பெங்களூர் சட்ட அருங்காட்சியகம்
இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் உள்ளது.
பெங்களூர் சட்ட அருங்காட்சியகம் (Law Museum Bangalore) இந்தியாவின் கருநாடக மாநிலம் பெங்களுரில் சட்டத் தொழிலுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஓர் அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகம் கர்நாடகாவில் சட்டம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் வளர்ச்சியை ஆவணப்படுத்துகிறது. இந்திய அரசியலமைப்பின் அசல் அச்சின் ஒரு பகுதியை பெங்களூர் சட்ட அருங்காட்சியகம் காட்சிப்படுத்துகிறது.[1] நவம்பர் 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சட்ட அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சிரியாக் இயோசப் இந்த யோசனையின் பின்னணியில் இருந்தார்.[2] ஒரு புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்படும் என்ற திட்டத்துடன் 2012 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Museums | District Bengaluru Urban, Government of Karnataka | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-08.
- ↑ "Law Museum Bangalore Karnataka". travel2karnataka.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-08.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.