சதம மீட்டர் என்ற சொல்லை cubic meter என்ற பொருளில் பயன்படுத்தி உள்ளதாக நினைக்கிறேன். அப்படி என்றால் சுருக்கமாக எழுதும் போது கன சமீ என்று எழுதலாம். சமீ3 என்ற குறி தவறு என நினைக்கிறேன். மீ3 என்று மட்டும் எழுதினால் போதுமானது; சமீ என்பதை சதுர மீட்டர் என்று குழப்பிக்கொள்ளவும் நேராது. வேறு ஏதேனும் சுருக்கம் காண முயலலாமா..cubic meterக்கு TVU தளத்தில் கன சதுர மீட்டர் என்று கொடுத்திருக்கிறார்கள்.--ரவி (பேச்சு) 09:50, 5 அக்டோபர் 2005 (UTC)Reply

இல்லை ரவி, சதம மீட்டர் என்பது centimeter. எனவே கன சதம மீட்டர் என்பது cubic centimeter ஆகும். சமீ3 சரிதான். அது cm3 என்பதைக் குறிக்கும். கன சதுர மீட்டர் என்று TVU தளத்தில் இருந்தால் அது எழுத்துப் பிழையாக இருக்கும். கன சதுர மீட்டர் என்பது cubic square meter எனவரும். cubic, square இரண்டும் ஒன்றாக வராது. Mayooranathan 14:11, 5 அக்டோபர் 2005 (UTC)Reply

ஓ..சதமம் என்றால் centi என்பதை மறந்து விட்டேன் :) cubic என்பதற்கு கன சதுரம் என்று tvu தளத்தில் பொருள் கொடுத்து இருக்கிறார்கள். எனினும் சதமம் போன்ற சொற்களை பயன்படுத்தாமல் மெட்ரிக் பெயர்களையே பயன்படுத்தலாம் என்பது என் தனிப்பட்ட விருப்பம். இது பற்றி அனைவரும் கருத்துக்களை தெரிவித்தால், நடைக் கையேட்டில் சேர்க்கலாம். இந்தப் பக்கத்தில் சதமம், தசமம் போன்ற இன்ன பிற சொற்களையும் நீங்கள் சேர்க்க இயலுமானால் நன்றாக இருக்கும் --ரவி (பேச்சு) 14:40, 5 அக்டோபர் 2005 (UTC)Reply

சதம் என்றால் நூறு. சதமம் என்றால் நூற்றில் ஒன்று என்று பொருள் தருமா? ஹெக்டா என்பதை எவ்வாறு அழைப்பது? இரவி குறிப்பிட்டதைப் போல் மெட்ரிக் அளவுகளை உள்ள படியே அழைக்கலாம் என்பது என் கருத்து.-சிவகுமார் 15:01, 5 அக்டோபர் 2005 (UTC)Reply

நடைக்கையேட்டு ஐயம்

தொகு

மில்லிமீட்டர் போன்ற சொற்களுக்கு சுருக்கம் எழுதும்போது மி.மீ என்று குறிப்பிட வேண்டும் என்பது என் கருத்து. மிமீ என்று புள்ளி வைக்காமல் எழுதும் வழக்கம் ஆங்கிலத்தில் இருப்பது போல் தமிழில் இருக்கிறதா என தெரியவில்லை. அப்படி எழுதுவது குழப்பத்தையும் ஏற்படுத்தலாம். மி.மீ என்று எழுதுவதாகவே வைத்துக்கொண்டாலும் அதை பெயரிடல் மரபு பக்கத்திற்கு ஏற்ப மி. மீ என்று புள்ளிக்கு அடுத்து இடம் விட்டு எழுத வேண்டுமா என தெளிவு படுத்துவதும் அவசியம். கட்டுரைகளில் மி.மீ என்று குறிப்பிடுவது தான் வழக்கமாக இருக்கும் என்பதால் கட்டுரை பெயரையும் அவ்வாறே வைக்கலாம் என்பது என் கருத்து--ரவி (பேச்சு) 15:01, 5 அக்டோபர் 2005 (UTC)Reply


அடர்த்தி எதிர் செறிவு

தொகு

அடர்த்தியும் செறிவும் ஒரே கருத்துடையவையா? அப்படியாயின் திணிவுச் செறிவு(Mass Concentration), மூலக்கூற்றுச் செறிவு(Molar Concentartion), கனவளவுச் செறிவு(volume Concentraion) முதலானவற்றில் திணிவுச் செறிவு தான் அடர்த்தியாகக் கருதப்படுகிறது. கருத்துக் கூறவும்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 09:51, 25 ஏப்ரல் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அடர்த்தி&oldid=750590" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அடர்த்தி" page.