பெரிக்கிளீசு

பண்டைய கிரேக்க அரசியல்வாதி, பேச்சாளர் மற்றும் ஏதென்சின் தளபதி

பெரிக்கிளீசு (Pericles, ( கிரேக்கம்: Περικλῆς; கி.மு. 495 – 429 ) என்பவர் ஏதென்சின் பொற்காலத்தின் போது இருந்த ஒரு கிரேக்க அரசியல்வாதி மற்றும் தளபதியாக ஆவார். இவர் ஏதெனியன் அரசியலில், குறிப்பாக கிரேக்க பாரசீகப் போர்கள் மற்றும் பெலோபொன்னேசியப் போருக்கு இடையே முக்கியமானவராகவும் செல்வாக்கு மிக்கவராகவும் இருந்தார், மேலும் சமகால வரலாற்றாசிரியரான துசிடிடீஸ் அவர்களால் "ஏதென்ஸின் முதல் குடிமகன்" என்று பாராட்டப்பட்டார்.[1] பெரிகல்ஸ் டெலியன் கூட்டணியை ஏதெனியப் பேரரசாக மாற்றினார். மேலும் பெலோபொன்னேசியப் போரின் முதல் இரண்டு ஆண்டுகளில் தனது நாட்டு மக்களை வழிநடத்தினார். ஏறக்குறைய கிமு 461 முதல் 429 வரை ஏதென்சை இவர் வழிநடத்திய காலகட்டம், சில நேரங்களில் "பெரிக்கிள்ஸ் காலம்" என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இவ்வாறு குறிப்பிடப்பட்ட காலகட்டம் பாரசீகப் போர்களின் முந்தைய காலங்களையும் அல்லது அடுத்த நூற்றாண்டின் பிற்பகுதியையும் உள்ளடக்கியது.

பெரிக்கிளீசு
"பெரிக்கிள்ஸ், சாந்திப்பஸின் மகன், ஏதெனியன்" என்ற கல்வெட்டைத் தாங்கிய பெரிக்கிள்சின் மார்பளவு. பளிங்கு சிலையின், உரோமானிய நகல் வாடிகன் அருங்காட்சியகங்கள்,
பிறப்புகி.மு 495
ஏதென்ஸ், கிரேக்கம்
இறப்புகி.மு. 429 ( 65 – 66 வயதில்)
ஏதென்ஸ், கிரேக்கம்
சார்புஏதென்சு
தரம்ஸ்ட்ராட்டெகாய்ஸ்
போர்கள்/யுத்தங்கள்சிசியோன் மற்றும் அகர்னானியாவில் போர் (கி.மு. 454 )
Second Sacred War (கி.மு. 448)
கலிபோலியிலிருந்து இருந்து காட்டுமிராண்டிகள் வெளியேற்றம் (கி.மு. 447)
சாமியான் போர் (கி.மு. 440)
பைசாந்தியம் முற்றுகை (கி.மு. 438)
பெலோபொன்னேசியன் போர் (கி.மு. 431–429)
துணை(கள்)மிலேட்டசின் அஸ்பாசியா
பிள்ளைகள்Paralus and Xanthippus
Pericles the Younger
உறவினர்சந்திபஸ் (தந்தை)
அக்ரிஸ்டே (தாய்)

பெரிக்கிளீசு கலை, இலக்கியத்தை ஊக்குவித்தார். மேலும் இவரது முயற்சிகளின் மூலம் ஏதென்ஸ் பண்டைய கிரேக்க உலகின் கல்வி மற்றும் கலாச்சார மையமாக புகழ் பெற்றது. இவர் தன் இலட்சியத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். அது பார்த்தினன் உட்பட அக்ரோபோலிசில் எஞ்சியிருக்கும் பெரும்பாலான கட்டமைப்புகளை உருவாக்கியது. இவரது இந்த திட்டங்கள் நகரை அழகுபடுத்தி, பாதுகாத்தது, அதன் பெருமையை வெளிப்படுத்தியது மற்றும் அதன் மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.[2] திறணாய்வாளர்கள் இவரை ஒரு ஜனரஞ்சகவாதி என்று அழைக்கும் அளவிற்கு ஏதெனியன் சனநாயகத்தை வளர்த்தார்.[3][4] பெரிக்கிள்ஸ், அவரது தாயார் வழியில், சக்திவாய்ந்த மற்றும் வரலாற்று செல்வாக்கு மிக்க அல்க்மேயோனிட் குடும்பத்தில் இருந்து வந்தவர். கிமு 429 இல் அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து, ஏதென்ஸ் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டார். இது எசுபார்த்தாவுடன் நீடித்த மோதலின் போது நகர அரசை பலவீனப்படுத்தியது.

