பெருந்தேவனார் (சங்கப்புலவர்)

பெருந்தேவனார் சங்ககாலப் புலவர். இவரிலிருந்து வேறுபடுத்திக் காட்டவே சங்கப்பாடல் தொகுக்கப்பட்ட பிற்காலத்தில் வாழ்ந்த பெருந்தேவனாரைப் 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' எனக் குறிப்பிட்டனர்.[1]

சங்கநூல் தொகுப்பில் பெருந்தேவனார் பாடல்கள் மூன்று உள்ளன.[2]

பாடல் சொல்லும் செய்திகள் தொகு

பிரியின் புணருமா? தொகு

இருவகை வினைகள். ஒன்று, முடைநாற்றம் அடிக்கும் இடத்தில், கோடை வெயிலில் தன் சிறகுகளும் கருகும்படி கழுகு இருக்கும் காட்டுவழியில் பொருள்செய்வினை. மற்றொன்று, மனைவியோடு வாழ்ந்துகொண்டே வாழும் மனைமுதல்வினை. நெஞ்சே! நினைத்துப்பார். எது இனிது? - தலைவன் நினைவுகள்.[3]

சிறுகட் பெருநிரை தொகு

யானைக் கூட்டத்தின் பசியைப் போக்கக் களிறு யா மரத்தைக் குத்திக் கிழிப்பதை வழியில் பார்க்கும்போது, பொருள்தேடச் சென்ற நம் தலைவர் உன்னை எண்ணித் திரும்பிவிடுவார். கவலை வேண்டாம் என்று சொல்லித் தோழி தலைவியை ஆற்றுவிக்கிறார்.[4]

மை ஊன் புழுக்கல் (மட்டன் பிரியாணி) + எலிவறுவல் தொகு

வளைவாய்க் கூகையே, இது கேள்! ஊர்மன்றத்துக் கடவுள் மரத்தில் இருந்துகொண்டு நான் அஞ்சும்படி உன் கடுங்குரலால் பயிற்றாதே! அவர் வரவை நள்ளிரவில் நான் நினைத்துக்கொண்டிருக்கும்போது குரல் எழுப்பாதே. குழறாமல் இருந்தால் மையூன் புழுக்கலும் எலிவறுவலும் உனக்குத் தருவேன். - தலைவி கூகையோடு பேசுகிறாள்.[5]

அடிக்குறிப்பு தொகு

  1. சங்ககாலப் புலவர் பெருந்தேவனார் என்பவரும் ஒருவர் அல்லர். குறுந்தொகை 255ஆம் பாடலைப் பாடியவர் 'கடுகு பெருந்தேவனார்' என்னும் பெயர்கொண்ட வேறொருவர் என்பது மு. அருணாசலம் அவர்கள் கருத்து (தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, பாகம்1, பக்கம் 3)
  2. அவை: அகநானூறு 51, நற்றிணை 83, குறுந்தொகை 255
  3. அகநானூறு 51
  4. குறுந்தொகை 255
  5. நற்றிணை 83