பெண்களுக்கான அரசு உடற்கல்வி கல்லூரி
பெண்களுக்கான உடற்கல்வி அரசு கல்லூரி என்பது மேற்கு வங்காளத்தின் தின்கட்டாவில் 1985 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பெண்களுக்கான உடற்கல்வி கல்லூரியாகும். இக்கல்லூரி கூச் பெகார் பஞ்சனன் பர்மா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]
அரசு உடற்கல்வி கல்லூரியின் இரவுப்பதிவு | |
வகை | விளையாட்டு மற்றும் உடற்கல்வி கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1985 |
சார்பு | கூச் பெஹர் பஞ்சனன் பர்மா பல்கலைக்கழகம், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் |
அமைவிடம் | தின்ஹாடா, புடிமாரி , , , 736135 , 26°09′04″N 89°27′48″E / 26.1512259°N 89.4632494°E |
வளாகம் | கிராமப்புறம் |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
வரலாறு
தொகு1985 ஆம் ஆண்டு மேற்கு வங்க அரசின் அப்போதைய மாண்புமிகு அமைச்சர் மறைந்த திரு கமல் குஹா அவர்களின் முயற்சியால் ஆசிரியர்களுக்கான கல்வியை வழங்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டதே இக்கல்லூரியாகும். மேற்கு வங்காள அரசாங்கத்தின் ஒரே ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியான இது, ஆரம்பத்தில் வடக்கு வங்க பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, பின்னர் 2015 ஆம் ஆண்டில் புதிதாக நிறுவப்பட்ட கூச் பெகார் பஞ்சனன் பர்மா பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டது. அதே ஆண்டில் 100 மாணவர்களை உள்வாங்கும் திறனுடன் என்சிடிஈயின்(NCTE) திருத்தப்பட்ட அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. [2]
அமைவிடம்
தொகுமேற்கு வங்காளத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள எல்லை நகரமான தின்ஹாட்டாவை ஒட்டிமிகவும் வசீகரமான இயற்கை அமைப்பிற்கு மத்தியில் அமைந்துள்ளது, இதன் மேற்குப் பகுதியில் டீஸ்டா நதி ஓடுகிறது. மேலும் இதன் முழுப் பகுதியும் பக்ஸாவின் பசுமையான சில்வன் காடுகளால் சூழப்பட்டுள்ளது.