துவக்ககால வாழ்க்கை

தொகு

பெரிக்கிளீசு 495 கி.மு., ஆண்டு கிரேக்கத்தின் ஏதென்சில் பிறந்தார் . [lower-greek 1] இவர் அரசியல்வாதியான சாந்திபசின் மகனாவார், அவர் கிமு 485-484 இல் ஆஸ்ட்ராசிசம் (நாடுகடத்தப்படுதல்) செய்யப்பட்ட போதிலும், ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மைக்கேல் போரில் கிரேக்க வெற்றிக்காக ஏதென்சு அணிக்கு தலைமைதாங்க ஏதென்சுக்குத் திரும்பினார். பெரிக்கிள்சின் தாயார், அகாரிஸ்டே, அல்க்மேயோனிடேயின் சக்திவாய்ந்த மற்றும் சர்ச்சைக்குரிய உன்னத குடும்பத்தைச் சேர்தவராக இருந்தார், மேலும் அவரது குடும்ப தொடர்புகள் சாந்திப்பசின் அரசியல் வாழ்க்கையைத் நன்முறையில் தொடங்குவதில் முக்கிய பங்கு வகித்தன. அகாரிஸ்டே சிசியோனின் சர்வாதிகாரியான கிளீஸ்தீனசின் கொள்ளுப் பேத்தியும், கிளீஸ்தீனஸ் மற்றும் ஏதெனிய சீர்திருத்தவாதியான கிளீஸ்தீனசின் மருமகளாவார்.[lower-greek 2][8] எரோடோட்டசு மற்றும் புளூடாக்கின் கூற்றுப்படி, பெரிக்கிள்ஸ் பிறப்பதற்கு சில இரவுகளுக்கு முன்பு, தான் ஒரு சிங்கத்தைப் பெற்றெடுப்பதாக அகாரிஸ்டே கனவு கண்டார்.மக்கெடோனின் இரண்டாம் பிலிப் தன் மகன் பேரரசர் அலெக்சாந்தர் பிறப்பதற்கு முன்பு இதேபோன்ற கனவு கண்டதாக செவிவழிக் கதைகள் கூறுகின்றன.[9][7] கனவின் ஒரு விளக்கமாக சிங்கத்தை மகத்துவத்தின் பாரம்பரிய அடையாளமாகக் கருதப்படுகிறது. ஆனால் கதையானது பெரிகிள்சின் வழக்கத்திற்கு மாறான பெரிய அளவிலான மண்டை ஓட்டைக் குறிக்கலாம், இது சமகால நகைச்சுவை நடிகர்களின் பிரபலமான இலக்காக மாறியது (அவரை "ஸ்கில்-ஹெட்" என்று அழைத்தார். ஸ்கில் அல்லது கடல் வெங்காயம்).[7][10] பெரிக்கிள்ஸ் எப்பொழுதும் தலைக்கவசம் அணிந்திருப்பதற்கு இந்த குறைபாடுதான் காரணம் என்று புளூட்டாக் கூறினாலும், இது அப்படியல்ல; தலைக்கவசம் உண்மையில் ஸ்டாடஜிஸ் (தளபதி) என்ற அவரது பதவி நிலையின் சின்னமாக இருந்தது.[11]

பெரிக்கிளீசு அகமண்டிஸ் (Ἀκαμαντὶς φυλή) பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இவரது ஆரம்ப ஆண்டுகள் அமைதியாக இருந்தன; உள்முக சிந்தனை கொண்ட இளம் பெரிகிள்ஸ் பொது வெளியில் சுற்றுவதைத் தவிர்த்தார், அதற்குப் பதிலாக தனது படிப்பிற்காக தனது நேரத்தை ஒதுக்க விரும்பினார்.[12]

