பெங் லியென்

பெங் லியென் (Peng Liyuan, எளிய சீனம்: மரபுவழிச் சீனம்: 彭麗媛பின்யின்: Péng Lìyuán; பிறப்பு : நவம்பர் 20, 1962) புகழ்பெற்ற சீன நாட்டார் இசைப் பாடகரும் தற்போதைய துணை அரசுத் தலைவர் சீ சின்பிங்கின் இரண்டாவது துணைவியாரும் ஆவார். சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியாக சீனத் தொலைக்காட்சியில் காட்டப்பட்டு வந்த சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ்பெற்றவர்.[1] நாடெங்கும் நடந்த இசைப்போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளைப் பெற்றவர்.[1]

பெங் லியென்
Peng Liyuan.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்புநவம்பர் 20, 1962 (1962-11-20) (அகவை 60)
பிறப்பிடம்யுங்செங் வட்டம், சான்டொங், சீன மக்கள் குடியரசு
இசை வடிவங்கள்சீன நாட்டார், ஓபரா
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1982–நடப்பு
இணையதளம்பெங் லியென்னின் வலைத்தளம்

சின்பிங் சியாமென் நகர துணை மேயராக இருந்த போது, லி யென்னைத் திருமணம் செய்து கொண்டார்.[2] சீனாவின் மக்கள் விடுதலைப் படையில் குடிசார் உறுப்பினராக உள்ள இவருக்கு மேஜர் ஜெனரலுக்கு இணையானப் பதவி வழங்கப்பட்டுள்ளது.[1]

சான்றுகோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 Page, Jeremy (February 13, 2012, 5:55 PM HKT). "Meet China's Folk Star First Lady-in-Waiting". The Wall Street Jorunal. 07 November 2012 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)
  2. "சீன புதிய ஜனாதிபதியின் மனைவி பிரபல பாடகி". Lankasri world. 16 நவம்பர் 2012. 16 நவம்பர் 2012 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெங்_லியென்&oldid=3577880" இருந்து மீள்விக்கப்பட்டது