பெத்லகேமின் விண்மீன்

கிறித்தவப் பாரம்பரியப்படி பெத்லகேமின் விண்மீன் அல்லது கிறித்துமசு விண்மீன்[1] என்பது கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுக்கு இயேசுவின் பிறப்பை சுட்டிக்காட்டி அவரின் இல்லத்துக்கு வழி காட்டிய விவிலியத்தில் இடம் பெறும் விண்மீனைக் குறிக்கும். இவ்விண்மீன் விவிலியத்தில் ஆண்டவரின் விண்மீன் என அழைக்கப்படுகின்றது.[2]

பல கிறித்தவர்கள் இந்த விண்மீன் மெசியாவின் வருகையின் முன் அடையாளமாகக் காண்கின்றனர். இந்நிகழ்வு ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா என பல கிறித்தவப்பிரிவுகளில் கொண்டாடாப்படுகின்றது.

பல வானியல் அறிஞர்கள் இந்த விண்மீன் மீயொளிர் விண்மீன் வெடிப்பு, வால்வெள்ளி அல்லது வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒன்றை ஒன்று கடக்கும் நிகழ்வாக இருக்கலாம் என என்னுகின்றனர்.[3][4]

விவிலியத்தில் தொகு

இந்த நிகழ்வு மத்தேயு நற்செய்தியில் மட்டுமே இடம் பெறுகின்றது. இதன்படி கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, ஏரோது அரசனிடம் 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களை ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் ஆராய்ந்து மீக்கா நூலில் உள்ளது படி மெசியா யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறக்க வேண்டும் என அறிவித்ததால் ஞானிகளை அங்கே அனுப்பி வைத்தான். முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்றது. அங்கே வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.[5]

 
நவம்பர் 12,கி.மு 7 அன்று மாலை 6 மணி முதல் இரவு 9:30 மணி முடிய ஜெருசலேமின் வானத்தின் தெற்கு திசையின் அமைப்பு

ஆதாரங்கள் தொகு

  1. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  2. Mat.2:1-23
  3. "Star of Bethlehem." Cross, F. L., ed. The Oxford dictionary of the Christian church. New York: Oxford University Press. 2005
  4. Lua error in Module:Citation/CS1 at line 1539: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  5. Matthew 2:11–12

வெளி இணைப்புகள் தொகு

பெத்லகேமின் விண்மீன்
இயேசுவின் வாழ்வும் பணிகளும்
முன்னர்
ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல்
  புதிய ஏற்பாட்டு 
நிகழ்வுகள்
பின்னர்
ஞானிகள் குழந்தை இயேசுவை வணங்குதல்