பெர்சே பேரணி என்பது மலேசியாவில் இருக்கும் எதிர்க்கட்சிகளும், அரசு சார்பு இல்லா பொதுவான அமைப்புகளும் இணைந்து, மலேசியாவின் தேர்தல் முறைமையைச் சீர்செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கிய ஒரு கூட்டுப் பேரணி ஆகும். பெர்சே பேரணி அமைப்பில், பெர்சே 2.0 என்பது இரண்டாவது பேரணி ஆகும்.

பெர்சே 2.0 பேரணி, 2007 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. அம்பிகா சீனிவாசன் பேரணிக்குத் தலைமை தாங்கினார். இந்தப் பேரணியில் அண்டிரூ சியூ, கா. ஆறுமுகம், பாருக் மூசா, மரியா சின், ஹாரிஸ் இப்ராஹிம், வோங் சின் ஹுவாட், ரிச்சர்ட் இயோ, சாயிட் காமாருடின் போன்றவர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.

மலேசியாவின் புகழ்பெற்ற மலாய் தேசிய இலக்கியவாதிகளில் ஒருவரான சமாட் சாயிட் அவர்களும் இந்தப் பேரணியில் பங்கு பெற்றார். பல இலட்சம் மக்கள் பெர்சே 2.0 பேரணியில் கலந்து கொண்டனர். இனம், சமயம், மொழி பேதம் எதையும் பார்க்காமல் மலேசியர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆதரவுகளைத் தெரிவித்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்சே_2.0&oldid=1389937" இலிருந்து மீள்விக்கப்பட்டது