பெல்லாரியின் வரலாறு

வரலாற்றின் அம்சம்

பெல்லாரியின் வரலாறு (History of Bellary) பல்லாரி எனவும் உச்சரிக்கப்படும் பெல்லாரி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெல்லாரி மாவட்டத்தின் ஒரு வரலாற்று நகரமாகும்.

பல்லாரி பகுதியின் வரலாற்றுப் பெயர்கள் தொகு

 • குந்தல தேசம்
பல்லாரி ஒரு காலத்தில் குந்தல தேசம் (குந்தல நாடு) [1] [2] [3] அல்லது குந்தல விஷயா (குந்தல விஷயம்) (விஷய - ஒரு பிராந்தியப் பிரிவு அல்லது ஒரு இராச்சியத்தின் மாவட்டம்) என்றும் அழைக்கப்படும் ஒரு பகுதியின் ஒரு பகுதியாக இருந்தது. பல கல்வெட்டுகள் மேற்கு சாளுக்கியர்களை குந்தலா அல்லது கொண்டலாவின் ஆட்சியாளர்கள் என்று குறிப்பிடுகின்றன. [4] [5]
 • சிந்தாவடி
மேலைக் கங்கர்களின் காலத்து தலக்காடு கல்வெட்டு, இன்றைய பல்லாரி, ஆவேரி, கதக் - பெட்டகேரி, தார்வாடு, கொப்பள், பாகல்கோட் மாவட்டங்களின் பகுதிகள் அல்லது முழுவதுமாக உள்ள ஒரு குறிப்பிட்ட சிந்தா பிரதேசத்தைப் பற்றி பேசுகிறது.[6] யாதவர்கள் [7] கல்யாணி சாளுக்கியர்களின் [8] பல கல்வெட்டுகள் இந்த பகுதிகளை சிந்தாவடி அல்லது சிந்தாவடி-நாடு (சிந்தவாடி-1000) என்று குறிப்பிடுகின்றன.
 • நொளம்பாவடி
மேலைச் சாளுக்கியர்களின் ஆட்சியின் போது, பெல்லாரியைச் சுற்றியுள்ள பகுதிகள் நொளம்பாவடியின் ஒரு பகுதியாக இருந்தது (நொளம்பாவடி 32000என குறிப்பிடப்படுகிறது), இதில் தற்போதைய பகுதிகளான Shivamogga, சித்ரதுர்கா, தாவண்கரே, பல்லாரி , அனந்தபூர் மாவட்டம் ஆகியவைகள் அடங்கும்.[9] மேலும், சில கல்வெட்டுகள் நொளம்பவாடி-நாடு குந்தல தேசத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக குறிப்பிடுகின்றன [10]

காலவரிசை தொகு

பெல்லாரியைச் சுற்றி ஏராளமான புதிய கற்கால தொல்லியல் தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நகரத்திற்கு மிக அருகில் உள்ள சில சாம்பல் மேடுகள், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள சங்கனகல்லு, புத்திஹால், குடிதினி, தெக்கலகோட்டை, கிரேகுட்டா, குப்கல், ராய்ச்சூர் மாவட்டத்தில் மஸ்கி ,அனந்தபுரம் மாவட்டத்தில் பால்வாய் & வேல்புமுடுகு ஆகியவை. இந்த சாம்பல் மேடுகள் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கால்நடை மேய்ப்பவர்களால் செய்யப்பட்ட சடங்குகளின் சாணம் குவிந்து எரிக்கப்பட்டது.
1,000 ஏக்கர் (4.0 கிமீ2) பரப்பளவில் பரந்து விரிந்துள்ள சங்கனக்கல்லு குடியிருப்பு, பெல்லாரியைச் சுற்றி அறியப்பட்ட மிகப் பெரிய புதிய கற்கால வளாகங்களில் ஒன்றாகும்.

சான்றுகள் தொகு

 1. "Sloth Bear Foundation". Archived from the original on 11 October 2008.
 2. "Legends behind the Indian states".
 3. "South Indian Inscriptions, Vol VI – Inscriptions of Kulottunga-Chola I". பார்க்கப்பட்ட நாள் 10 October 2007.
 4. "South Indian Inscriptions, Addenda, II-Inscriptions at Vijyanagara". பார்க்கப்பட்ட நாள் 10 October 2007.
 5. "South Indian Inscriptions, Tanjavur Brihadhiswara Temple Inscriptions". பார்க்கப்பட்ட நாள் 10 October 2007.
 6. "Sloth Bear Foundation". Archived from the original on 11 October 2008."Sloth Bear Foundation". Archived from the original பரணிடப்பட்டது 2008-10-11 at the வந்தவழி இயந்திரம் on 11 October 2008.
 7. "South Indian Inscriptions, Miscellaneous inscriptions in Kannada, Vol IX – Part – I, Yadavas". பார்க்கப்பட்ட நாள் 10 October 2007.
 8. "South Indian Inscriptions, Miscellaneous inscriptions, Vol IX – Part – I, Chalukyas of Kalyani". பார்க்கப்பட்ட நாள் 16 December 2007.
 9. "South Indian Inscriptions, Vol III, Bombay Karnataka Inscriptions, Geographical Divisions". பார்க்கப்பட்ட நாள் 10 October 2007.
 10. "South Indian Inscriptions, Miscellaneous inscriptions in Kannada, Vol IX – Part – I, Yadavas". பார்க்கப்பட்ட நாள் 10 October 2007."South Indian Inscriptions, Miscellaneous inscriptions in Kannada, Vol IX – Part – I, Yadavas". Retrieved 10 October 2007.
 11. "Early village unearthed". பார்க்கப்பட்ட நாள் 22 July 2010.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்லாரியின்_வரலாறு&oldid=3371265" இலிருந்து மீள்விக்கப்பட்டது