பெர்கானா பிராந்தியம்

பெர்கானா பிராந்தியம் (உசுபேகியம்: Farg‘ona viloyati, உருசியம்: Ферганская область) என்பது உஸ்பெகிஸ்தானின் பிராந்தியங்களில் ஒன்றாகும். இது உஸ்பெகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. பெர்கானா பள்ளத்தாக்கின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக உஸ்பெகிஸ்தானின் நமங்கன் மற்றும் அந்திச்சான் பிராந்தியங்களும், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளும் அமைந்துள்ளன. இதன் பரப்பளவு 6,800 சதுர கிலோமீட்டர் ஆகும். சூலை 1, 2020 அன்றைய நிலவரப்படி இந்த பிராந்தியத்தின் மக்கள்தொகை சுமார் 37,82,200 ஆகும்.[1] இந்த பிராந்தியத்தின் 71%க்கும் அதிகமான மக்கள் கிராமப் பகுதிகளில் வாழ்கின்றனர்.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்கானா_பிராந்தியம்&oldid=3154045" இலிருந்து மீள்விக்கப்பட்டது