பெக்கெரல் விளைவு

பெக்கெரல் விளைவு (Bequerel effect) என்பது மின் பகுபொருளொன்றில் இரு ஒரே மாதிரியான மின்முனைகளை அமிழ்த்தி வைத்து, அம்மின்முனைகளை வெளிச்சுற்றில் இணைத்து ஒரு மின்முனையில் ஒளி விழுமாறு செய்தால் (irradiate) வெளிச்சுற்றில் மின்சாரம் பாயும் நிகழ்வு ஆகும்.

அலக்சாந்தர் எட்மண்ட் பெக்கெரல் (1820- 1891) என்ற பிரான்சிய நாட்டு இயற்பியலாளர் கதிரவனின் நிறமாலை, மின்னியல் காந்த இயல் மற்றும் ஒளிஇயல் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார். ஒளிமின்னழுத்த விளைவு (Photo voltaic effect ) இவரால் கண்டுணுரப்பட்டது. 1839-ல் சூரிய மின்கலம் செயல்படும் விதத்தினை விளக்கினார். ஒளிர்தல் பற்றிய ஆய்வினையும் மேற்கொண்டிருந்தார். இவரின் தந்தையாரின் பெயர் அண்டோய்ன் சீசர் பெக்கெரல். மேலும் இவர் கதிரியக்கம் கண்டுபிடித்த என்றி பெக்கெரலின் தந்தையுமாவார்.

உசாத்துணைகள் தொகு

  • R.Williams 1960-Bequerel photo voltaic effect-journal of Chemical Physics
  • 1996- H. bequerel the discovery of radioactivity.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெக்கெரல்_விளைவு&oldid=1567998" இலிருந்து மீள்விக்கப்பட்டது