பேசுதல் திறன்:

பேசுதல் திறன்தொகு

பேச்சின் பல்வேறு பரிமாணங்களை புரிந்து கொள்ள குழந்தைகளின் பேச்சுகளை கேட்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். குழந்தைகளின் பேச்சினை வகுப்பறை வளமாக பயன்படுத்த நினைக்கும் எந்த ஒரு ஆசிரியரும் தனது குழந்தைகள் வகுப்பறையில் பேசுவதற்கான சாதகமான சூழலை உருவாக்கவேண்டும்.பின்வரும் ஐந்து விதமான வாய்ப்புகளை தமது வகுப்பறையில் ஏற்படுத்தி குழந்தைகள் பேசுவதற்கு ஊக்கப்படுத்த லாம் . 1.தன்னைப்பற்றி தானே பேசிக்கொள்வதற்கான வாய்ப்புகள் 2பள்ளியின் பல்வேறு பொருட்கள் குறித்து பேசிக்கொள்வதற்கான வாய்ப்புகள் 3படங்களை பற்றி பேசுதல் 4.கதைகளைக் கேட்டல் ,அவற்றைப்பற்றி பேசுதல் 5நடிக்க வைத்தல் \ குழந்தைகள் பேசுவதற்கு இது போன்ற பயிற்சிகள் தேவைப்படுகிறது.குழந்தையின் சமூக ஆளுமையையும் ,அது சமூகத்தில் நடந்து கொள்ளும் விதத்தையும் வடிவமைப்பதில் பேச்சு என்பது முக்கியமான வளமாக இருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேசுதல்_திறன்:&oldid=2342004" இருந்து மீள்விக்கப்பட்டது