பூவாலி
பூவாலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
பெருவகுப்பு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | Opisthopterus tardoore
|
இருசொற் பெயரீடு | |
Opisthopterus tardoore (Cuvier, 1829) | |
வேறு பெயர்கள் | |
Opisthopterus tartus Zugmayer, 1913 |
பூவாலி அல்லது பூவாளி (Opisthopterus tardoore [1]) என்பது ஒரு வகை கடல் மீன் ஆகும். இது 1829 இல் குவியர் என்பவரால் முதலில் விவரிக்கப்பட்டது. [2] இது ஓபிஸ்டோப்டெரஸ் டார்டூர் ஓபிஸ்டோப்டெரஸ் இனத்தைச் சேர்ந்தது, மற்றும் பிரிஸ்டிகாஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. [1][3] இது போன்ற பட்டியலிடப்பட்ட இனங்கள் இல்லை. [1]
இதன் அறிவியல் பெயரின் முன் பகுதியான Opisthopterus என்பது Opisthe மற்றும் pteron என்ற இரு கிரேக்க மொழிச் சொற்கிளின் சேர்கையில் இருந்து உருவாக்கப்பட்டது. Opisthe என்பதற்கு பின்புறம் என்றும் pteron என்பது சிறகு அலது துடுப்பு பொருள் ஆகும். அதாவது பின்புறம் நீண்ட துடுப்பைக் கொண்டது என்று பொருள் கொள்ளலாம். 20 செ.மீ. வரை வளரக்கூடிய இந்த மீன்களின் பின்பாக அடிப்பக்கத்தில் 51 முதல் 63 வரையிலான மென் கதிர்களைக் கொண்ட அகன்ற துடுப்பு அமைந்துள்ளது.
விளக்கம்
தொகுஇந்த மீனின் உடல் தட்டையாகவும், பெரிய கண்களுடன் இருக்கும். மீனின் முன்பகுதி வயிறு நன்கு வீங்கி இருக்கும். செவுள் திறப்பின் அருகே கருப்பு நிற திட்டு காணப்படும். இந்த மீனின் கீழ் தாடையானது மேல் தாடையைவிட நீண்டு மேல் நோக்கி இருக்கும். கன்னத்தில் உள்ள துடுப்பு ஏறக்குறைய தலையின் நீளத்துக்கு இருக்கும். இதன் முதுகு துடுப்பு மிகவும் சிறியதாக இருக்கும்.
இவை அரபிக் கடலின் தென்பகுதி, ஓமன் வளைகுடா, சென்னைக் கடல் பகுதி, அந்தமான், மியான்மர், தாய்லாந்து, பினாங்கு தீவுப் பகுதிகளில் கரையோரங்களில் காணப்படுகிறது.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Roskov Y., Kunze T., Orrell T., Abucay L., Paglinawan L., Culham A., Bailly N., Kirk P., Bourgoin T., Baillargeon G., Decock W., De Wever A., Didžiulis V. (ed) (2019). "Species 2000 & ITIS Catalogue of Life: 2019 Annual Checklist". Species 2000: Naturalis, Leiden, the Netherlands. ISSN 2405-884X. TaxonID: 42895491. Archived from the original on 2019-12-18. பார்க்கப்பட்ட நாள் 2019-11-11.
{{cite web}}
:|author=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ Department of Fisheries Malaysia (2009) Valid local name of Malaysian marine fishes. , Department of Fisheries Malaysia. Ministry of Agriculture and Agro-based Industry. 180 p.
- ↑ Froese R. & Pauly D. (eds). (2019). FishBase (version Feb 2018). In: Species 2000 & ITIS Catalogue of Life, 2019 Annual Checklist (Roskov Y., Ower G., Orrell T., Nicolson D., Bailly N., Kirk P.M., Bourgoin T., DeWalt R.E., Decock W., Nieukerken E. van, Zarucchi J., Penev L., eds.). Digital resource at www.catalogueoflife.org/annual-checklist/2019. Species 2000: Naturalis, Leiden, the Netherlands. ISSN 2405-884X.