பெர்தானா புத்ரா
பெர்தானா புத்ரா (மலாய்: Perdana Putra; ஆங்கிலம்: Perdana Putra); என்பது மலேசியா, புத்ராஜெயாவில் உள்ள ஒரு கட்டிடமாகும். இதில் மலேசியப் பிரதமரின் அலுவலக வளாகம் அமைந்து உள்ளது.
பெர்தானா புத்ரா Perdana Putra | |
---|---|
பெர்தானா புத்ரா மாளிகை | |
புத்ராஜெயா பெர்தானா புத்ரா மாளிகை | |
மலேசியாவில் அமைவிடம் | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | முழுமையானது |
வகை | மத்திய அரசு நிர்வாக மையம் |
கட்டிடக்கலை பாணி | மலாய் இஸ்லாமியம் பல்லேடியக் கலை மேற்கத்திய கலை |
நகரம் | புத்ராஜெயா |
நாடு | மலேசியா |
ஆள்கூற்று | 2°56′18″N 101°41′32″E / 2.93833°N 101.69222°E |
அடிக்கல் நாட்டுதல் | 1995 |
கட்டுமான ஆரம்பம் | 1997 |
நிறைவுற்றது | 1999 |
துவக்கம் | 1999 |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 5 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | புத்ராஜெயா நிறுவனம் (PPJ) |
புத்ராஜெயாவின் பிரதான மலையில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம், மலேசிய மத்திய அரசின் நிர்வாகப் பிரிவின் நினைவுச் சின்னமாக விளங்குகிறது.
வரலாறு
தொகுஇந்தக் கட்டிடத்தின் கட்டுமானம் 1997-இல் தொடங்கப்பட்டு 1999-இன் தொடக்கத்தில் நிறைவு அடைந்தது. பிரதமர் துறையின் அனைத்துப் பிரிவுகளும் கோலாலம்பூரில் இருந்து புத்ராஜெயாவிற்கு மாற்றப்பட்ட பின்னர், ஏப்ரல் 1999-இல் இந்தக் கட்டிடம் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது.
கட்டிடக்கலை
தொகுஇந்தக் கட்டிடத்தின் கலை வடிவமைப்பு மலாய், இசுலாமிய மற்றும் ஐரோப்பிய கலாசாரங்களான பல்லேடியன் (Palladian) மற்றும் நியோகிளாசிசம் (Neoclassicism) போன்றவற்றைக் கொண்டது.[1] அகிடா (aQidea) கட்டிடக் கலைஞரான அகமது ரோசி அப்த் வகாப் (Ahmad Rozi Abd Wahab) எனும் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது.[1]
மலேசியாவின் 4-ஆவது, 7-ஆவது பிரதமரான மகாதீர் பின் முகமதுவின் முயற்சியால் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டது.[2][3]
கட்டிடத்தின் உட்புறம்
தொகுபெர்தானா புத்ராவின் உட்புற அமைப்பில் உள்ள முக்கிய அறைகள் மற்றும் அரங்குகள்:
- பிரதமர் அலுவலகம்
- துணை பிரதமர் அலுவலகம்
- சிறிய மாநாட்டு மண்டபம்
- பெரிய மாநாட்டு மண்டபம்
- பார்வையாளர் அரங்கம்
- பிரதிநிதிகள் அறை
- முக்கியப் புள்ளிகள் அறை
- முக்கியப் புள்ளிகள் விருந்து மண்டபம்
- தேசியப் பாதுகாப்பு பிரிவு அலுவலகம்
- தேசியப் பொருளாதார நடவடிக்கை அலுவலகம்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Putrajaya ~ Colossal Buildings". Archived from the original on 2022-01-28. பார்க்கப்பட்ட நாள் 2022-11-28.
- ↑ Citrin William et al.(2009). In Malaysia at Random. Editions Didier Millet. p. 125. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-4217-95-8. Google Book Search. Retrieved on 17 July 2012.
- ↑ The architecture of the building-Perdana Putra
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் பெர்தானா புத்ரா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.