பெர்லிஸ் புத்ரா

1945-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரையில் பெர்லிஸ் இராஜா

பெர்லிஸ் புத்ரா அல்லது பெர்லிஸ் இராஜா புத்ரா (ஆங்கிலம்: Putra of Perlis; Perlis Putra; மலாய்: Tuanku Syed Putra Jamalullail ibni Al-Marhum Syed Hassan Jamalullail); (25 நவம்பர் 1920 – 16 ஏப்ரல் 2000) என்பவர் 1945-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரையில் பெர்லிஸ் இராஜா பதவியை வகித்தவர் ஆவார்.

பெர்லிஸ் புத்ரா
Putra of Perlis
ڤوترا‎
பெர்லிஸ் இராஜா
பெர்லிஸ் புத்ரா (1964)
3-ஆவது மலேசிய மாமன்னர்[1]
ஆட்சிக்காலம்21 செப்டம்பர் 1960 - 20 செப்டம்பர் 1965
மலேசியா4 சனவரி 1961
முன்னையவர்சுல்தான் இசாமுதீன்
பின்னையவர்சுல்தான் இசுமாயில் நசிருதீன்
பெர்லிஸ் இராஜா
ஆட்சிக்காலம்4 திசம்பர் 1945 - 16 ஏப்ரல் 2000
முடி சூட்டுதல்12 மார்ச் 1949
முன்னையவர்சையத் அம்சா
பின்னையவர்பெர்லிஸ் சிராஜுதீன்
பிறப்பு(1920-11-25)25 நவம்பர் 1920
ஆராவ், பெர்லிஸ், மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள்
இறப்பு16 ஏப்ரல் 2000(2000-04-16) (அகவை 79)
கோலாலம்பூர், மலேசியா
புதைத்த இடம்17 ஏப்ரல் 2000
ஆராவ் அரச கல்லறை, ஆராவ், பெர்லிஸ், மலேசியா
துணைவர்1.தெங்கு இஸ்மாயில் தெங்கு புத்ரியா (தி. 1941) 2. ரியாம் பெசுயான்வின் (தி. 1952) (இ. 1986)
குழந்தைகளின்
பெயர்கள்
பெர்லிஸ் சிராஜுதீன்; தெங்கு சரீப்; டத்தோஸ்ரீ சையத் பதருதீன்; தெங்கு சரீப் தெமெங்காங்; சையத் அமீர் சைனல் அபிடின்; தெங்கு சரீப் அட்மிரல்; திராஜா சையத் ரசுலான்; சையத் சைனோல் அன்வர்; இளவரசி உத்தாமா; திராஜா சரிபா சல்வா; திராஜா சரிபா சலைனா; தெங்கு புவான் இலட்சுமனா கிளாந்தான்; திராஜா சரிபா அசுவான்; சரிபா சுனெட்டா; சரிபா எண்டா; சையத் சைனல் ரசீத்; சையத் அசுனி; சையத் பட்லிசா; சரிபா மெலானி
பெயர்கள்
Tuan Syed Harun Putra Tuan Syed Hassan Jamalullail
பட்டப் பெயர்
Tuanku Syed Harun Putra Syed Hassan Jamalullail
மரபுபெர்லிஸ் சமலுலாயில்
தந்தைசையத் அசன் சையத் மகமூத் சமலுலாயில்
தாய்சே புவான் வான் தே பிந்தி வான் எண்டுட்
மதம்சன்னி

மலேசிய வரலாற்றில் எளிமையான அரசர்களில் ஒருவராக அறியப்படும் இவர், இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியர் அதிகாரத்தினாலும்; உறவினர் அழுத்தங்களினாலும் அரசர் பதவியை இழந்தவர்; குடும்பத்தைக் காப்பாற்ற பலகாரங்கள், சில்லறை பொருட்களை விற்று வாழ்க்கை நடத்தியவர்; இறுதியில் ஒரு மாநிலத்தின் அரசராகப் பொறுப்பு வகித்தவர் என அறியப்படுகிறார்.

