பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய்

மலக்குடல் புற்று

பெருங்குடல் மலக்குடலுக்குரிய புற்று நோய் (Colorectal cancer) என்பது பெருங்குடலின் பகுதிகளில் ஏற்படும் புற்று நோயைக் குறிக்கிறது. இதன் மற்றொரு பெயர் பெருங்குடல் புற்று நோய், அல்லது குடல் புற்று நோய் ஆகும். [1]இப்புற்றுநோய்க்கான காரணம், செல்களின் அசாதாரணமான வளர்ச்சியும் உடலின் மற்ற பகுதிகளை ஊடுருவிப் பரவக்கூடிய திறனும் ஆகும்.[2]

பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய்
Stomach colon rectum diagram-ta.svg
Diagram of the lower gastrointestinal tract
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புபுற்றுநோயியல்
ஐ.சி.டி.-10C18.-C20./C21.
ஐ.சி.டி.-9153.0-154.1
ஐ.சி.டி.-ஒM8140/3 (95% of cases)
OMIM114500
நோய்களின் தரவுத்தளம்2975
MedlinePlus000262
ஈமெடிசின்med/413 med/1994 ped/3037
Patient UKபெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய்

மலத்தில் இரத்தப் போக்கு, மலங்கழித்தலில் மாறுதல்கள் , எடைக் குறைவு, மேலும் எப்பொழுதும் சோர்வாக இருப்பது போன்றவை இந்நோய்க்கான அறிகுறிகளாகும்.[3]

நோய்க்கான காரணம்தொகு

பெருங்குடல் புற்று நோய் வருவதற்கு, வாழ்க்கை முறைகளும், முதுமையடைவதும் பெரும்பாலான காரணங்களாக இருப்பினும், ஒரு சிறு எண்ணிக்கை நோயாளிகளுக்கு மரபணு மற்றும் மரபுவழி கோளாறுகளாலும் இந்நோய் ஏற்படுகிறது.[4][5]

பதப்படுத்தபட்ட இறைச்சி, மது போன்ற உணவுப் பழக்க வழக்கங்கள், உடல் பருமன், புகைபிடித்தல், போதிய உடல் ரீதியான செயல்பாடுகள் இல்லாமலிருப்பதும் இந்நோய்க்கான காரணிகளில் அடங்கும்.[4][5] இதுமட்டுமின்றி குடல் அழற்சி நோய், சுருட்குடல் நோய், பெருங்குடல் அழற்சி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டாலும் இப்புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.[4]

நோய் கண்டறிதல், தடுத்தல் மற்றும் திரையிடல்தொகு

குடற்திசு மாதிரியைக் கொண்டு குடலில் கட்டி உள்ளதா என்றறிய செய்யப்படும் சிக்மோய்டோஸ்கோபிச் சோதனை அல்லது கொலோனோஸ்கோபி வாயிலாக இப்புற்றுநோயைக் கண்டறியாலாம்.[3] அதனைத் தொடர்ந்து மருத்துவ இயல்நிலை படமாக்கல் செய்து நோய் பரவியுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.[1] 50 வயது முதல் 75 வயது வரை உள்ளவர்கள் குடல் புற்றுநோயிலிருந்து இறப்பதைத் தவிர்ப்பதற்கு புற்றுநோய் மருத்துவ சோதனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.[6]

கொலோனோஸ்கோபி செய்யும் பொழுது கட்டிகள் அகற்றப்படுகிறது. ஆஸ்ப்ரின் மற்றும் ஸ்டீரோய்ட் அல்லாத அழற்சி மருந்துகள் ஆபத்தை குறைக்கின்றன.[4][7] எனினும் பக்க விளைவுகள் காரணமாக இவை பொதுப் பயன்பாட்டுக்குப் பரிந்துரைக்கபடுவதில்லை.[8]

மேலாண்மை, முன்கணிப்பு, நோய்த்தொற்று அறிவியல்தொகு

மலக்குடல் புற்றுநோய்க்கான சிகிச்சையில் அறுவைச் சிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை, வேதிச்சிகிச்சை மற்றும் இலக்குச் சிகிச்சை என சில கூட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.[1] பெருங்குடல் சுவற்றில் மட்டுமே காணப்படும் புற்று நோய்களை அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும், ஆயினும் உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவியிருக்கும் புற்றுநோயைப் பொதுவாகப் பெரும்பாலும் குணப்படுத்த இயலாது.[1] எனினும் இது புற்றுநோயின் முற்றிய நிலை, புற்றுநோய்க் கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற முடிதல், நோயாளியின் ஒட்டுமொத்த உடல் நிலை இவைகளைப் பொறுத்து ஐந்து ஆண்டுகள்[9] வரை உயிர்வாழ முடியும்.[3]

உலகளவில் மலக்குடல் புற்று நோய், மொத்தப் புற்று நோயாளிகளிடயே 10 % ஆக, மூன்றாவது இடத்தில் உள்ளது.[10] 2012-ல் புதிதாக மொத்தம் 140 லட்சம் நபர்கள் குடல் புற்றுநோயினால் பாதிக்கபட்டிருந்தார்கள், மேலும் 69400 நபர்கள் இந்த நோயினால் இறந்தார்கள்.[10] முன்னேறிய நாடுகளில் இந்நோய்ப் பரவலாகக் காணப்படுகிறது. அங்கு 65% வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள்.[4] இந்த நோய் ஆண்களைவிடப் பெண்களிடயே குறைவாகவே உள்ளது.[4]

மேற்கோள் ஆதாரங்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Colon Cancer Treatment (PDQ®)". NCI. 2014-05-12. 29 June 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Defining Cancer". National Cancer Institute. 10 June 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 3.2 "General Information About Colon Cancer". NCI. 2014-05-12. 29 June 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 World Cancer Report 2014. World Health Organization. 2014. பக். Chapter 5.5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9283204298. 
  5. 5.0 5.1 "Colorectal Cancer Prevention (PDQ®)". National Cancer Institute. 2014-02-27. 29 June 2014 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Screening for Colorectal Cancer". U.S. Preventive Services Task Force. October 2008. 21 பிப்ரவரி 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 June 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  7. Thorat, MA; Cuzick, J (Dec 2013). "Role of aspirin in cancer prevention.". Current oncology reports 15 (6): 533–40. doi:10.1007/s11912-013-0351-3. பப்மெட்:24114189. 
  8. "Routine aspirin or nonsteroidal anti-inflammatory drugs for the primary prevention of colorectal cancer: recommendation statement.". Am Family Physician 76 (1): 109–13. 2007. பப்மெட்:17668849. http://www.aafp.org/afp/2007/0701/p109.html. 
  9. "SEER Stat Fact Sheets: Colon and Rectum Cancer". NCI. 18 June 2014 அன்று பார்க்கப்பட்டது.
  10. 10.0 10.1 World Cancer Report 2014. World Health Organization. 2014. பக். Chapter 1.1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9283204298.