே இப்பகுதியின் கல்வி, சமூகப் பொருளாதார முன்னேற்றம், வேலை வாய்ப்புகளுக்காக, கிழக்கு உத்தரப் பிரதேசமான பூர்வாஞ்சால் பகுதியை, உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து பிரித்து தனி மாநில கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

உத்தரப் பிரதேச புவியியல்

தொகு

உத்தரப் பிரதேச மாநிலம் ஐந்து புவியியல் பகுதிகளை கொண்டுள்ளது. அவைகள்; யமுனை ஆற்றுக்கும் கங்கை ஆற்றுக்கும் இடையே உள்ள தோவாப் பகுதி, வடக்கில் ரோகில்கண்ட் பகுதியும், வடமேற்கு உத்திரப் பிரதேசத்தின் அவத் என்ற அயோத்தியாப் பகுதி, தெற்கில் மத்தியப்பிரதேச மாநிலத்தின் எல்லையை ஒட்டிய புந்தேல்கண்ட் பகுதி, கிழக்கு உத்தரப்பிரதேசமான பூர்வாஞ்சல் பகுதி மற்றும் பாகேல்கண்ட் ஆகும்.

புதிய மாநில கோரிக்கை

தொகு

2011 நவம்பர் 16 நவம்பர் 2011இல் மாயாவதி தலைமையிலான உத்திரப் பிரதேச மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தை பூர்வாஞ்சல், அவாத், புந்தல்கண்ட், பஸ்சிம் என நான்கு தனி மாநிலங்களாக பிரிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. அமைச்சரவையின் இம்முடிவை உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் 27 நவம்பர் 2011 அன்று ஒருமனதான ஒப்புதல் அளித்துள்ளதால், மேற்படி நான்கு புதிய மாநிலங்களை அமைத்துத் தர இந்திய அரசுக்கு, உத்தரப் பிரதேச அரசு கோரிக்கை அனுப்பியுள்ளது. [1]

நகரங்கள்

தொகு

பூர்வாஞ்சல் பகுதியின் முக்கிய நகரங்கள்,கோரக்பூர், அலகாபாத், அயோத்தி மற்றும் வாரணாசி ஆகும்.

பூர்வாஞ்சலின் மொழிகள்

தொகு

பூர்வாஞ்சல் பகுதியில் போஜ்புரி, அவதி மொழி, இந்தி, மற்றும் உருது மொழிகள் பேசப்படுகிறது.

பூர்வாஞ்சல் பகுதி மாவட்டங்கள்

தொகு

கிழக்கு உத்தரப் பிரதேசமான பூர்வாஞ்சல் பகுதியில் 17 மாவட்டங்கள் உள்ளது.[2]

புதிதாக அமையப்படும் பூர்வாஞ்சல் மாநிலத்தில் பிகார்]] மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களான போஜ்பூர் மாவட்டம், பக்சர் மாவட்டம் கைமூர் மாவட்டம், ரோத்தாஸ் மாவட்டம், சரண் மாவட்டம், சிவான் மாவட்டம், கோபால்கஞ்ச் மாவட்டம், கிழக்கு சம்பாரண் மாவட்டம் மற்றும் மேற்கு சம்பாரண் மாவட்டங்கள் இணைக்கப்படலாம் என்ற கருதப்படுகிறது.

இந்து மற்றும் பௌத்த புனித தலங்கள்

தொகு
 
கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்த இடம், குசிநகர்
 
கௌதம புத்தரின் உடல் எரியூட்டப்பட்ட இடம், நினைவு ஸ்தூபி, மகுத்தபந்தனா

வானூர்தி நிலையங்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "உதயமாகும் நான்கு புதிய மாநிலங்கள்". Archived from the original on 2012-01-23. Retrieved 2016-09-07.
  2. "Proposed Purvanchal Map". Retrieved 19 June 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்வாஞ்சல்&oldid=4239505" இலிருந்து மீள்விக்கப்பட்டது