அத்துடன் 1960-ஆம் ஆண்டில் இருந்து 1965-ஆம் ஆண்டு வரை மலேசியாவின் 3-ஆவது பேரரசராகவும் பதவி வகித்தவர் ஆவார். தீபகற்ப மலேசியாவின் ஒன்பது மாநிலங்களின் மலாய் அரசர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு தலைமை அரசரைத் தேர்வு செய்கின்றனர். அவரை பேரரசர் என்று மலேசியர் அழைக்கின்றனர்.[2][3]

தொடக்க கால வாழ்க்கை

தொகு
 
பெர்லிஸ் புத்ரா அஞ்சல் தலை 1971

பெர்லிஸ் புத்ரா, 1920-ஆம் ஆண்டில் பெர்லிஸ், ஆராவ் அரச நகரில் பிறந்தார். தந்தையின் பெயர் சையத் அசன் சையத் மகமூத் சமலுலாயில் (Syed Hassan bin Syed Mahmud Jamalullail); தாயார் சே புவான் வான் தே பிந்தி வான் எண்டுட் (Wan Teh binti Wan Endut) தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். 1939-ஆம் ஆண்டில், தாய்லாந்து அழகி என விருது பெற்றவர்.[4][5] பெர்லிஸ் புத்ரா, 1937 - 1939-ஆம் ஆண்டுகளில் ஆராவ் மலாய் பள்ளியிலும்; பின்னர் தன் இடைநிலைக் கல்வியைப் பினாங்கு பிரி இஸ்கூல் பள்ளியிலும் (Penang Free School) பயின்றார்.[6]

18-ஆவது வயதில், பெர்லிஸ் நிர்வாகச் சேவையில் சேர்ந்த பெர்லிஸ் புத்ரா, ஒரு குற்றவியல் நடுவராகச் சேவை செய்தார். 1940-ஆம் ஆண்டு, குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டாவது நிலை நீதிபதியாகப் பணியாற்ற கோலாலம்பூருக்கு மாற்றப்பட்டார்.[7]

பெர்லிஸ் அரியணை சர்ச்சை

தொகு

பெர்லிஸ் சமலுலாயில் ஆட்சியின் நான்காவது ராஜாவான சையத் அல்வி இப்னி சையத் சபி சமலுலாயில் (Syed Alwi ibni Syed Safi Jamalullail) (பிறப்பு 1881; ஆட்சி 1905–1943) குழந்தை இல்லாதவர்; அவரின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் பலர் வாரிசுரிமைக்காகப் போட்டியிட்டனர். பெர்லிஸ் அரசரை பெர்லிஸ் ராஜா (Raja of Perlis) என்று அழைக்கின்றனர்.[8] பெர்லிஸ் அரியணைக்கு வாரிசுரிமை தானாக அமைவது இல்லை. பெர்லிஸ் ராஜா மற்றும் பலரைக் கொண்ட பெர்லிஸ் மாநில மன்றத்தால் (Perlis State Council) அந்தப் பதவி உறுதிபடுத்தப்படுகிறது.[9]

பெர்லிஸ் புத்ராவின் தந்தைவழி தாத்தா சையத் மகமூத் (இறப்பு 1919), ராஜா சையத் சபி இப்னி சையத் அல்வி சமாலுலாயில் (Raja Syed Safi ibni Almarhum Syed Alwi Jamalullail) என்பவரின் (பெர்லிஸின் மூன்றாவது ராஜா) மூத்த மகனாவார். அவர் பெர்லிஸின் நான்காவது ராஜா சையத் அல்வியின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.[10] அவர் 1912 வரை பெர்லிஸ் ராஜா மூடாவாக பணியாற்றினார்.[11] ராஜா சையத் அல்வி, ஒரு குற்றச் செயலின் காரணமாக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 1917-ஆம் ஆண்டு வரை கெடா, அலோர் ஸ்டார் சிறையில் தண்டனை பெற்றார்.

சையத் அம்சா

தொகு
 
1951-ஆம் ஆண்டு, பெர்லிஸ் புத்ரா அஞ்சல் தலை

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜா சையத் அல்வி அலோர் ஸ்டாரில் காலமானார்.[12] திசம்பர் 6, 1934 அன்று, பெர்லிஸ் புத்ராவின் தந்தைவழி தாத்தா சையத் மகமூத் என்பவரின் மகன் சையத் அசன் (Syed Hassan) பெர்லிஸ் மாநில மன்றத்தால் வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், சையத் அசன் 18 அக்டோபர் 1935 அன்று காலமானார்.[13]

