பென்னி குரியகோஸ்

இந்திய கட்டிடவியலாளர்

பென்னி குரியகோஸ் (Benny Kuriakose) (25 மே 1962) என்பவர் கேரளத்தில் பிறந்த கட்டவியலாளர் ஆவார். லாரி பேக்கரிடம்[1] கட்டிடக் கலையின் அடிப்படைகளைக் கற்ற இவர், 1985 ஆம் ஆண்டு முதல், லாரி பேக்கர் பாணியில் குறைந்த செலவிலான வீடுகள் கட்டத்துவங்கினார், 1992 இல் இவர் நடிகர் மம்மூட்டியின் இல்லத்தை கட்டினார்.[2] பாதுகாப்பான கட்டடங்களுக்கும், புதிய கட்டடங்களின் வடிவமைப்பமைக்குமான வேர்களை தென்னிந்தியாவின் வட்டார கட்டிடக்கலையில் இருந்து எடுத்துக் கொண்டார். இவர் தன் கட்டுமான வடிவமைப்புக்கு மரம், கல், செங்கல் போன்ற இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதற்காக அறியப்படுகிறார். அவர் பெரும்பாலும் சென்னை மற்றும் கேரளத்தில் தன்பணிகளை மேற்கொண்டு வருகிறார். [3] இவரது ஆலோசனை நிறுவனமானது சென்னையில் இயங்கி வருகிறது.

பென்னி குரியகோஸ்
Dr. Benny Kuriakose

Dr. Benny Kuriakose
Personal information
பெயர் பென்னி குரியகோஸ்
Dr. Benny Kuriakose
தேசியம் இந்தியர்
பிறந்த தேதி (1962-05-25)25 மே 1962
பிறந்த இடம் கேரளம்
Work
முக்கிய கட்டிடங்கள் {{{significant_buildings}}}
முக்கிய திட்டங்கள் முசிறிப் பாரம்பரியத் திட்டம், கேரளம்
ஆழப்புழை பாரம்பரியத் திட்டம், கேரளம்
தட்சிண சித்ரா, சென்னை

பணிகள் தொகு

  • லாரி பேக்கரின் சென்னை தட்சிண சித்ரா அருங்காட்சியகத் திட்டத்தை அவரின் மறைவுக்குப் பிறகு, இவர் செயல்படுத்தினார்.
  • நாகப்பட்டினத்தில் ஆழிபேபேரலேயால் பாதிக்கப்பட்ட தரங்கம்பாடி, சின்னாங்குடி மீனவ கிராமங்களில் சுனாமி மறுவாழ்வுத் திட்டத்தில் 1000 வீடுகளை வடிவமைத்திருக்கிறார்.
  • 2002 இல் குஜராத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட புஜ் பகுதியிலும், லத்தூரிலும் மறுவாழ்வுத் திட்டத்தில் வீடுகளை வடிவமைத்திருக்கிறார்.
  • கேரளாத்தின் பிரபல முசிறிப் பாரம்பரியத் திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. "How Benny Kuriakose, heir to the legendary Indian architect Laurie Baker, keeps it real". Grin. 2017-09-08. https://grin.news/benny-kuriakose-the-heir-to-the-legendary-architect-laurie-baker-e8189d32112d. 
  2. Elias, Esther (2014-08-01). "Future-facing design" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/metroplus/futurefacing-design/article6272325.ece. 
  3. என். கௌரி (6 அக்டோபர் 2018). "காந்தியக் கட்டிடக் கலைஞர்கள்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 8 அக்டோபர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்னி_குரியகோஸ்&oldid=3577907" இலிருந்து மீள்விக்கப்பட்டது