பெரியகோயில்குப்பம் எண்ணெய்க் கிணறு பிரச்சினை

[[பெரியகோயில்குப்பம் எண்ணெய்க் கிணறு பிரச்சினை]] என்பது, கடலூர் மாவட்டம் கீழூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகோயில்குப்பம் கிராமத்தில் எண்ணெய்க் கிணறு தோண்டி, நிலத்தடி நீர் மாசுபடுவதால் ஏற்படுகின்ற பாதிப்பைக் குறிக்கிறது.[1]

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்ற “எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம்” (ONGC) எடுக்கும் இயற்கை எரிவாயுவால் பெரியகோயில்குப்பம் கிராமத்தில் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

பெரியகோயில்குப்பத்தில் எண்ணெய் எண்ணெய்க் கிணறுகள் செயல்படத் துவங்கியதிலிருந்து தங்கள் பகுதியில் குடிநீரின் தன்மை மாறியுள்ளதோடு, மஞ்சள் நிறத்திலும், அவ்வப்போது எண்ணெய் கலந்து வருவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.[2]

  1. http://tamil.thehindu.com/tamilnadu/கடலூரில்-ஓஎன்ஜிசி-எடுக்கும்-இயற்கை-எரிவாயுவால்-நிலத்தடி-நீர்-பாதிப்பு-கிராம-மக்கள்-புகார்/article9565021.ece
  2. https://www.youtube.com/watch?v=KIb4X6s46Vg&feature=youtu.be