பெரிலைடு (Beryllide) என்பது பெரிலியம் பிற உலோகங்களுடன் வினைபுரிந்து உருவாகும் உலோகங்களிடை சேர்மமாகும். சிர்க்கோனியம், தைட்டானியம், டாண்ட்டலம், நிக்கல் அல்லது கோபால்ட் என்பன சில உலோகங்களுக்கு உதாரணங்களாகும். Be12Ti மற்றும் FeBe5 என்பன பெரிலைடுகளுக்கு உதாரணங்களாகும். பெரிலைடுகள் கடினமான உலோகங்களைப் போன்ற பொருட்களாகும். இவற்றின் பகுதிப் பொருட்களின் பண்புகளிலிருந்து வேறுபட்ட பண்புகளை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக இவற்றின் ஆக்சிசனேற்றப் பண்புகளில் வெளிப்படுத்தும் நெகிழ்வுத்தன்மை இதற்கு உதாரணமாகும்.

பயன்கள்

தொகு

கோபால்ட் மற்றும் நிக்கலின் பெரிலைடுகள் உலோகவியல் முக்கியத்துவம் பெற்றவையாகக் கருதப்படுகின்றன. பெரிலியம் தாமிரம் கலப்புலோகங்களின் வீழ்படிவு முகம் முக்கியமான சிறப்புப் பண்பாகப் பார்க்கப்படுகிறது. இப்பொருட்கள் பொறியெழுப்பாதவை என்பதால் பேரிடர் சூழல்களில் பயன்படுத்த உகந்ததாக உள்ளது.

அணுக்கருத் தொழில்நுட்பத்தில் பெரிலைடுகளை நியூட்ரான் பெருக்கிகளாகப் பயன்படுத்த ஆராயப்பட்டு வருகிறது. தனிம பெரிலியத்தைப் போலின்றி Be12Ti நீரால் ஆக்சிசனேற்றப்படும் வினைகளில் ஒரு தடையாகவும் ஆனால் 9Be மாற்றியனின் நியூட்ரான் பெருக்கும் பண்பை தொடர்ந்து பின்பற்றவும் செய்கிறது[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Mishima, Y.; Yoshida, N.; Kawamura, H.; Ishida, K.; Hatano, Y.; Shibayama, T.; Munakata, K.; Sato, Y. et al. (2007). "Recent Results on Beryllium and Beryllides in Japan". Journal of Nuclear Materials 367-370: 1382–1386. doi:10.1016/j.jnucmat.2007.04.001. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிலைடு&oldid=2171522" இலிருந்து மீள்விக்கப்பட்டது