பெயரீட்டுத் தரநிலை

உயிரியல் வகைப்பாட்டில், பெயரீட்டுத் தரநிலை என்பது, பெயரீட்டுப் படிநிலையில், ஒரு உயிரினம் அல்லது உயிரினக் குழுக்கள் இருக்கும் சார்பு இடத்தைக் குறிக்கும். இனம், பேரினம், குடும்பம், வகுப்பு, இராச்சியம் போன்றவை பெயரீட்டுத் தரநிலைக்கு எடுத்துக்காட்டுகள்.

செந்நரியின் பெயரீட்டுத் தரநிலை வரிசை, படத்தில் காட்டப்படுகிறது (Vulpes vulpes)[1]

ஒரு குறித்த தரநிலைக்குக் கீழேயுள்ள தரநிலையில் உள்ள இனங்கள் குறிவான பொதுமைப் பண்பும் கூடிய தனிப்பண்புகளும் கொண்டவையாக இருக்கும். அதே வேளை அதற்கு மேலேயுள்ளவை கூடிய பொதுமைப் பண்புகளைக் கொண்டவை. அவை பொது மூதாதைகளிடம் இருந்து பெற்ற இயல்புகளின் ஊடாக ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையாக உள்ளன. எந்தவொரு உயிரினத்தையும் பொறுத்தவரை இனத் தரநிலையும், அதன் பேரினம் குறித்த விளக்கமும் அடிப்படையானவை. அதாவது, ஒரு குறித்த உயிரினத்தை அடையாளம் காட்டுவதற்கு முதல் இரு தரநிலை தவிர்ந்த பிற தரநிலைகளைக் குறிப்பிடுவது பொதுவாகத் தேவையற்றது.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெயரீட்டுத்_தரநிலை&oldid=3529711" இருந்து மீள்விக்கப்பட்டது