பெரியாச்சி

பெரியாண்டிச்சி ( Periyachi) என்பது இந்து மதத்தில் உள்ள தெய்வீகத் தாயின் மூர்க்கமான அம்சமாகும். அவர் பெரியாச்சி அம்மன் என்றும் சில சமயங்களில் பெரியாச்சி காளியம்மன் என்றும் அழைக்கப்படுகிறார்( அம்மன் என்பது "அம்மா" என்று பொருள்படும்). மேலும் அவர் மற்றொரு மூர்க்கமான தெய்வமான காளியுடன் வணங்கப்படுகிறார்.. பெரியாண்டிச்சி குழந்தைகளின் பாதுகாவலராகவும், மகப்பேறு, கருத்தரித்தல் ஆகியவற்றுக்கான தெய்வமுமாவார்.[1] [2] பெரியாண்டிச்சி பொதுவாக சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இந்து மதத்துடன் தொடர்புடையவர்.

பெரியாச்சி
பெரியாச்சி, ஸ்ரீ வீரகாளியம்மன் கோயில், சிங்கப்பூர்
அதிபதிகுழந்தைகளின் காவல் தெய்வம்
வகைதேவி

புராணம் தொகு

ஒரு காலத்தில் வல்லலராஜன் ராஜா என்ற பாண்டிய மன்னர் ஒருவர் தனது குடிமக்களை மோசமாக துன்புறுத்தினார். அவரது குழந்தை பூமியைத் தொட்டால் பூமிக்கு அழிவு வந்துவிடும் என்று கூறப்பட்டது. ராணி பிரசவத்திற்குச் சென்றபோது, ராஜாவுக்கு ஒரு மகப்பேறு பார்க்கும் பெண்னைக் கண்டறிய முடியவில்லை. அவர் பெரியாச்சி என்ற பெண்ணைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. இந்த மூர்க்கமான பெண், குழந்தையின் மகப்பேற்றினை வெற்றிகரமாக முடித்து, பூமியைத் தொடாதபடி அதைப் பிடித்தாள். பணி முடிந்ததும் பெரியாச்சி அரசனிடம் பணம் கேட்டார், ஆனால் மன்னர் அவளிடம் மோசமாக நடந்து கொண்டார்; மேலும் பணம் கொடுக்கவும் மறுத்துவிட்டார். பெரியாச்சி தேவி பார்வதி என்று ராஜாவுக்குத் தெரியாது, எனவே அவள் உண்மையான வடிவத்தை எடுத்தபோது அவன் ஆச்சரியப்பட்டான். தனது பல கரங்களைப் பயன்படுத்தி அவள் ராஜாவை காலடியில் மிதித்தாள். பின்னர், அவள் தனது ஆயுதங்களைப் பயன்படுத்தி ராஜாவைக் கொன்றாள். அதே சமயம், பிறந்த தீய குழந்தையை அவள் கைகளில் பிடித்து, தரையைத் தொட அனுமதிக்காமல், பூமியை அழிவிலிருந்து காப்பாற்றினாள். [3]

தோற்றம் தொகு

பெரியாச்சி தனது எட்டு கரங்கள் மற்றும் பயமுறுத்தும் தோற்றத்தால் அறியப்படுகிறார். அவள் வழக்கமாக ஆயுதங்களையும் ஒரு குழந்தையையும் வைத்திருப்பதாகக் காட்டப்படுகிறாள். அவள் ஒரு திரிசூலம், சுருக்குக் கயிறு, பாம்புடன் ஒரு டமருகம், ஒரு வாள் மற்றும் இரத்தத்தால் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தை வைத்திருக்க்கிறாள்; குடல் மற்றும் உறுப்புகள் பிய்த்து எறியப்பட்ட மன்னரின் மீது அவள் கால்களால் நின்று அல்லது அமர்ந்திருப்பதாக அவள் அடிக்கடி சித்தரிக்கப்படுகிறாள். மேலேயுள்ள படத்தில், ஒரு ராணியை அவளின் மடியில் கிடத்திக் கொண்டு,அவள் தனது இரண்டு முன் கைகளால் ராணியின் அடிவயிற்றையும் கருப்பையையும் திறந்து, ராணியின் குடலை அவளது வாயிலிருந்து ரத்தத்துடன் மென்று கொண்டிருக்கிறாள். அவளுடைய இரண்டு கைகள் குடல்களைப் பிடித்துக் கொள்கின்றன. மன்னரின் தீய குழந்தை மற்றொரு கையில் உயரமாகப் பிடிக்கப்படுகிறது. [2] [4] அவளுடைய கடுமையான அச்சமூட்டும் தோற்றம் தீய சக்திகளைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது.