அதைத் தொடர்ந்து, 1938-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி, பெர்லிஸ் மாநில மன்றம், பெர்லிஸ் புத்ராவை பெர்லிஸின் ராஜாவாகத் மீண்டும் தேர்ந்தெடுத்தது. இந்தத் தேர்வை ராஜா சையத் அல்வியின் ஒன்றுவிட்ட சகோதரரான சையத் அம்சா (Syed Hamza) என்பவரும்; பெர்லிஸ் மாநில மன்றத்தின் துணைத் தலைவரும் எதிர்த்தனர்.[14] பெர்லிஸ் புத்ரா அரியணையில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும், பிரித்தானிய குடியேற்றவிய ஆட்சியாளர்கள் பெர்லிஸ் புத்ராவை ஆதரித்தனர்.[15]

சப்பானியர் ஆட்சி

தொகு

பசிபிக் போர் உருவானபோது ​​பெர்லிஸ் புத்ரா, கோலாலம்பூர் நீதித்துறையில் பணியாற்றி வந்தார்.[16] மேலும் சிலாங்கூர் சுல்தான் மூசா கியாதுதீன் ரியாட் சா, பெர்லிஸ் புத்ராவை கோலாலம்பூரிலேயே தங்கி இருக்குமாறு அறிவுறுத்தினார். அந்தக் கட்டத்தில், பெர்லிஸ் அரசவையில் வாரிசு சவால்களும் சர்ச்சைகளும் தொடர்ந்தன. இந்தப் பிரச்சினைகளின் காரணமாக பெர்லிஸ் புத்ராவும் அவரின் குடும்பத்தினரும் 1942 மே 15 வரை கிள்ளானில் தங்கி இருந்தனர்.

பெர்லிஸ் புத்ரா, பெர்லிஸுக்குத் திரும்பியபோது அவர் வரவேற்கப்படவில்லை. பின்னர் அவர் ஆராவ் தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு குடிசையில் வசித்து வந்தார். அந்த நேரத்தில் பெர்லிஸின் ராஜாவாக இருந்த ராஜா சையத் அல்வியிடம் இருந்து மாதாந்திர உதவித் தொகையாக மலாயன் டாலர் $ 90 பெற்றார். ஆனால் ராஜா சையத் அல்வி இறந்தவுடன் அந்த மாதாந்திர உதவித் தொகையும் நிறுத்தப்பட்டது.[17] கெடா மற்றும் பெர்லிஸ் சப்பானிய இராணுவ ஆளுநரின் அழுத்தங்களினால் சையத் அம்சா என்பவர் ஐந்தாவது பெர்லிஸ் ராஜாவாக அறிவிக்கப்பட்டார். முறைப்படி பெர்லிஸ் புத்ராவிற்குத்தான் பெர்லிஸின் ராஜா பதவி வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஒரு கட்டத்தில், மனம் உடைந்த போன பெர்லிஸ் புத்ரா, 1945 மார்ச் 29 அன்று கிளாந்தானுக்குச் சென்றார். அவருடைய மனைவி தெங்கு இசுமாயில் தெங்கு புத்ரியாவின் சொந்த மாநிலம் கிளாந்தான் ஆகும். பெர்லிஸ் புத்ரா கிளாந்தானில் பலகாரங்கள் மற்றும் பல்வேறான சில்லறைப் பொருட்களை விற்று வாழ்க்கை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[18]

பிரித்தானிய இராணுவ நிருவாகம்

தொகு

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 1945-ஆம் ஆண்டு பிரித்தானியர், மலாயாவுக்குத் திரும்பினர். ​​அந்தக் கட்டத்தில் மவுண்ட்பேட்டன் பிரபுவின் கீழ் இயங்கிய பிரித்தானிய மலாயாவில் இராணுவ நிருவாகம் சையத் அம்சாவை பெர்லிஸ் ராஜாவாக அங்கீகரிக்க மறுத்துவிட்டது. செப்டம்பர் 18, 1945 அன்று, சையத் அம்சா பதவி விலகினார்.[19][20] பின்னர் சையத் அம்சா, தாய்லாந்திற்கு நாடுகடத்தப்பட்ட்டார். பிப்ரவரி 20, 1958 அன்று ஆராவில் காலமானார்.[21]

திசம்பர் 4, 1945 அன்று பிரித்தானியர்கள், பெர்லிஸ் புத்ராவை பெர்லிஸின் ஆறாவது ராஜாவாக அறிவித்தனர்.[22] அதுவரையில் அவர் கிளாந்தானில் ஒரு சாமானியராக வாழ்க்கை நடத்தி வந்தார். அதன் பின்னர் அவர் கிளாந்தானில் இருந்து பாடாங் பெசார் வழியாக பெர்லிஸ் ஆராவ் நகரத்திற்குத் திரும்பினார். பெர்லிஸ் புத்ரா, மார்ச் 12, 1949 அன்று பெர்லிஸ் ராஜாவாகப் பதவியேற்றார்.[23]

