பெரியதள்ளபாடி

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

பெரியதள்ளபாடி (Periyathallapadi) என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை வட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊராகும். இது மாவட்டத் தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 54 கி.மீ. தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 242 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1] இந்த ஊர் சிங்கரபேட்டையில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஊரானது வரலாற்று சிறப்புமிக்க இடமாகவும் இங்கு பல மன்னர்கள் தங்கள் ஆட்சியின் போது மிகபெரும் தளங்களை போர் தளவாடங்களை இங்கு அமைத்ததால், இதற்கு பெரியதள்ளபாடி என்று பெயர் வந்ததாக சொல்லபடுகிறது, இங்கு மிகவும் பழமையான கோவில்கள் உள்ளன. இங்குள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 500 மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Periyathallapadi". http://www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 17 சூலை 2017. {{cite web}}: External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியதள்ளபாடி&oldid=3314323" இலிருந்து மீள்விக்கப்பட்டது