பெனாரி வினை

பெனாரி வினை (Benary reaction) என்பது ஒரு கரிம வேதியியல் வினையாகும். 1931 ஆம் ஆண்டில் எரிச் பெனாரி[1][2] இவ்வினையைக் கண்டறிந்தார். β-(N,N- ஈரல்கைலமீனோ)-வினைல் கீட்டோன்கள் கிரிக்னார்டு வினைப்பொருளுடன் 1,4 கூடுகை வினை புரிந்து, β- நிறைவுறா கீட்டோன்கள், α,β- நிறைவுறா ஆல்டிகைடுகள் மற்றும் α,β- நிறைவுறா எசுத்தர்கள், பல-நிறைவுறா கீட்டோன்கள் மற்றும் ஆல்டிகைடுகள் ஆகியனவற்றைக் கொடுக்கின்றன[3]. இவ்வினையில் தோன்றும் வினையிடை பொருள் நீராற்பகுப்பு செய்யப்படுகிறது. ஈரல்கைலேற்ற அமீன் நீக்கம் செய்யப்ப்படுகிறது.

பெனாரி வினையின் வினை வழிமுறை

மேற்கோள்கள் தொகு

  1. Benary, Erich (1930). "Über die Einwirkung von Ammoniak und Aminen auf einige aliphatische und aromatische Oxymethylen-ketone". Berichte der deutschen chemischen Gesellschaft (A and B Series) 63 (6): 1573. doi:10.1002/cber.19300630641. 
  2. Benary, Erich (1931). "Über eine Bildungsweise ungesättigter Ketone aus substituierten Amino-methylenketonen". Berichte der deutschen chemischen Gesellschaft (A and B Series) 64 (9): 2543. doi:10.1002/cber.19310640935. 
  3. Näf, Ferdinand; Decorzant, René (1974). "A Stereospecific Synthesis of (E, Z)-α, β-γ, δ-Diunsaturated Aldehydes, Ketones, and Esters Using the Benary Reaction". Helvetica Chimica Acta 57 (5): 1309. doi:10.1002/hlca.19740570507. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனாரி_வினை&oldid=2747464" இலிருந்து மீள்விக்கப்பட்டது