மலேசிய அரசர்

தொகு
 
பெர்லிஸ் புத்ரா மலேசியாவில் பேரரசராக பதவி ஏற்றபோது எடுத்த அரசு படம்

பெர்லிஸ் புத்ரா செப்டம்பர் 21, 1960-இல் மலாயாவின் மலேசியாவின் 3-ஆவது பேரரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 39 ஆண்டுகள் மற்றும் 301 நாட்கள் பதவி வகித்தார். இதுவரை மலேசியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய யாங் டி-பெர்துவான் அகோங் இவரே ஆவார். அவர் சனவரி 4, 1961 அன்று இசுதானா நெகாராவில் பதவியேற்றார்.

செப்டம்பர் 16, 1963 அன்று மலாயா, பிரித்தானிய போர்னியோ, சரவாக் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை மலேசிய கூட்டமைப்பில் ஒன்றிணைந்தன. பெர்லிஸ் புத்ரா செப்டம்பர் 20, 1965 வரை பதவி வகித்தார். இவரின் மகன் துவாங்கு சையத் சிராஜுதீன் 12-ஆவது யாங் டி-பெர்துவான் அகோங்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 முதல் 2006 வரை பதவி வகித்தார். சிலாங்கூர் சுல்தான் சலாவுதீன் அப்துல் அசீஸ் சா அவர்களின் மரணத்திற்குப் பிறகு துவாங்கு சையத் சிராஜுதீன் பதவியில் அமர்த்தப்பட்டார்.

பெர்லிஸ் புத்ரா மலேசியப் பேரரசராக பதவி வகித்த போதுதான், மலேசியாவிற்கும் அதன் அண்டை நாடான இந்தோனேசியாவிற்கும் இடையிலான இந்தோனேசியா-மலேசியா மோதல் ஏற்பட்டது.[24]

இறப்பு

தொகு

பெர்லிஸ் புத்ரா ஏப்ரல் 16, 2000 அன்று கோலாலம்பூர் மலேசிய இருதய மையத்தில் மாரடைப்பால் காலமானார். அந்த நேரத்தில், அவர் உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னராகவும் அறியப்பட்டார். அவர் பெர்லிஸ் மாநிலத்தை 55 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். அவர் பெர்லிஸ் ஆராவ் மாநகரில் உள்ள அரச கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[25]

விருதுகள்

தொகு

பெர்லிஸ் சமலுலாயில் விருதுகள்

தொகு

  பெர்லிஸ் :

    •   (DK)
    •   (SSPJ) (4.12.1995)
    •   (Dato' Sri Paduka) (Star of Safi) - (SPMP)

மலேசிய விருதுகள்

தொகு

மலேசிய மாநிலங்கள் விருதுகள்

தொகு

பன்னாட்டு விருதுகள்

தொகு

மலேசிய பேரரசர்கள் பட்டியல்

தொகு

தீபகற்ப மலேசியாவின் ஒன்பது மாநிலங்களின் மலாய் அரசர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு தலைமை அரசரைத் தேர்வு செய்கிறார்கள். அவரை பேரரசர் என்று மலேசியர் அழைக்கின்றனர். பேரரசர் என்பது மலேசியாவில் பயன்படுத்தப்படும் ஒரு வழக்குச் சொல் ஆகும்.[30] பின்வரும் ஆட்சியாளர்கள் பேரரசர் எனும் யாங் டி பெர்துவான் அகோங் பதவியில் பணியாற்றி உள்ளனர்.[31]

