பூளை
பூளை இனம் - பேப்பூளை
உயிரியல் வகைப்பாடு
திணை: நிலைத்திணை
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Core eudicots
வரிசை: Caryophyllales
குடும்பம்: அமராந்தேசியே
துணைக்குடும்பம்: குமுட்டிக்கீரை
பேரினம்: Aerva
இனம்: A. lanata[1]
இருசொற் பெயரீடு
Aerva lanata
(லின்.) Juss. ex Schult.
வேறு பெயர்கள்

Achyranthes lanata L.
Aerva elegans Moq.
Illecebrum lanatum (L.) Murr.[2]
Achyranthes villosa Forssk.
Aerva arachnoidea Gand.
Aerva incana Suess.
Aerva mozambicensis Gand.
Aerva sansibarica Suess.
Illecebrum lanatum (L.) L. [3]

பூளை (Aerva lanata) அல்லது தேங்காய்ப்பூக் கீரை அல்லது சிறுபீளை என்னும் பூவை இக்காலத்தில் பூளாப்பூ என்பர். இதற்கு பொங்கப்பூ, சிறுகண்பீளை, பீளைசாறி, கற்பேதி, பாஷாணபேதி, கண்பீளை என வேறு பெயர்களும் உண்டு. பொங்கல் திருவிழாவின்போது இது காப்புக் கட்டவும், வீடுகளுக்கும் மாடுகளுக்கும் தோரணம் கட்டவும் இக்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது. இச்செடி சாப்பிடக்கூடியவை. இதன் இலைகளை ரசம் தயாரிக்கும் பொழுது சேர்க்கின்றனர்.

பெயர் காரணம் தொகு

கற்களைக் கரைக்கும் ஆற்றல் உடையதால் கற்பேதி என்றும், கண்களிலிருந்து வெளியாகும் பீளைபோல இதன் பூக்கள் இருப்பதால் கண்பீளை என்றும் பெயர் உருவாயின.

விளக்கம் தொகு

இது சில அடிகள் உயரம்வரை நிமிர்ந்து வளரக்கூடிய சிறுசெடி வகை ஆகும். இதன் இலைகளுக்கு இடையில் சிறுசிறு வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டிருக்கும். இலை, தண்டில் வெள்ளை நிற ரோம வளரிகள் காணப்படும்.[4]

சங்கப்பாடல்களில் பூளை தொகு

  • குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடியதாகக் காட்டப்பட்டுள்ள 99 மலர்களில் பூளை மலரும் ஒன்று. இது குருவி அமர்ந்திருப்பது போலப் பூத்திருக்கும்.[5]
  • பூளைப்பூ வரகரிசிச் சோறு போல் இருக்கும்.[6]
  • காற்றில் உதிராமல் போராடும் பூ (ஒரு மாத காலம் உதிராமல் பூத்திருக்கும் பூ) [7]
  • மதில் போரில் ஈடுபடுவோர் உழிஞைப் பூவோடு பூளைப் பூவையும் சேர்த்துக் கட்டி அணிந்துகொள்வர்.[8]
  • மடலூரும் தலைவன் அணிந்துகொள்ளும் மாலையில் பூளை, ஆவிரை, எருக்கு ஆகிய பூக்கள் தொடுக்கப்பட்டிருக்கும்.[9]
  • முன்பனிக் காலத்தில் பூக்கும்.[10]
  • காட்டுப்பூனைக் குட்டியின் மயிர் பூளைப்பூப் போலப் பூளைப்பூ இருக்கும்.[11]
  • வேளை வெண்பூவை மேயும் மான் பூளையை மேயாமல் ஒதுக்கும்.[12]
  • கண்ணகி மதுரையை எரியூட்டியபோது நான்கு வருணப் பூதங்களும் வெளியேறின. அவற்றுள் ஒன்றாகிய வேளாண் பூதம் அணிந்திருந்த பூக்களில் ஒன்று பூளை.[13]

சிறுபீளையால் அசிர்க்கர நோய்வாதம்,மூத்திர கிரிசம், முத்தோடம்,மூத்திரச்சிக்கல் பித்தவாதம் ஆகிய நோய்கள் குணமாகும்.

சிறு நெருஞ்சில் (TRIBULUS TERRESTRIS) இது மிகச்சிறந்த சிறு நீர் பெருக்கி ஆகும். கரைக்கப்பட்ட கல்லை வெளியேற்ற தனது சிறுநீர் பெருக்கும் செயலால் இம் மூலிகை முதலிடம் பெறுகிறது.

படக்காட்சியகம் தொகு

பூளாப்பூவைப் போல் காணப்படும் பேப்பூளாப் பூ

இவற்றையும் காண்க தொகு

சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு தொகு

  1. Germplasm Resources Information Network (GRIN) (1987-04-28). "Taxon: Aerva lanata (L.) Juss. ex Schult". Taxonomy for Plants. USDA, ARS, National Genetic Resources Program, National Germplasm Resources Laboratory, Beltsville, Maryland. Archived from the original on 2011-06-29. பார்க்கப்பட்ட நாள் 2008-04-27.
  2. Flora of North America. Aerva lanata (Linn.) Juss. ex J.A. Schultes. பக். Page 31. http://www.efloras.org/florataxon.aspx?flora_id=5&taxon_id=242426440. பார்த்த நாள்: 2008-04-27. 
  3. "Aerva lanata (L.) Juss. ex Schult. record n° 177". African Plants Database. South African National Biodiversity Institute, the Conservatoire et Jardin botaniques de la Ville de Genève and Tela Botanica. Archived from the original on 2007-10-12. பார்க்கப்பட்ட நாள் 2008-04-27.
  4. டாக்டர் வி. விக்ரம் குமார் (9 சூன் 2018). "சிறுபீளையின் பெரும்பயன்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2018.
  5. குரீஇப் பூளை – குறிஞ்சிப்பாட்டு 72
  6. நெடுங்குலைப் பூளைப் பூவின் அன்ன குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி - பெரும்பாணாற்றுப்படை 192
  7. வளிமுனைப் பூளை - அகநானூறு 199-10
  8. வேறுபல் பூளையோடு உழிஞை சூடி - பட்டினப்பாலை 235
  9. மற்றை, அணிப்பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து - கலித்தொகை 138, 140-4
  10. கரும்பின் கணைக்கால் வான்பூ கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர … அற்சிரம் வந்தன்று - அகநானூறு 217-5
  11. வெருகின், பூளை அன்ன பொங்கு மயில்ப் பிள்ளை - அகநானூறு 297
  12. மடப்பிணை, பூளை நீடிய வெருவரு பறந்தலை வேளை வெண்பூ கறிக்கும் ஆள் இல் அத்தம். - புறநானூறு 23
  13. சிலப்பதிகாரம் 22-69

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aerva lanata
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூளை_(செடி)&oldid=3862527" இலிருந்து மீள்விக்கப்பட்டது