இவரது பிரப்புத்துவ குடும்பமும், செல்வமும் இவரது விருப்பப்படி கல்வியில் முழுமையாக ஈடுபட சாதகமாக இருந்தது. இவர் அந்தக் காலத்து இசையாசிரியர்களிடம் இசையைக் கற்றுக்கொண்டார் (டாமன் அல்லது பைத்தோகிளைட்ஸ் அவருடைய ஆசிரியராக இருந்திருக்கலாம்)[13][14] மேலும் மெய்யியலுக்கு முக்கியத்துவம் கொடுத்த முதல் அரசியல்வாதியாக இவர் கருதப்படுகிறார்.[12] இவர் மெய்யிலாளர்களான புரோட்டகோரஸ், எலியாவின் சீனோ, அனாக்சகோரசு ஆகியோரிடம் நட்பைக் கொண்டிருந்தார். அனாக்சகோரசு, குறிப்பாக, நெருங்கிய நண்பராகி, இவரைப் பெரிதும் பாதித்தார்.[13][15] பெரிக்கிள்சின் சிந்தனை முறை மற்றும் சொல்லாட்சிக் கலை ஆகியவை அனக்சகோரசின் நடப்பால் பெற்றதாக இருக்கலாம். இவரது நாடறிந்த அமைதி பண்பு, சுயக்கட்டுப்பாடு ஆகியவை அனாக்சகோரசுவின் செல்வாக்கின் விளைவுகளாகவும் பெரும்பாலும் கருதப்படுகின்றது.[16]

கிமு 431 வரை அரசியல் வாழ்க்கை

தொகு

அரசியலில் நுழைவு

தொகு
 
பெரிகிள்சின் மார்பளவு சிலை, கிரேக்க மூலத்தின் உரோமானிய நகல், பிரித்தானிய அருங்காட்சியகம்

கி.மு. 472 வசந்த காலத்தில், கிரேட்டர் டியோனிசியா திருவிழாவிழான்போது பண்டைய கிரேக்க துன்பியல் நாடக ஆசிரியரான அஸ்கிலசின் பெர்சியன்ஸ் என்ற நாடகத்தை நடத்த பெரிக்கிள்ஸ் நிதியுதவி அளித்து நடத்தினார். இதன் வழியாக இவர் ஏதென்சின் பணக்காரர்களில் ஒருவர் என்பதை வெளிக்காட்டினார்.[17] அந்த நாடகமானது சலாமிஸ் போரில் தெமிஸ்டோக்ளீசின் புகழ்பெற்ற வெற்றிகுறித்தும் அவரது முடிவு குறித்த வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும், பழைய நினைவுகளைக் கிளறக்கூடியதாகவும் இருந்தது. அந்த நாடகத்தை பெரிக்கிள்ஸ்ன் தேர்வு செய்தது, இந்த இளம் அரசியல்வாதி தன் அரசியல் எதிரியான சிமோனுக்கு எதிராக தெமிஸ்டோக்கீசை ஆதரிப்பதைக் காட்டுகிறது என்று சைமன் ஹார்ன்ப்ளோவர் வாதிட்டார்.[18]

பெரிக்கிளீசு நாற்பது ஆண்டுகள் ஏதெனியர்களிடையே அரசியல் தலைமை வகிப்பவராக இருந்தார் என்று புளூடார்க் கூறுகிறார்.[19] அப்படியென்றால், பெரிக்கிள்ஸ் கிமு 460களின் தொடக்கத்திலில் - முப்பதுகளின் முற்பகுதியில் அல்லது நடுப்பகுதியில் தலைமைப் பதவியை அடைந்திருக்க வேண்டும். தலைமைப் பதவிக்கு வந்தபிறகு அடிக்கடி மக்கள் முன் தோன்றுவதைத் தவிர்த்தார். எடுத்துக்காட்டாக, இவர் அடிக்கடி விருந்துகளில் தோன்றுவதை தவிர்த்தார், சிக்கனமாக இருக்க முயற்சித்தார். சக குடிமக்களுக்கு தன்னை ஒரு முன்மாதிரியாகக் காட்ட முயன்றார்.

