பெருந்தோட்டம் ஐராவதேசுவரர் கோயில்
பெருந்தோட்டம் ஐராவதேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுமங்கைமடம் கடைத்தெருவிலுள்ள யோகீஸ்வரர் கோயிலின் நுழைவாயிலுக்கு எதிரே உள்ள பாதையில் 4 கிமீ தொலைவில் பெருந்தோட்டம் அமைந்துள்ளது.[1] இக்கோயில் சீர்காழி-திருவெண்காடு சாலையில் மங்கைமடத்திலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள மூலவர் ஐராவதேசுவரர் என்றழைக்கப்படுகிறர். இங்குள்ள இறைவி அதுல்யகுஜாம்பாள்.[1]
வரலாறு
தொகுதுர்வாசர் என்ற முனிவரின் சாபம் காரணமாக ஐராவதம் காட்டு யானையாகத் திரிய ஆரம்பித்தது. பல தலங்களுக்குச் சென்று அது வழிபட்டது. அவ்வாறான தலங்களில் இறைவன் ஐராவதேசுவரர் என்றழைக்கப்படுகிறார்.[2]
விழாக்கள்
தொகுஇக்கோயிலில் நவராத்திரியும், கார்த்திகையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 அருள்மிகு ஐராவதேசுவரர் திருக்கோயில், பெருந்தோட்டம்
- ↑ 2.0 2.1 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014