பெரைட்டு
பெரைட்டு (Perite) என்பது PbBiO2Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.[3] 1960 ஆம் ஆண்டில் சுவீடனின் லாங்பானுக்கு வெளியே கனிமத்தை கண்டுபிடித்த சுவீடனின் புவியியல் ஆய்வின் சுவீடிய பொருளாதார புவியியலாளர் பெர் அடோல்ஃப் கெய்ச்சர் நினைவாக கனிமத்திற்கு பெரைட்டு எனப் பெயர் வழங்கப்பட்டது.[5]
பெரைட்டு Perite | |
---|---|
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கிடைத்த பெரைட்டு | |
பொதுவானாவை | |
வகை | ஆலைடு கனிமம் |
வேதி வாய்பாடு | PbBiO2Cl |
இனங்காணல் | |
மோலார் நிறை | 483.63 கி/மோல் |
நிறம் | மஞ்சள் |
படிக இயல்பு | போலி நாற்கோணம், தட்டை படிகங்கள் |
படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் |
பிளப்பு | {001} இல் நியாயமான பிளவு |
மோவின் அளவுகோல் வலிமை | 3 |
மிளிர்வு | விடாப்பிடியானது |
கீற்றுவண்ணம் | மஞ்சள் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளி கசியும் |
ஒப்படர்த்தி | 8.16 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
ஒளிவிலகல் எண் | nகணக்கிடப்பட்டது = 2.29 – 2.3 |
பலதிசை வண்ணப்படிகமை | முச்சரிவு |
மேற்கோள்கள் | [1][2][3][4][5] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் பெரைட்டு கனிமத்தை Pe[6] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
பண்புகள்
தொகுபெரைடு கனிமம் Cmcm {C2/m 2/c 21/m} என்ற இடக்குழுவில் நேர்ச்சாய்சதுரப் படிக அமைப்பில் படிகமாகிறது. ஒளியியல் பண்புகளின் அடிப்படையில், பெரைட்டு திசை மாறுபாட்டுப் பண்பை கொண்டுள்ளது. அதாவது இக்கனிமத்தின் திசையைப் பொறுத்து ஒளியின் வேகம் மாறுபடும். நிறமற்றதாக காணப்படும் இக்கனிமம் பலவீனமான பல் நிறத் தோற்றங்களை அளிக்கிறது.
மேற்கு ஐக்கிய அமெரிக்கா, தெற்கு ஆத்திரேலியா போன்ற இடங்களிலும் ஐரோப்பா முழுவதும் பெரைட்டு பரவியுள்ளது.
படிகவியல்
தொகுபெரைட்டு கனிமம் நேர்ச்சாய்சதுரப் படிக அமைப்பைச் சேர்ந்ததாகும். மேலும் 2/மீ 2/மீ 2/மீ படிக வகுப்பின் பண்புகளைக் கொண்டுள்ளது. பெரைட்டில் மூன்று கண்ணாடி தளங்களும் மூன்று இரு மடங்கு சுழற்சி அச்சுகளும் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Mineralienatlas
- ↑ Handbook of Mineralogy
- ↑ 3.0 3.1 Mindat.org
- ↑ Mincryst
- ↑ 5.0 5.1 Webmineral data
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.