அரவான் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

வாசிக்க நடை, நன்றாக உள்ளது. நன்றி. தலைப்புத் தெரிவும் நன்று. --Natkeeran 05:14, 26 நவம்பர் 2010 (UTC)Reply

நன்றி நக்கீரன், ஏதேனும் திருத்தம் தேவைப்பட்டால் சொல்லுங்கள்... அன்புடன் ---சாந்த குமார் 06:02, 26 நவம்பர் 2010 (UTC)Reply

சோடாபாட்டில் குறிப்புகள் தொகு

விக்கியாக்கம் தொகு

  • கட்டுரைக்கு மேலுள்ள ”the capital city of Armenia'க்கு, காண்க Yerevan.” நீக்கி விடுங்கள். இது ஆ. விக்கிக்கு மட்டும் பொருத்தமானது. த. விக்கிக்கானதல்ல

முன்னுரை தொகு

  • எ. பிழை - ”இதிகாசமாசமான ” ->இதிகாசமான
  • இந்தோனேசியாவிலும் அறியப்படுகிறது (இங்கு Irawan என்று உச்சரிக்கப்படுகிறது). விகுதி பொதுமை தேவை. அரவானை அவர்/அவன் என்று எடுத்துக்கொண்டு கட்டுரை முழுவதும் அதனையே பயன்படுத்தவேண்டும். வெவேறு இடங்களில் அது/அவர் என்று வேறுமாதிரி எழுதக்கூடாது.
  • பிழை - spelled is not "உச்சரிக்கப்படுகிறது". its எழுத்துக்கூட்டப்படுகிறது

பெயர் வரலாறு தொகு

  • professor of religion = சமயத்துறைப் பேராசிரியர் ("சார்ந்த" தேவையில்லை)
  • The French Indologist = பிரெஞ்சு இந்தியவியலாளர். not இலக்கிய அறிஞர்
  • Madeleine Biardeau = மடிலைன் பியார்டூ
  • Biardeau concludes = என்ற முடிவுக்கு வருகிறார்; என்று சொல்கிறார். (”இறுதி வடிவம் ” பொருந்தாது). இங்கு conclusion என்பது “முடிவுரை” என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • elsewhere = வேறு இடங்களில் (முந்தைய வாக்கியத்தில் வரும் மகாபாரத்திலிருந்து வேறு படுத்திக் காட்ட இந்த "elsewhere" பயன்படுத்தப்பட்டுள்ளது
  • Aravan's stepmother and Arjuna's wife = அரவானின் மாற்றாந் தாய் மற்றும் அருச்சுனனின் மனைவி

உருவ விளக்கம் தொகு

  • இந்த காரைப் பற்கள் என்பது - இங்கே “என்பது” தேவையில்லை
  • Some paintings also depict the sacrifice of Aravan. = அரவானது தியாகத்தையும் சில ஓவியங்கள் சித்தரிக்கின்றன. (the focus is on aravan and not sacrifice, the current version's back translation reads - Aravan is also depicted in some paintings depicting sacrifices)
  • அல்லது சௌகார்பேட்டையில் உள்ள ஒரு ஓவியத்தில் தெய்வத்திற்கு வழங்குவதற்காக வாள் மற்றும் தனது வெட்டுண்ட தலையை கையில் பிடித்து கொண்டு அரவானின் தலையில்லாத உடல் நிற்பது போன்று உள்ளது.
இவ்வரிகள் செள்கார்பேட்டை ஓவியத்தில் மட்டும் இக்காட்சி உள்ளது போன்ற பொருள் தருகின்றன. செளகார்பேட்டை ஓவியம் ஒரு எ. கா மட்டுமே (as in one sowcarpet painting). எனவே இரு வேறு காட்சி மரபுகள் உள்ளன; இரண்டாம் மரபுக்கு எ. கா செளகார்பேட்டை ஓவியம் என்று பொருள்படும்படி மாற்றப்பட்டவேண்டும்