# படிமம் பெயர் நிலை ஆட்சி பிறப்பு இறப்பு ஆட்சியின் காலம்
1   துவாங்கு அப்துல் ரகுமான்   நெகிரி செம்பிலான் 31 ஆகஸ்டு 1957 – 1 ஏப்ரல் 1960 (1895-08-24)24 ஆகத்து 1895 1 ஏப்ரல் 1960(1960-04-01) (அகவை 64) 2 ஆண்டுகள், 214 நாட்கள்
2   சுல்தான் இசாமுதீன் ஆலாம் சா   சிலாங்கூர் 14 ஏப்ரல் 1960 – 1 செப்டம்பர் 1960 (1898-05-13)13 மே 1898 1 செப்டம்பர் 1960(1960-09-01) (அகவை 62) 0 ஆண்டுகள், 140 நாட்கள்
3   பெர்லிஸ் புத்ரா   பெர்லிஸ் 21 செப்டம்பர்1960 – 20 செப்டம்பர் 1965 (1920-11-25)25 நவம்பர் 1920 16 ஏப்ரல் 2000(2000-04-16) (அகவை 79) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
4   சுல்தான் இசுமாயில் நசிருதீன்   திராங்கானு 21 செப்டம்பர் 1965 – 20 செப்டம்பர் 1970 (1907-01-24)24 சனவரி 1907 20 செப்டம்பர் 1979(1979-09-20) (அகவை 72) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
5   சுலதான் அப்துல் ஆலிம்
1-ஆவது முறை
  கெடா 21 செப்டம்பர் 1970  – 20 செப்டம்பர் 1975 (1927-11-28)28 நவம்பர் 1927 11 செப்டம்பர் 2017(2017-09-11) (அகவை 89) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
6   சுல்தான் யாகயா பெட்ரா   கிளாந்தான் 21 செப்டம்பர் 1975 – 29 மார்ச் 1979 (1917-12-10)10 திசம்பர் 1917 29 மார்ச்சு 1979(1979-03-29) (அகவை 61) 3 ஆண்டுகள், 189 நாட்கள்
7   சுல்தான் அகமட் சா   பகாங் 26 ஏப்ரல் 1979 – 25 ஏப்ரல் 1984 (1930-10-24)24 அக்டோபர் 1930 22 மே 2019(2019-05-22) (அகவை 88) 4 ஆண்டுகள், 365 நாட்கள்
8   சுல்தான் இசுகந்தர்   ஜொகூர் 26 ஏப்ரல் 1984 – 25 ஏப்ரல் 1989 (1932-04-08)8 ஏப்ரல் 1932 22 சனவரி 2010(2010-01-22) (அகவை 77) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
9   சுல்தான் அசுலான் சா   பேராக் 26 ஏப்ரல் 1989 – 25 ஏப்ரல் 1994 (1928-04-19)19 ஏப்ரல் 1928 28 மே 2014(2014-05-28) (அகவை 86) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
10   துவாங்கு ஜபார்   நெகிரி செம்பிலான் 26 ஏப்ரல் 1994 – 25 ஏப்ரல் 1999 (1922-07-19)19 சூலை 1922 27 திசம்பர் 2008(2008-12-27) (அகவை 86) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
11   சுல்தான் சலாவுதீன்   சிலாங்கூர் 26 ஏப்ரல் 1999 – 21 நவம்பர் 2001 (1926-03-08)8 மார்ச்சு 1926 21 நவம்பர் 2001(2001-11-21) (அகவை 75) 2 ஆண்டுகள், 209 நாட்கள்
12   துவாங்கு சையத் சிராஜுதீன்   பெர்லிஸ் 13 டிசம்பர் 2001 – 12 டிசம்பர் 2006 17 மே 1943 (1943-05-17) (அகவை 81) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
13   சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன்   திராங்கானு 13 டிசம்பர் 2006 – 12 டிசம்பர் 2011 22 சனவரி 1962 (1962-01-22) (அகவை 63) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
14   சுல்தான் அப்துல் அலீம்
(2-ஆவது முறை)
  கெடா 13 டிசம்பர் 2011 – 12 டிசம்பர் 2016 (1927-11-28)28 நவம்பர் 1927 11 செப்டம்பர் 2017(2017-09-11) (அகவை 89) 4 ஆண்டுகள், 365 நாட்கள்
15   சுல்தான் முகமது V   கிளாந்தான் 13 டிசம்பர் 2016 – 6 சனவரி 2019 6 அக்டோபர் 1969 (1969-10-06) (அகவை 55) 2 ஆண்டுகள், 24 நாட்கள்
16   சுல்தான் அப்துல்லா   பகாங் 31 சனவரி 2019 – இன்று வரையில் 30 சூலை 1959 (1959-07-30) (அகவை 65) 6 ஆண்டுகள், 81 நாட்கள்
17   சுல்தான் இப்ராகிம் இசுகந்தர்   ஜொகூர் 31 சனவரி 2024 – தற்போது 1 ஆண்டு, 81 நாட்கள் 22 நவம்பர் 1958 (1958-11-22) (அகவை 66)