மாக்டோனியாவில் ஏதென்சின் நலன்களைப் பாதுகாக்க தவறியதாக குற்றம் சாட்டப்பட்ட பழமைவாதப் பிரிவின் தலைவரான சிமோனை, கிமு 463 இல், எதிர்த்து வாதிட்டவர்களில் பெரிக்கிள்ஸ் முன்னணியில் இருந்தார்.[20] அக்குற்றச்சாட்டுகளில் இருந்து சிமோன் விடுவிக்கப்பட்டாலும், அவரின் முக்கிய அரசியல் எதிரி பெரிக்கிள்ஸ் என்பதை இந்த மோதல் நிரூபித்தது.[21]

சீமோனை ஒதுக்குதல்

தொகு

கிமு 461 இல், சனநாயக ஆதரவுப் பிரிவின் தலைமை, ஒரு காலத்தில் அரசில் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக இருந்த ஏதெனியன் பிரபுத்துவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய அவையான அரியோபாகசை குறிவைத்து செயல்பட வேண்டிய நேரம் இது என்று முடிவு செய்தனர்.[5] சனநாயக ஆதரவாளர்களின் தலைவரும் பெரிக்கிள்சின் வழிகாட்டியுமான எபியால்ட்டீஸ், அரியோபாகசின் அதிகாரங்களைக் குறைக்க முன்மொழிந்தார். எக்லேசியா (ஏதெனியன் சட்டமன்றம்) எதிர்ப்பு இல்லாமல் எபியால்ட்டீசின் திட்டத்தை ஏற்றுக்கொண்டது.[22] இந்த சீர்திருத்தமானது "தீவிர சனநாயகத்தின்" ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.[5]

ஏதெனியன் அரசியலில் சனநாயகப் பிரிவினர் படிப்படியாக மேலாதிக்கம் பெற்றனர். மேலும் பெரிகிள்ஸ் பொதுமக்களைக் கவரும் வகையிலான ஜனரஞ்சகக் கொள்கையைப் பின்பற்றத் தயாராக இருந்தார். இவருக்குச் சொந்தமான கணிசமான செல்வத்தின் ஒரு பகுதியை செலவழித்து அதன் மூலம் பொதுமக்களின் ஆதரவைப் பெற்றார்.[20]

கிமு 461 இல், பெரிக்கிளீசு தன் அரசியல் எதிர்ப்பாளரை அரசியல் ரீதியாக ஆஸ்ட்ராசிசம் (நாடுகடத்துதல்) மூலம் ஒதுக்கிவைத்தலைப் பயன்படுத்தி சாதித்தார். எசுபார்த்தாவிற்கு உதவியதன் மூலம் சிமோன் தனது நகரத்துக்கு களங்கத்தை உருவாக்கினார் என்பது குற்றச்சாட்டு.[23]

சிமோனை நாடுகடத்தியப் பிறகு, பெரிக்கிள்ஸ் தொடர்ந்து ஜனரஞ்சக சமூகக் கொள்கையை ஊக்குவித்தார். [22] இவர் முதலில் ஒரு ஆணையை முன்மொழிந்தார். இதன்படி ஏழைகள் நாடக அரங்குகளில் நாடகங்களை பணம் செலுத்தாமல் பார்க்க அனுமதிக்கப்படவேண்டும். அவர்களை அனுமதிப்பதற்கான கட்டணத்தை அரசே ஏற்கும். பிற ஆணைகள் மூலம் இவர் கிமு 458-457 இல் அர்ச்சன் பதவி வகிப்பதற்கான சொத்து மதிப்பைக் குறைத்தார். மேலும் கிமு 454 க்குப் பிறகு சில காலத்திற்கு ஹீலியாயாவில் (ஏதென்சின் உச்ச நீதிமன்றம்) நீதிபதிகளாக பணியாற்றிய அனைத்து குடிமக்களுக்கும் தாராளமாக ஊதியத்தை வழங்கினார்.[24]

இவர் மேற்கொண்ட இத்தகைய நடவடிக்கைகள் ஏதெனியன் சனநாயகத்தின் படிப்படியான சீரழிவுக்கு இவரே பொறுப்பு என இவரை விமர்சிப்பவர்களால் குற்றம் சாட்டக் காரணமாயிற்று. கான்ஸ்டன்டைன் பாப்பரிகோபௌலோஸ் என்ற, ஒரு பெரிய நவீன கிரேக்க வரலாற்றாசிரியர், பெரிக்கிள்ஸ் அனைத்து சனநாயக நிறுவனங்களை விரிவாக்கவும், நிலைப்படுத்தலுக்கும் முயன்றார் என்று வாதிடுகிறார்.[25] அதன்படி, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியல் அமைப்புகள் மற்றும் பொது அலுவலகங்களில் பங்கேற்க அனுமதி வழங்கும் சட்டத்தை இவர் இயற்றினார், அவர்கள் அதற்கு முன்பு அவர்கள் தடை செய்யப்பட்டிருந்தனர்.[26]

