பெரிய திருமுடியடைவு

பெரிய திருமுடி அடைவு [1] என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. வைணவ குருபரம்பரை வரலாற்றினைக் கூறுவது. கந்தாடையப்பன் [2] தொகுத்தது. பார்த்தசாரதி ஐயங்கார் பதிப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. [3] அரிசமய தீபம் என்னும் நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரையில் 'பெரிய திருவடி அடைவு' நூலைப் பற்றிக் கீழ்க்காணும் செய்திகள் உள்ளன.

கருடவாகன பண்டிதர் செய்த வடமொழி நூல் திவ்வியசூரி சரிதம். இதில் இராமானுசர் காலத்தில் அவரது காலம் வரையிலான குருபரம்பரை தொகுத்துக் கூறப்பட்டுள்ளது. 'பிரபன்னாமிர்தம்' என்னும் நூல் பின்பழகிய பெருமாள் ஜீயர் இயற்றிய குருபரம்பராப் பிரபாவம் என்னும் நூலை வடமொழியில் மொழிபெயர்த்தார். [4]

பெரிய திருமுடி அடைவு என்னும் நூல் அது தோன்றிய 15 ஆம் நூற்றாண்டு வரையிலான வைணவ குருமார்களின் பரம்பரையைத் தொகுத்துக் கூறும் தமிழ்நூல்.

அடிக்குறிப்பு தொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 299. 
  2. சித்திரகூடம் கந்தாடை திருவேங்கடாச்சாரியார்
  3. 1929
  4. இதனைத் து. அ. கோபிநாதையர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1917-ல் வெளியிட்டார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_திருமுடியடைவு&oldid=1488744" இலிருந்து மீள்விக்கப்பட்டது