பெருந்தச்சன்
பெருந்தச்சன் (ஆங்கில மொழி: Perumthachan) 1991 ஆம் ஆண்டு மலையாளம் மொழியில் வெளியான ஒரு திரைப்படம் ஆகும். இப்படத்தின் கதையை எழுதியவர் எம். டி. வாசுதேவன் நாயர் மற்றும் இயக்கம் அசையன் என்பவர் ஆவார். இப்படத்தின் கதையாக்கத்தின் தலைப்பும், கதையும் கேரளப்பகுதியில் அனைவராலும் அறியப்படுகின்ற நாட்டுப்புறக்கதையான பறையிபெற்ற பந்திருகுலம் என்ற கதையிலிருந்து எடுக்கப்பட்டதாகும். 1991 ஆம் ஆண்டிற்கான அறிமுக சிறந்த இயக்குனருக்கான விருது பெற்றது.
பெருந்தச்சன் | |
---|---|
இயக்கம் | அசையன் |
தயாரிப்பு | ஜி. ஜெயகுமார் |
கதை | எம். டி. வாசுதேவன் நாயர் |
இசை | ஜான்சன் |
நடிப்பு | திலகன் பிரசாந்த் மோனிஷா உன்னி வினயா பிரசாத் நெடுமுடி வேணு பாபு நம்பூதிரி |
ஒளிப்பதிவு | சந்தோஷ் சிவன் |
படத்தொகுப்பு | எம். எஸ். மணி |
கலையகம் | பவசித்ரா |
வெளியீடு | சனவரி 25, 1991 |
ஓட்டம் | 120 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
கதை
தொகுதச்சுத்தொழில், சிற்பத்தொழில் என பல கலைகளிலும் சிறந்து விளங்கும் கலப்பின மரபையுடையவரான பெருந்தச்சன் (திலகன்) தன் சிறுவயது குழந்தையை விட்டுவிட்டு வேறு ஊரில் தன் தோழனும், அவ்வூரின் உயர்குடியில் பிறந்தவருமான தம்புரானின் (நெடுமுடி வேணு) சொல்கேட்டு சிலைகள் வடித்துக்கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுகிறார். பல ஆண்டுகளாக பிள்ளைப்பாக்கியம் இல்லாதவராக இருக்கும் தம்புரானுக்கு பிள்ளைபாக்கியம் கிடைக்கிறது. அப்போது பெருந்தச்சனின் மேல் தம்புரான் சந்தேகப்படுகிறார். பின்னர் பார்கவி தம்புராட்டி (வினயா பிரசாத்) கேட்கும் கேள்விகளால் தெளிவடைந்து பெருந்தச்சனிடம் மன்னிப்புக்கேட்டு தன் வீட்டுக்கு அழைக்கிறார். ஆனால் பெருந்தச்சன் வரமறுத்து சத்தியம் செய்துவிட்டு தன் சொந்த ஊருக்குச்சென்று தன் மகன் கண்ணனை (பிரசாந்த்) அழைத்துவந்து கலைகளைச் சொல்லிக்கொடுக்கிறார்.[1]
பெருந்தச்சனின் மகன் பெருந்தச்சனைவிட அதிகமான புத்திசாலியும், கலைகளில் வல்லவருமாக விளங்குகிறார். இதைக்கண்டு அப்பாவிற்குப் பொறாமை ஏற்படுகிறது. அதோடு தம்புரானின் மகளான குஞ்சுக்காவு தம்புராட்டிம் (மோனிஷா உன்னி) கண்ணனும் காதல் கொள்ளுகிறார்கள். இதில் பெருந்தச்சன் கண்ணனின் பிறப்பு பற்றி கூறி ஊருக்குச் செல்லும்படி அறிவுறுத்துகிறார். அனைத்து மக்களும் சமம் என்று தந்தை பெருஞ்தச்சனிடம் கண்ணன் தர்க்கம் செய்து ஊருக்குச்செல்ல மறுக்கிறான். வேறு குலத்தைச் சார்ந்த கண்ணன் உயர்குலத்தைச் சார்ந்த குஞ்சுக்காவு தம்புராட்டியை நினைக்காமல் இருக்க ஒரு வழி தேடுகிறார் தந்தை பெருந்தச்சன். சரசுவதி மண்டபத்தின் மேற்கூரையைக் கண்ணனால் சரி செய்யமுடியவில்லை என்று கூறியதால் தான் மேல் ஏறி நின்று சரி செய்கிறார். அப்போது வேலையில் கவனம் செலுத்தாமல் கண்ணனும் குஞ்சுக்காவு தம்புராட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருப்பதைக்கண்ட பெருந்தச்சன் தான் பயன்படுத்திய உளியை கண்ணனின் கழுத்தில் போட்டுவிடுகிறார். இவர் செய்த செயலைக்கண்டு குஞ்சுக்காவு தம்புராட்டி கோபம் கொண்டு பெருந்தச்சனை தேவி ரூபம் கொண்டு அழிக்கிறாள்.[2]
நடிகர்கள்
தொகு- திலகன் - ராமன் பெருந்தச்சன்
- பிரசாந்த் - கண்ணன் பெருந்தச்சனின் மகன்
- வினயா பிரசாத் - பார்கவி தம்புராட்டி
- நெடுமுடி வேணு - உன்னி தம்புரான்
- மோனிசா உன்னி - குஞ்சிக்காவு தம்புராட்டி
- ஜலஜா - தேவகி
- மனோஜ் கே. ஜெயன் - திருமங்கலம் நீலகண்டன் நம்பூதிரியாக
- எம். எஸ். திருப்புனித்துறை மாணி எம்பிராந்திரியாக
- பாபு நம்பூதிரி கேசவன்
- டி. பி.மாதவன் பிரமணியாக, ஊர் தலைவர்
- கோழிக்கோடு நாராயணன் நாயர் நெடும்பரம் மூஸ்ஸாக
- அடூர் பங்கஜம் - உன்னிமையா வல்லம்மா
- பிரபாகரன் - வாரி
- ஸ்ரீலதா மேனன் - தோழியாக
- கோழிக்கோடு சாரதா - கேசவனின் அம்மாவாக
விருதுகள்
தொகு- இத்திரைப்படம் சிறந்த திரைப்படங்களுக்கான பிலிம்பேர் விருதினை வென்று உள்ளது.[3]
- சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருத்தினை திரைப்படம் வென்றுள்ளது - சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு இவ்விருது கிடைத்தது.[4]
தொடர்புடைய திரைப்படங்கள்
தொகுமேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Movies: About Perumthachan". The New York Times இம் மூலத்தில் இருந்து 2008-01-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080115085834/http://movies.nytimes.com/movie/211231/Perumthachan/overview.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-02. பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
- ↑ 39th Annual Filmfare Malayalam Best Film Actress : santosh : Free Download, Borrow, and Streaming : Internet Archive
- ↑ movie-awards, national-awards-winners