பாத்திரங்கள் தொகு

பெரியாச்சி ஒரு "காவல் தெய்வம்" அல்லது பாதுகாவல் ஆத்மா என்று கருதப்படுகிறார். முனீஸ்வரன், மதுரை வீரன் போன்ற பிற ஆண் காவல் தெய்வங்கள் அவரது பாதுகாவலர்களாக கருதப்படுகின்றார்கள். [5] பெரியாச்சி, முனீஸ்வரனின் ஒரு அம்சமான ஜடா-முனீஸ்வரனுடன் சேர்ந்து, தீய சக்திகளை விரட்டவும் பூமியைக் காக்கவும்வ்இணையாக (ஜோடி) பூமியில் வருவதாகக் கூறப்படுகிறது.[6] பெரியாச்சி மற்றவர்களை புண்படுத்தும் விஷயங்களைச் சொல்லும் பெண்களைத் தண்டிப்பதாகவும், பெண்களைச் சுரண்டும் ஆண்களைத் தன் காலடியில் மிதித்து தண்டிப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் குழந்தைகளின் பாதுகாவலராகவும் கருதப்படுகிறார்.

வழிபாடு தொகு

 
பெரியாச்சி சிங்கப்பூரின் வழிபடும் தெய்வம், ஸ்ரீ மரியம்மன் கோவிலில்

கர்ப்பத்தின் மூன்றாவது மாதத்தில் - தமிழ் இந்து புலம்பெயர்ந்தோர் மத்தியில், பும்சவனவிழா ("கரு பாதுகாப்பு") செய்யப்படுகிறது, மேலும் தாய் மற்றும் குழந்தையை தீய கண்ணுக்கு எதிராக பாதுகாக்க பெரியாச்சியிடம் பிரார்த்தனை செய்யப்படுகிறது. அதன்பிறகு ஏழாவது மாதத்தில், பிரசவ வலிகளைத் தணிக்கவும், பிரசவத்தின் பொழுது தாய் மற்றும் குழந்தையைப் பாதுகாக்கவும் தெய்வத்திடம் பிரார்த்தனைகளுடன் வளைகாப்பு எனப்படும் சீமந்தம் செய்யப்படுகிறது. பிரசவத்திற்குப் பிறகு 30 வது நாளில், வீட்டில் ஒரு விழாவில், ஒரு கருப்பு புடவை, அசைவ உணவுகள் மற்றும் நல்ல விஷயங்கள் தெய்வத்திற்கு வழங்கப்படுகின்றன. [3] புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஏற்படும் துரதிர்ஷ்டத்தைத் தவிர்க்க பெண்கள் பெரியாச்சியிடம் பிரார்த்தனை செய்கிறார்கள், பாதுகாப்பான குழந்தை பிறந்த பிறகு தாய்மார்கள் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [7] பின்னர், பிரசவத்திற்குப் பிறகு குழந்தையின் முதல் கோவில் வருகையின் போது, பெற்றோர் தங்கள் ஒரு மாத குழந்தைகளை தெய்வத்திற்கு அர்ப்பணித்து, குழந்தையை தெய்வத்தின் முன் தரையில் அல்லது அவரது காலடியில் வைக்கின்றனர். குழந்தையின் தலையை மொட்டையடித்து மஞ்சள் துணியால் மூட வேண்டும். குழந்தையின் உடன்பிறப்புகளைத் தவிர எல்லோரும், கருப்பையில் மற்றும் அதன் வாழ்க்கையின் முதல் சில மாதங்களுக்கு குழந்தையின் பாதுகாப்பை தெய்வம் பாதுகாப்பதை ஒப்புக்கொள்கிறார்கள். பின்னர் பூசாரி பெரியாச்சியை வணங்க வழக்கமான சடங்குகளை செய்கிறார். குழந்தையில்லாத தம்பதியினர் பன்னிரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் பெரியாச்சி தெய்வத்தை வணங்குவது அவர்களுக்கு சந்ததியை வழங்கும் என்று கூறப்படுகிறது. [8]

