பெஞ்ச் தேசியப் பூங்கா
பெஞ்ச் தேசியப் பூங்கா சியோனி மாவட்டத்தில் 1975 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.[2] இப்பூங்கா 257.26 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது.[1] அண்மை நகரம் சியோனி, பூங்காவிலிருந்து 50 கி.மீ. தூரத்திலுள்ளது. இதன் வானூர்தி நிலையமாகவும், தொடருந்து நிலையமாகவும் நாக்பூர் இருக்கிறது. பூங்காவைப் பார்ப்பதற்கு மார்ச்சிலிருந்து ஜூன் வரை பொருத்தமான காலம் ஆகும். இங்கு ஒய்வில்லங்கள் ஐந்து உள்ளன.[3]
பெஞ்ச் தேசியப் பூங்கா | |
---|---|
இந்திரா பிரியதர்ஷினி தேசியப் பூங்கா | |
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | மத்தியப் பிரதேசம், இந்தியா |
அருகாமை நகரம் | சியோனி |
ஆள்கூறுகள் | 21°40′17.76″N 79°18′11.88″E / 21.6716000°N 79.3033000°E |
பரப்பளவு | 257.26 km2 (99.33 sq mi)[1] |
நிறுவப்பட்டது | 1975 |
நிருவாக அமைப்பு | மாநில வனத்துறை |
வலைத்தளம் | penchtiger.co.in |
இப்பூங்காவில் வறண்ட இலையுதிர்காடுகளும் புலிகளும் பல்வகையான மான்களும் பறவைகளும் உள்ளன.[4] இங்கு வேங்கை, சோம்பற்கரடி, சாம்பர், கவரிமான், சீதல், குரைக்கும் மான், நாற்கொம்பன், காட்டுநாய், வராகம் முதலிய விலங்குகள் காணப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை 44 இல் பௌனியிலிருந்து இப்பூங்காவைச் சென்றடையலாம். இப்பூங்காவிற்கு துரியா, கர்மஜ்கிரி என்ற இரு நுழைவாயிற்கள் உள்ளன.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 World Database on Protected Areas (2019). "Pench National Park". Protected Planet.
- ↑ "Penchtiger.co.in".
- ↑ இந்தியாவின் தேசிய பூங்காக்கள், ஆர். எஸ். பிஷ்ட்
- ↑ "Birds of Pench". www.inditales.com. 22 August 2016. பார்க்கப்பட்ட நாள் 5 March 2019.
- ↑ "Experiences at Pench national park – a blog". www.imvoyager.com. 15 October 2018. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.
வெளிமாவட்டங்கள்
தொகு- "Discover Pench Wildlife". Pench National Park.