மேற்கோள்கள்

தொகு
  1. "Official Portal of The Parliament of Malaysia - List of His Majesty The Yang Di-Pertuan Agong". www.parlimen.gov.my (in ஆங்கிலம்). Retrieved 20 February 2025.
  2. "In August 1957, after choosing the title of Yang di-Pertuan Agong the Conference of Rulers convened to vote for the first holder of the throne". Istana Negara, Kuala Lumpur. Retrieved 21 February 2025.
  3. "Election of the First Yang Di-Pertuan Agong". NATIONAL ARCHIVES OF MALAYSIA. Retrieved 21 February 2025.
  4. "Che Puan Mariam (née Riam Pessayanavin; 1924–1985) was Miss Thailand in 1939". Tuanku Syed Putra Jamalullail. Retrieved 21 February 2025.
  5. Finestone, Jeffrey and Shaharil Talib (1994) The Royal Families of South-East Asia Shahindera Sdn Bhd
  6. (27 December 2002) Penang Free School newsletter
  7. Willan, HC (1945) Interviews with the Malay rulers CAB101/69, CAB/HIST/B/4/7
  8. Buyong Adil (1981) Sejarah Perlis pp 34–35 DBP
  9. Tang Su Chin, Julie (2002) Sejarah Kerajaan Perlis 1841–1957 p 231 MBRAS
  10. Tang Su Chin, Julie (2002) Op Cit p 232
  11. Perlis State Council minutes (15 April 1912) CO273 1098a.386/22831
  12. Secret Memorandum Howitt to Shenton Thomas (25 March 1937) Papers of John Hamer MSS ind. Ocn. s 316 Box 1 File 1
  13. Tang Su Chin, Julie (2002) Op Cit p 232
  14. Tang Su Chin, Julie (2002) Op Cit pp 267–268
  15. Tang Su Chin, Julie (2002) Op Cit p 262
  16. Tang Su Chin, Julie (2002) Op Cit p 266
  17. Willan, HC (1945) Op Cit
  18. Tuanku Syed Putra Jamalullail My Personal Experience Just Before and After the Japanese Occupation of Malaya in Papers of John Hamer MSS ind. Ocn. s 316 Box 1 File 1
  19. Willan, HC (1945) Op Cit
  20. Mahani Musa, Kongsi Gelap Melayu di Negeri-Negeri Utara Pantai Barat Semenanjung Tanah Melayu, 1821 hingga 1940-an, pg 150-160
  21. Finestone, Jeffrey and Shaharil Talib (1994) Op Cit
  22. Mahani Musa, Kongsi Gelap Melayu di Negeri-Negeri Utara Pantai Barat Semenanjung Tanah Melayu, 1821 hingga 1940-an, pg 150-160
  23. Che Puan Temenggung Perlis (1995) Putra: Biografi yang diperkenankan tentang riwayat hidup DYMM Raja Perlis, Tuanku Syed Putra Jamalullail pp 53 and 56
  24. Tunku Abdul Rahman (1977) Looking Back p 343 Pustaka Antara, Kuala Lumpur
  25. (18 April 2000) Utusan Malaysia
  26. "Senarai Penuh Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat Persekutuan Tahun 1958" (PDF).
  27. "DK 1985". pingat.perak.gov.my.
  28. "DK I 1970". awards.selangor.gov.my.
  29. "No. 40787". இலண்டன் கசெட் (Supplement). 25 May 1956. p. 3103.
  30. "Act 269 - Civil List Act 1982" (PDF). Attoney-General Chamber. AGC Malaysia. Retrieved 23 January 2019.
  31. "MyGOV - The Government of Malaysia's Official Portal". www.malaysia.gov.my. Retrieved 21 February 2025.
பெர்லிஸ் புத்ரா
பிறப்பு: 25 நவம்பர் 1920 இறப்பு: 16 ஏப்ரல் 2000
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் மலேசிய அரசர்
21 செப்டம்பர் 1960 - 20 செப்டம்பர் 1965
பின்னர்
முன்னர்
சையத் அம்சா
பெர்லிஸ் இராஜா
4 திசம்பர் 1945 - 16 ஏப்ரல் 2000
பதவியில் உள்ளார்
வாரிசு:
பெர்லிஸ் சிராஜுதீன்

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்லிஸ்_புத்ரா&oldid=4212971" இலிருந்து மீள்விக்கப்பட்டது