பெத்ரோ அமெரிக்கோ

பெத்ரோ அமெரிக்கோ டெ பிகெரேத்தோ இ மெலோ (Pedro Américo de Figueiredo e Melo, 29 ஏப்ரல் 1843 – 7 அக்டோபர் 1905) பிரேசிலின் மிக முக்கியமான ஓவியக் கலை கல்வியாளர்களில் ஒருவராவார். இவர் எழுத்தாளராகவும் ஆசிரியராகவும் இருந்தார்.

பெத்ரோ அமெரிக்கோ
தன்னோவியம் (c. 1895)
பிறப்பு(1843-04-29)29 ஏப்ரல் 1843
அரையா, பிரேசில் பேரரசு
இறப்பு7 அக்டோபர் 1905(1905-10-07) (அகவை 62)
புளோரன்சு, இத்தாலி இராச்சியம்
தேசியம்பிரேசிலியன்
அறியப்படுவதுஓவியர்

வாழ்க்கை வரலாறு தொகு

 
காதல், கல்வி தேவதைகள் சூழ இரவு

இம்பீரியல் நுண்கலைக் கழகத்தில் (அகாடெமியா இம்பீரியல் டெ பெலாசு ஆர்டெசு) உதவித்தொகை கிடைத்ததால் 1854இல் இரியோ டி செனீரோவிற்கு இடம் பெயர்ந்தார். பின்னர் மேலும் கற்பதற்காக ஐரோப்பாவில் பாரிசின் இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்சில் சேர்ந்தார். அங்கு ஜீன் ஆகஸ்டே டொமினிக் இன்கிரெஸ், இப்போலைட் பிளான்டிரின், கார்ல்-ஓரேசு வெர்னெட் போன்றோரின் மாணாக்கராக இருந்தார். பல பாராட்டுக்களுக்கிடையே தனது முனைவர் பட்டத்தை 1868இல் பிரெசெல்சு பல்கலைக்கழக்கத்தில் பெற்றார்.

பிரேசிலுக்குத் திரும்பிய பிறகு, பிரேசிலின் மிகவும் அறியப்பட்ட கலைப்படைப்பை படைத்தார்; போர்த்துக்கல்லிடமிருந்து பிரேசில் விடுதலை பெற்றதை இளவரசர் பெட்ரோ அறிவித்த தருணத்தை சித்தரிக்கும் விடுதலை அல்லது வீரமரணம் என்ற ஓவியத்தை வரைந்தார். இந்த ஓவியமே பல்லாண்டுகளாக பிரேசிலின் துவக்கப்பள்ளி வரலாற்றுப் பாடநூல்களில் இடம் பெற்று வந்துள்ளது.

இத்தாலியின் புளோரன்சு|புளோரன்சில் வாழ்ந்த வண்ணம் இரியோ டி செனீரோவிற்கு அடிக்கடி பயணித்த பெத்ரோ ஆசிரியராகவும் கலை வரலாற்றியலாளராகவும் பணி புரிந்தார். 1889இல் பிரேசிலியக் குடியரசு அறிவிக்கப்பட்ட பின்னர் தேசிய சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காட்சிக்கூடம் தொகு

மேற்சான்றுகள் தொகு

  • Pedro Américo. Encyclopaedia Itaú Cultural. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்ரோ_அமெரிக்கோ&oldid=2714714" இலிருந்து மீள்விக்கப்பட்டது