வரலாற்று ரீதியான மேம்பாடு தொகு

  • இங்கு development என்பது “மேம்பாடு” என்ற பொருளில் வராது; மாற்றம்/பரிணாமம் என்ற பொருளில் வரும்
  • epic = காப்பியம் என்ற சொல்லை பயன்படுத்துங்கள் (கட்டுரை முழுவதும்)
  • reciters = உச்சரிப்பவர்கள்; கதை சொல்பவர்கள்; உபசரிப்பு என்பது தவறு
  • dynamic text என்பதை அப்படியே “இந்த மாறக்கூடிய எழுத்துகளின் ” என்று மொழி பெயர்க்கக்கூடாது, ”மாறும் தன்மையுடைய மகாபாரதம்” என்ற பொருளில் வருகிறது.
  • ”நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த பாணினி (Panini) என்பவரின் இலக்கணக் கையேடான அட்டாத்தியாயி (Ashtadhyayi) என்ற நூலும் இத்தகைய மேற்கோள் குறிப்பிடும் ஒரு நூலாகும்.” இங்கு மூலத்தில் உள்ள “may" என்ற அர்த்தம் விட்டுப் போயுள்ளது.
  • குப்தர்கள் காலத்தின் முற்பகுதியிலேயே (நான்காம் நூற்றாண்டில்) சமசுகிருத எழுத்துக்கள் ஒரு முழு வடிவம் அடைந்தன என மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கும் அர்த்தம் மாறுகிறது. the sanskrit text என்று குறிப்பிடப்படுவது மகாபாரதம்; பொதுவான சம்சுகிருத எழுத்துக்கள் அல்ல
  • அசல் வடிவத்திற்கு மீண்டும் மாற்ற நினைப்பது பயனற்றது = மூல வடிவத்தை மீண்டும் உருவாக்க நினைப்பது பயனற்றது. (reconstruct !=change)
  • also with a text history from the late Vedic through the Gupta periods = பிந்தைய வேத காலத்திலிருந்து குப்தர் காலம் வரை எழுத்து வரலாற்றை உடையது என்று கருதப்படும்
  • புராணத்துக்கு புனித நூல் என்ற அடைப்பு விளக்கம் தேவையில்லை. இதே போல தமிழ்ச் சொற்களுக்கு ஆங்கில மூலத்தினை அடைப்புகளில் தரத் தேவையில்லை. ஆங்கில அடைப்பு விளக்கம் புதிய கலைச் சொற்கள்/வேற்று மொழிப் பெயர்ச்சொற்கள் ஆகியவற்று மட்டும் தந்தால் போதுமானது.
  • CE என்றால் கிபி. நூற்றாண்டைக் குறிக்கும் போது கிமு வா கிபியா என்ற வித்தியாசம் தேவை
  • மகாபாரதத்தின் தமிழ் பதிப்பில் = பதிப்புகளில் (plural)
  • Hiltebeitel relates this to the South Indian glorification of "heroic" self-mutilation and self-decapitation before a goddess = ஹில்டிபெய்டல் இதனைப் பெண் கடவுளுக்கு முன்னர் தன்னைத் தானே வெட்டிக் கொள்வதையும், தலையறுத்துக் கொள்வதையும் உயர்வாகக் கருதும் தென்னிந்திய மரபோடு தொடர்பு படுத்துகிறார்.
  • Aravan Kalappali (or Aravan Kalabali) இங்குள்ள or தமிழைப் இரு விதங்களாக ஆங்கிலத்தில் எழுத்துப்பெயர்க்க முடியும் என்பதை விளக்குவதற்கு இடப்பட்டுள்ளது. நாம் தமிழ் மூலச் சோல்லைப் பயன்படுத்தும் போது, ஒரு வடிவத்தைத் தந்தால் போதுமானது.
  • தற்கால புரிதல் விளக்கத்தின் படி, அரவான் தனது தலையை வெட்டிக்கொண்டு தியாகம் செய்த பிறகும் போரினைக் காண முடிந்ததால் மறு உருவாக்கம் மற்றும் தொடர்ச்சி ஆகிய கருத்துகளையும் குறிப்புணர்த்துகிறது - எது?
பிரித்தெழுதாதால் நேரும் குழப்பம். பின்வருமாறு இருக்க வேண்டும் - தற்காலப் புரிதல்களில் அரவானுடைய தலை தியாகத்தை மட்டுமல்லாமல், தொடர்ச்சி மற்றும் மீண்டெழுதல் ஆகிய கருத்துகளையும் குறிக்கிறது. தலையை இழந்து தியாகம் செய்த பின்னரும் அவரால் போரினைக் காணமுடிவதே இதற்குக் காரணம்.
  • Iramacamippulavar = இராமசாமிப்புலவர். (Tamil IAST மரபுகளை வாசித்துக் கொள்ளுங்கள்)
  • Indologist - இந்தியவியல். (கூகுள் எந்த அகராதியையை பயன்படுத்துகிறது?)

மகாபாரதம் தொகு

பயனரா அரவான் தொகு

கட்டுரையாக இருக்கும் இந்தப்பகுதியை பயனர் என்ற பக்கத்தில் தொகுத்திருக்கின்றீர்களே!. சிறப்பான காரணம் ஏதேனும் உண்டா!...

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

இது கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டக்கட்டுரை. திட்டத்தின் விதிமுறைகளுக்கு இணங்க மொழிபெயர்ப்பாளர்களின் பயனர்வெளி (பயனர்/abc என்ற பக்கங்கள் பயனர்வெளியினைக் குறிக்கின்றன. அவை மையவெளியைப் போன்று பொதுவில் கிடையாது. drafting space போன்றவை) வைக்கப்பட்டு திருத்தங்கள் முடிந்த பின்னரே மையவெளிகு நகர்த்தப்படும். மேலும் விவரங்களுக்குக் காண்க விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு--சோடாபாட்டில்உரையாடுக 17:22, 25 சனவரி 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அரவான்&oldid=2262491" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அரவான்" page.