பெண்கள் சந்திப்பு

பெண்கள் சந்திப்பு என்பது பெண்கள் மனம்விட்டுப் பேசுவதற்கான தனித்த ஒரு வெளியின் அவசியத்தை உணர்ந்த புகலிடப் பெண்களின் முயற்சியில் 1990 இல் சேர்மனியின் கேர்ண் நகரில் உருவாக்கம் பெற்ற பெண்களின் ஒரு சந்திப்பு நிகழ்வாகும். இச்சந்திப்பானது ஆரம்பகாலங்களில் சேர்மனியில் மட்டுமே நடைபெற்று வந்தது. காலப்போக்கில் ஐரோப்பாவின் மற்றைய நாடுகளுக்கும், கனடாவிற்கும் என சற்று விரிவடைந்தது. சுமார் 25 வருடங்களாக தொடர்ந்து வரும் இப் பெண்கள் சந்திப்பானது 2014 வரை 31 சந்திப்புக்களை நிகழ்த்தியுள்ளது.

பேசுபொருள்கள்

தொகு
 • பெண்கள் மீதான குடும்ப வன்முறைகள்
 • மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பெண்களின் அவலம்

பெண்கள் சந்திப்பு இடம்பெற்ற நாடுகள்

தொகு
 • செருமனி, காரளசிறூகே - 2002
 • பிரான்சு - 23ஆவது பெண்கள் சந்திப்பு - 9.10.2004-10.10.2004
 • இலண்டன் - 24ஆவது பெண்கள் சந்திப்பு - 2005
 • பிரான்சு - 26ஆவது பெண்கள் சந்திப்பு
 • கனடா - 27ஆவது பெண்கள் சந்திப்பு - 2008
 • சுவிசு - 28ஆவது பெண்கள் சந்திப்பு - 2009 [1]
 • செருமனி, பேர்லின் - 29ஆவது பெண்கள் சந்திப்பு - 11.12.2010
 • பிரான்சு - 30ஆவது பெண்கள் சந்திப்பு- 12.10.2013
 • இலண்டன் - 31ஆவது பெண்கள் சந்திப்பு - 2014

பெண்கள் சந்திப்பு பற்றிய கருத்துகள்

தொகு

24 வது பெண்கள் சந்திப்பு

தொகு

24 வது பெண்கள் சந்திப்பு ஒக்டோபர் 2005 இல் 15,16ம் திகதிகளில் இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தலைமையில் லண்டனில் நடைபெற்றது. இச் சந்திப்பில் இலங்கை, இந்தியா, கனடா, சுவிஸ், ஜெர்மனி, பிரான்ஸ், இலண்டன், கொலண்ட் ஆகிய நாடுகளிலிருந்து 45க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டிருந்தனர். எழுத்தாளர்கள், நாடக குறும்பட தயாரிப்பாளர்கள், ஓவியத்துறையைச் சாந்தவர்கள், கவிஞர்கள் உள்ளடங்கலாக ஆர்வலர்கள் சிலரும் கலந்து கொண்டனர். சிறப்பு பங்களிப்பாளர்களாக இலங்கையிலிருந்து ஓவியையும், எழுத்தாளரும், தென்கிழக்காசிய பெண்கள் அமைப்பின் இலங்கைக்கான தலைமைப் பதவியை வகிப்பவருமான கமலா வாசுகி, மற்றும் தினக்குரல் பத்திரிகையின் பெண்கள் பகுதி பதில் ஆசிரியரும், ஊடகவியலாளருமான தேவகெளரி ஆகியோரும் இந்தியாவிலிருந்து கவிஞரும், பாரதி இலக்கிய சங்கத்தின் செயலாளருமான திலகபாமாவும் இச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்சான்றுகள்

தொகு
 1. http://www.padippakam.com/document/Pennkal/003016.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்கள்_சந்திப்பு&oldid=3657702" இலிருந்து மீள்விக்கப்பட்டது