சாமோன்சின் கூற்றுப்படி, தெமெக்கு உரிய சனநாயக அங்கிகாரத்தை அளிப்பது அவசியம் என்று பெரிக்கிள்ஸ் நம்பினார். அதில் பயன்படுத்தப்படாமல் உள்ள ஏதெனியன் சக்திக்கான ஆதாரத்தையும் ஏதெனியன் இராணுவ மேலாதிக்கத்தின் முக்கிய கூறாக இருப்பதையும் கண்டார்.[27] (தெமிஸ்டோக்ளீஸ் காலத்திலிருந்தே ஏதெனியன் அதிகாரத்தின் முதுகெலும்பாக இருந்த கடற்படையானது, கிட்டத்தட்ட முழுக்க முழுக்க தாழ்த்தப்பட்ட வகுப்பினரால் நிர்வகிக்கப்பட்டது.[28])

இதற்கு நேர்மாறாக, சனநாயக பரிணாம வளர்ச்சிக்கான தேவை எதுவும் இல்லை என்று சிமோன் நம்பினார். சனநாயகம் அதன் உச்சத்தை எட்டியுள்ளது மேலும் பெரிகிள்சின் சீர்திருத்தங்கள் ஜனரஞ்சகத்தின் முட்டுக்கட்டை நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பாபர்ரிகோபௌலோஸ் கூற்றின்படி, வரலாறு சிமோனின் கருத்தை நிரூபித்தது, ஏனெனில் பெரிக்கிள்சின் மரணத்திற்குப் பிறகு ஏதென்சு அரசியல் கொந்தளிப்பு மற்றும் வாய்வீச்சுகளின் படுகுழியில் வீழ்ந்தது. பெரிகள்சின் ஜனரஞ்சகக் கொள்கைகளின் விளைவாக நகரத்தின் பெருமை அழிந்துவிட்டது என்று பாபர்ரிகோபௌலோஸ் கூறுகிறார்.[25]

மற்றொரு வரலாற்றாசிரியரான ஜஸ்டின் டேனியல் கிங்கின் கூற்றுப்படி, தீவிர சனநாயகம் மக்களுக்கு தனித்தனியாக பயனளித்தது, ஆனால் அரசுக்கு தீங்கு விளைவித்தது.[29] ஆனால் இதற்கு மாறாக, வரலாற்றாளர் டொனால்ட் ககன், பெரிக்கிள்ஸ் நடைமுறைப்படுத்திய சனநாயக நடவடிக்கைகள் ஒரு அசைக்க முடியாத அரசியல் பலத்திற்கு அடிப்படையாக அமைந்தது என்று கருதுகிறார்.[30] எல்லாவற்றிற்கும் மேலாக, சிமோன் இறுதியாக புதிய ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டார் மேற்றும் புதிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கவில்லை, அவர் கிமு 451 இல் நாடுகடத்தலில் இருந்து திரும்பினார்.[31]

ஏதென்சின் தலைமைக்கு உயர்தல்

தொகு

கிமு 461 இல் எபியால்ட்சின் கொலையானது, பெரிக்கிளீசு தனது அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்வதற்கு வழி வகுத்தது.[lower-greek 3] கிமு 429 இல் இவர் இறக்கும் வரை அதிகாரத்தில் இருந்தார்.

முதல் பெலோபொன்னேசியன் போர்

தொகு
 
பெரிக்கிளீசு, அஸ்பாசியா, ஆல்சிபியாடீசு மற்றும் நண்பர்களுக்கு பார்த்தீனானின் ஃப்ரைஸைக் காட்டும் ஃபிடியாஸ் சர் லாரன்ஸ் அல்மா-தடேமா உருவாக்கிய படைப்பு, 1868, பர்மிங்காம் அருங்காட்சியகம் & ஓவியக் காட்சியகத்தில்

