பெரிய அந்தமான்

பெரிய அந்தமான் ( Great Andaman )  என்பது இந்தியாவின் அந்தமான் தீவுக்கூட்டத்தில் முதன்மையான பகுதியாகும். இப்பகுதி வடக்கிலிருந்து தெற்காக ஐந்து முதன்மையான தீவுகளை உள்ளடக்கியது.அவை வடக்கு அந்தமான் தீவு, நடு அந்தமான் தீவு, தெற்கு அந்தமான் தீவு, பரட்டாங்கு,  ரூட்லேண்ட் தீவு, ஆகும். இத்தீவுக் கூட்டத்தை பொதுவாக பெரிய அந்தமான் என அழைப்பர்.[1] இதிலுள்ள மூன்று வடக்கு  தீவுகள் இத்தீவுக் கூட்டத்தில் பெரியதாகும்.  தீவுகளின் தலைநகரமாக போர்ட் பிளேர் அமைந்துள்ளது.

பெரிய அந்தமானின் எதிர்முனையில் உள்ளது சிறிய அந்தமான் என்கிற அந்தமானின் மற்றொரு தீவு.

அந்தமான் தீவுகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன அவை பெரிய அந்தமான் சிறிய நிக்கோபார் என்பனவாகும். பெரிய அந்தமானைச் சேர்ந்த  வடக்கு அந்தமான் தீவு, நடு அந்தமான் தீவு, தெற்கு அந்தமான் தீவு ஆகியவை குறுகிய நீர்பகுதியால் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த அந்தமான் தீவுகள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஒரு சங்கிலியாக நீண்டுள்ளன. இந்த அனைத்து  தீவுகளும்  நீரில் மூழ்கி வெளியே தெரியும்  மலைச் சிகரங்களையுடைய சங்கிலி வடிவத்தில் உள்ளன. ஒவ்வொரு தீவின் தரைப்பகுதிகளும் மையத்தில் உயர்ந்தும் கரையை நோக்கி செல்லச் செல்ல சரிந்தும் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. "Great Andaman". britannica.ஒடர. பார்க்கப்பட்ட நாள் 22 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_அந்தமான்&oldid=2054986" இலிருந்து மீள்விக்கப்பட்டது