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெரியாச்சி மற்றும் முனீஸ்வரனை வணங்குவதற்கான சிறப்பு புனித நாட்களாகக் கருதப்படுகிறது. [6] தெய்வத்தை வழிபடுவதற்கான தமிழ் மாதமான ஆடி மாதம் பெரியாச்சி பூஜை என்ற திருவிழா நடத்தப்படுகிறது. [9] அவர் தமிழ் மாதமான தை மாதத்திலும் வணங்கப்படுகிறார். அவரது வழிபாட்டின் ஒரு பகுதியாக, பலியிடப்பட்ட விலங்கின் இறைச்சி மற்றும் சைவ உணவுகள் அடங்கிய ஒரு படையல் அவளுக்கு வழங்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதம் சாப்பிடுவது நல்ல அதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியத்தையும் தரும் என்று நம்பப்படுகிறது. [8] தீ மிதித்தல் திருவிழாவின் காலத்தில், மகாபாரதத்தின் காவியக் காட்சிகள் பக்தர்கள் மற்றும் நாடகக் குழுக்களால் இயற்றப்படுகின்றன. தீ மிதித்தலின் ஒரு வாரத்திற்கு முன்பு, அவர்கள் பெரியாச்சியிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். பக்தர்கள் மீது அவரது ஆசீர்வாதங்களைக் கோருவதற்கும், திருவிழாவின் போது விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காகவும் பிரார்த்தனை அமர்வு நடத்தப்படுகிறது. [10] பெரியாச்சியை பக்தர்களால் ஒரு வீட்டின் அல்லது குடும்ப தெய்வமாக வணங்குகிறார்கள். [11] அவளுடைய பக்தர்களில் சிலரை அவள் ஆட்கொள்வதாகவும் கூறப்படுகிறது. [12]

பெரியாச்சியின் ஆலயங்கள் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில், சிங்கப்பூர், ஸ்ரீ மரியம்மன் கோயில், சிங்கப்பூர் மற்றும் கெபாங்கின் ஸ்ரீ மகா மரியம்மன் கோயில் ஆகியவற்றில் காணப்படுகின்றன. பினாங்கில் உள்ள தேவி ஸ்ரீ பெரியாச்சி அம்மன் கோயில் போன்ற தனிப்பட்ட கோவில்களும் உள்ளன.

குறிப்புகள் தொகு

  1. Sinha p.303
  2. 2.0 2.1 Mark Lewis. The Rough Guide to Singapore. Rough Guides. பக். 64. https://books.google.com/books?id=mRkgkUdWn9wC&pg=PA64&dq=periachi&hl=en&ei=IMykS5D2EpPHrAe52rHcCA&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CD4Q6AEwAg#v=onepage&q=periachi&f=false. 
  3. 3.0 3.1 Ramesh Kumar. "A Well-Known Infuriated Goddess With An Unknown History". பார்க்கப்பட்ட நாள் 21 March 2010.
  4. Winfried Corduan. Neighboring faiths: a Christian introduction to world religions. https://books.google.com/books?id=pZW6nwbyW5kC&pg=PA213&dq=periachi&lr=&cd=2#v=onepage&q=periachi&f=false. 
  5. Sinha p. 105
  6. 6.0 6.1 Sinha p. 122
  7. Sinha p. 303
  8. 8.0 8.1 "About its Deities and Festivals: Sree Periyachi". Sree Maha Mariamman Temple official site. 2008. Archived from the original on January 13, 2010. பார்க்கப்பட்ட நாள் 21 March 2010.
  9. Sinha p. 87
  10. "Mahabharathathil Uruvaana thiruvizha," by Radha Kasiramu. Tamil Murasu, October 2005, p. 3.
  11. Sinha p.140
  12. Sinha p. 126

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியாச்சி&oldid=3853739" இலிருந்து மீள்விக்கப்பட்டது