முதல் பெலோபொன்னேசியப் போரின் போது பெரிக்கிளீசு தனது முதல் இராணுவப் பயணங்களை மேற்கொண்டார். இது மெகாரா மற்றும் ஆர்கோசுடனான ஏதென்சின் கூட்டு மற்றும் எசுபார்த்தாவின் எதிர்வினையின் ஒரு பகுதியாக ஏற்பட்டது. கிமு 454 இல் இவர் சிசியோன் மற்றும் அகர்னானியாவைத் தாக்கினார்.[34] ஏதென்சுக்குத் திரும்புவதற்கு முன், கொரிந்து வளைகுடாவில் ஓனியாடியாவைக் கைப்பற்ற முயன்று இவர் தோல்வியுற்றார்.[35] கிமு 451 இல், சிமோன் நாடுகடத்தலில் இருந்து திரும்பினார் மற்றும் பெரிக்கிள்சின் முன்மொழிவையடுத்து எசுபார்த்தாவுடன் ஐந்து ஆண்டு போர்நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்தினார், இது பெரிக்கிள்சின் அரசியல் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது.[36] இதற்கு காரணம் பெலோபொன்னேசியர்கள் மற்றும் பாரசீகர்களுக்கு எதிரான மோதல்களின் போது சிமோனின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை பெரிக்கிள்ஸ் உணர்ந்திருக்கலாம்.

சிமோன் தனது அரசியில் எதிரிகளுடன் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக புளூடார்க் கூறுகிறார், அதன்படி பெரிக்கிள்ஸ் உள்துறை விவகாரங்களைக் கவனிப்பார் மற்றும் சிமோன் ஏதெனிய இராணுவத்தின் தலைவராக இருப்பார், வெளிநாட்டுத் போர்தொடர்களில் ஈடுபடுவார்.[33] இந்த ஒப்பந்தம் குறித்து ககனின் கருத்தின்படி, சிமோன் புதிய நிலைமைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டார் மற்றும் பெரிக்லியன் தாராளவாதம் மற்றும் சிமோனியன் பழமைவாதம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு அரசியல் இணைப்பை ஊக்குவித்தார்.[31]

450 களின் நடுப்பகுதியில், பாரசீகத்திற்கு எதிரான எகிப்திய கிளர்ச்சிக்கு உதவ ஏதெனியர்கள் ஒரு போரைத் தொடங்கினர், அவர்கள் நைல் வடிநிலத்தில் இருந்த ஒரு பாரசீக கோட்டையை நீண்டகாலம் முற்றுகையிடுவந்தனர். போர்த் தொடர் கடைசியில் பேரழிவில் முடிந்தது. முற்றுகையிட்ட ஏதெனியப் படை தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.[37] கிமு 451-450 இல் ஏதெனியர்கள் சைப்ரசுக்கு படைகளை அனுப்பினர். சைப்ரசில் சலாமிஸ் போரில் பாரசீகர்களை சிமோன் தோற்கடித்தார், ஆனால் கிமு 449 இல் நோயால் இறந்தார். பெரிக்கிள்ஸ் எகிப்து மற்றும் சைப்ரஸ் ஆகிய இரு நாடுகளிலும் போர்ப் பயணங்களை ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.[38]

இந்த காலகட்டத்தில் கால்லியாஸ் அமைதி உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது. இது கிரேக்கர்களுக்கும் பாரசீகர்களுக்கும் இடையிலான பகையை முடிவுக்குக் கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த உடன்படிக்கை குறித்து பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது, மேலும் அதன் விவரங்கள் மற்றும் பேச்சுவார்த்தை குறித்த செய்திகள் தெளிவற்றதாக உள்ளது.[39] ஏதென்சுக்கும் பாரசீகத்திற்கும் இடையிலான அமைதி உடன்பாடு முதன்முதலில் கிமு 463 இல் அங்கீகரிக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. மேலும் சைப்ரசில் போர்த்தொடரின் முடிவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, கிமு 449-448 இல் மீண்டும் அமலுக்கு வந்தது.[40]

பெரிக்கிளீசு சிமோனின் மைத்துனரான கல்லியாசை பாரசீகப் பேச்சுவார்தைகளில் பயன்படுத்தினார். முக்கியமான ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தை நடத்த பலமுறை அவரைப் பணியமர்த்தினார்.[41]

கிமு 449 வசந்த காலத்தில், பெரிக்கிளீசு பேராய நியதி என்பதை முன்மொழிந்தார். இது பாரசீகர்களால் அழிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் கட்டுவது பற்றிய கலந்துரையாடல் குறித்து அனைத்து கிரேக்க நகர அரசுகளின் கூட்டத்திற்கு ("பேராயம்") வழிவகுத்தது. எசுபார்த்தாவின் நிலைப்பாடு காரணமாக பேராயத்திற்கான முயற்சி தோல்வியடைந்தது, ஆனால் பெரிக்கிள்சின் நோக்கங்கள் தெளிவாக இல்லை.[42] சில வரலாற்றாசிரியர்கள் அவர் அனைத்து கிரேக்க நகர அரசுகளின் பங்கேற்புடன் ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று நினைத்தார் என்கிறார்கள். மற்றவர்கள் அவர் ஏதெனியனை முதன்மைபடுத்த விரும்பினார் என்று நினைக்கிறார்கள்.[43]

