பேச்சு:அப்துல் சத்தார் எதி

Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by ஞா. ஸ்ரீதர்

வணக்கம் @Balu1967: இந்தக் கட்டுரையினை மிக விரிவாக எழுதியமைக்கு நன்றி. பின்வரும் கருத்துக்களை காணவும் நன்றி ஸ்ரீ (✉) 05:41, 17 திசம்பர் 2019 (UTC)Reply

//பொது நிதியுதவியின் உதவியால், எதியின் அறக்கட்டளை ரூ .200,000 வசூலிக்க முடிந்தது. அவர் மற்ற மருத்துவ துறைகளுக்கு நம்பிக்கையை விரிவுபடுத்தினார். மேலும் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம், ஒரு மகப்பேறு இல்லம் மற்றும் அவசர ஆம்புலன்ஸ் சேவையை நிறுவினார். தனது அடித்தளத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது எதிக்கு ஒரு வாடிக்கையாக அமைந்தது. அவரது அடித்தளம் மிகவும் உன்னதமான காரணங்களுக்காக பணத்தை திரட்டியது. எதி அறக்கட்டளை கைவிடப்பட்ட சடலங்களை புதைப்பது அல்லது பேரழிவு நிவாரணத்திற்கு உதவுவது போன்ற ஒவ்வொரு மனிதாபிமான காரணங்களுக்கும் ஒரு ஒதுக்கீட்டை ஒதுக்கியது.//

பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியுதவியின் மூலமாக ரூபாய் 2 இலட்சம் எதி தொண்டு நிறுவனத்திற்கு கிடைத்தது. மேலும் இவரின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலமாக ஒரு மகப்பேறு இல்லம் மற்றும் அவசர முதலுதவி வண்டி போன்ற மற்ற மருத்துவ சேவைகளையும் இவரின் தொண்டு நிறுவனம் செய்தது. தனது தொண்டுநிறுவனத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் இவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். மக்களுக்கு சேவையாற்றும் உன்னதமான நோக்கத்திற்காக இவரின் தொண்டு நிறுவனம் மக்களிடம் நிதியுதவி திரட்டியது. எதி அறக்கட்டளை உறவுகள் அல்லாத சடலங்களை புதைப்பது அல்லது பேரழிவுகள் போன்ற நிவாரணத்திற்கு உதவுவது போன்ற ஒவ்வொரு மனிதாபிமான காரணங்களுக்கும் இவர்களின் தொண்டு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையினை ஒதுக்கியது. With the help of public funding, Edhi's trust was able to collect Rs.200,000. He expanded the trust to other medical fields and through hard work and diligence, he went on to establish a maternity home and an emergency ambulance service. Edhi made it a habit to involve himself in every aspect of his foundation. His foundation raised money for most noble causes. The Edhi foundation had allotted a quota for each humanitarian cause, whether it was burying abandoned corpses or aiding in disaster relief.

//அடுத்த அறுபது ஆண்டுகளில், அவர் பாக்கித்தானில் பொதுநல முகத்தை ஒற்றைக் கையால் மாற்றினார்.//

அறுபது ஆண்டு காலங்களில் தனிமனிதராக பாக்கித்தானின் ஆக்கநலப் பணிகளின் அடையாளத்தினையே மாற்றினார். over the next sixty years, he single-handedly changed the face of welfare in Pakistan.

Return to "அப்துல் சத்தார் எதி" page.