குறிப்புகள்

தொகு

வார்ப்புரு:Notelist-lg

குறிப்புகள்

தொகு
  1. Pericles' date of birth is uncertain; he could not have been born later than 492–1 and been of age to present the Persae in 472. He is not recorded as having taken part in the Persian Wars of 480–79; some historians argue from this that he was unlikely to have been born before 498, but this argument ex silentio has also been dismissed.[5][6]
  2. Plutarch says "granddaughter" of Cleisthenes,[7] but this is chronologically implausible, and there is consensus that this should be "niece".[8]
  3. According to Aristotle, Aristodicus of Tanagra killed Ephialtes.[32] Plutarch cites an Idomeneus as saying that Pericles killed Ephialtes, but does not believe him – he finds it to be out of character for Pericles.[33]

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Thucydides, 2.65
  2. L. de Blois, An Introduction to the Ancient World 99
  3. S. Muhlberger, Periclean Athens பரணிடப்பட்டது 14 ஏப்பிரல் 2011 at the வந்தவழி இயந்திரம்.
  4. S. Ruden, Lysistrata, 80.
  5. 5.0 5.1 5.2 Fornara-Samons, Athens from Cleisthenes to Pericles, 24–25
  6. J.K. Davies, Athenian propertied families, 600–300 BC, 457.
  7. 7.0 7.1 7.2 Plutarch, Pericles, III.
  8. 8.0 8.1 "Pericles". Encyclopædia Britannica. (2002). 
  9. Herodotus, VI, 131.
  10. V.L. Ehrenberg, From Solon to Socrates, a239.
  11. L. Cunningham & J. Reich, Culture and Values, 73.
  12. 12.0 12.1 "Pericles". Encyclopaedia The Helios. (1952). 
  13. 13.0 13.1 Plutarch, Pericles, IV
  14. Plato, Alcibiades I, 118c
  15. M. Mendelson, Many Sides, 1
  16. Plutarch, Pericles, VI and Plato, Phaedrus, 270a
  17. "Pericles". Oxford Classical Dictionary. (1996). 
  18. S. Hornblower, The Greek World, 479–323 BC, 33–34
  19. Plutarch, Pericles, XVI
  20. 20.0 20.1 Aristotle, Constitution of Athens, வார்ப்புரு:Athpol
  21. Plutarch, Cimon, XV
  22. 22.0 22.1 Plutarch, Pericles, IX
  23. Plutarch, Cimon, XVI
  24. Fornara-Samons, Athens from Cleisthenes to Pericles, 67–73
  25. 25.0 25.1 K. Paparrigopoulos, History of the Greek Nation, Ab, 145
  26. Aristotle, Constitution of Athens, வார்ப்புரு:Athpol and Politics, 1274a
  27. L.J. Samons, What's Wrong with Democracy?, 65
  28. Fine, The Ancient Greeks, 377–78
  29. J.D. King, "Athenian Democracy and Empire" (PDF). Archived from the original on 21 September 2006.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link) (135 KB), 24–25
  30. D. Kagan, The Outbreak of the Peloponnesian War, 79
  31. 31.0 31.1 D. Kagan, The Outbreak of the Peloponnesian War, 135–36
  32. Aristotle, Constitution of Athens, வார்ப்புரு:Athpol
  33. 33.0 33.1 Plutarch, Pericles, X
  34. Thucydides, 1.111
  35. P.J. Rhodes, A History of the Classical Greek World, 44
  36. Plutarch, Cimon, XVII
  37. J. M. Libourel, The Athenian Disaster in Egypt, 605–15
  38. H. Aird, Pericles: The Rise and Fall of Athenian Democracy, 52
  39. J. Fine, The Ancient Greeks, 359–61.
  40. E. Badian, The Peace of Callias, 1–39.
  41. D. Kagan, The Outbreak of the Peloponnesian War, 108.
  42. Plutarch, Pericles, XVII
  43. Wade-Grey, The Question of Tribute in 449/8 B.C., 212–29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிக்கிளீசு&oldid=4052041" இலிருந்து மீள்விக்கப்பட்டது