பேச்சு:அறுபது ஆண்டுகள்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்

ஒவ்வொரு ஆண்டின் அர்த்தத்தையும் சேர்த்தால் நன்றாக இருக்கும். பாலாஜி (பேச்சு) 08:04, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply

இவற்றைத் தமிழ் ஆண்டுகள் என்று எவ்வாறு சொல்வது? வடசொற்களே இப்பெயர்களுள் நிறைந்துள்ளன. அத்துடன், கிரந்த எழுத்துகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், மெய்ம்மயக்க விதிகளும் மீறப்பட்டுள்ளன (எ-டு: சுக்ல, ஸ்ரீமுக, ஈஸ்வர, விஷு, சர்வசித்து, சர்வதாரி, விஜய). --மதனாகரன் (பேச்சு) 08:22, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply

இவை தமிழ் ஆண்டுகள் குறிப்பிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தனையும் சமசுகிருதச் சொற்கள். வேண்டுமானால், இவற்றை வடமொழி ஆண்டுகள் என்று குறிப்பிடலாம்.--பாஹிம் (பேச்சு) 11:34, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply

அல்லது இந்து ஆண்டுகள் என்று குறிப்பிடலாமா? இந்து மதத்தவர்களால் மட்டுமா இவ்வாண்டு முறைமை கடைப்பிடிக்கப்படுகின்றது? --மதனாகரன் (பேச்சு) 11:37, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply

இந்துக்கள் மாத்திரம் பயன்படுத்துவதாகத்தான் நானும் நினைக்கிறேன். எனினும் இந்து ஆண்டுகள் என்றழைப்பது பொருந்துமா என்பது தெரியவில்லை. ஏனெனில், இந்து என்ற பெயரில் ஒரு தனி மதம் இல்லையே. பல்வேறு மதங்களின் கூட்டுக் கலவைதான் இந்து என்பது. சைவர்களும், வைணவர்களும், கபாலீசுவரர்களும் என எல்லா இந்துக்களுமே கடவுட் கொள்கை உட்படப் பல்வேறு அடிப்படைக் கோட்பாடுகளில் வேறுபடுகின்றனரே.--பாஹிம் (பேச்சு) 11:44, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply

இக்கட்டுரையைப் பாருங்கள். இந்து ஆண்டுகள் என்றே குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். வேறுபாடுகள் இருப்பின், அவற்றையும் கட்டுரையினுள்ளேயே குறிப்பிட்டு விடலாம். --மதனாகரன் (பேச்சு) 11:57, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply

சரிதான். இந்து ஆண்டுகள் என்று குறிக்கலாம்.--பாஹிம் (பேச்சு) 12:00, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply

இதையாவது நகர்த்தலாமா? :) --மதனாகரன் (பேச்சு) 12:09, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply

60 ஆண்டுகளின் பெயர் பட்டியலில், திருவள்ளுவர் ஆண்டுகளை சேர்க்கலாம்? --எறும்பு (பேச்சு) 04:32, 18 ஆகத்து 2013 (UTC)Reply

👍 விருப்பம், ஏற்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:01, 18 ஆகத்து 2013 (UTC)Reply

பார்க்கவும் தொகு

கட்டுரையில் அபிதான சிந்தாமணியில் (1932) தமிழ் ஆண்டுகள் என்று கூறப்பட்ட ஆண்டுகள் பெயர்கள். என்று விளக்கமாக கூறப்பட்டுள்ளது. அதாவது அபிமான சிந்தாமணி எனும் நூலில் கூறப்பட்டுள்ள ஆண்டுகளின் பெயர்கள். அவை தமிழ் பெயர்களாகவும் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அந்நூலில் எவ்வாறு கூறப்பட்டுள்ளது என்பதைத் தான் குறிப்பிட வேண்டும். ஏனெனில் விக்கிப்பீடியா ஒரு மூன்றாவது தரவுத் தளம். ஒன்றில் "இவ்வாறு எழுதப்பட்டுள்ளது" என்பதை மேற்கோள்கள் மற்றும் சான்றுகளோடு தொகுத்து வைப்பதற்கான இடம்.−முன்நிற்கும் கருத்து 219.77.138.138 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

மேலும் சில விளக்கங்கள் தொகு

தவிர அவை தமிழா, அல்லது வேற்று மொழியா என்பதை ஆய்வுசெய்வதல் வரலாற்றாய்வாளர்களின் பணி. அப்பெயர்கள் தமிழ் அல்லாமலே இருந்தாலும் அவை ஒரு காலக்கட்டத்தில் தமிழ் ஆண்டுகளாக குறிக்கப்பட்டிருந்தால், அல்லது தமிழர்கள் அவற்றை தமிழ் ஆண்டுகளாக வகைப்படுத்தியிருந்தால் அதுவும் அவ்வாறே இடம் பெறவேண்டும். மதனாஹரன் எனும் பெயர் தமிழ் இல்லையென்பதால் நாளை மதனாஹரன் தமிழ் இல்லையென்றாகிவிடுமா என்ன?

தமிழில் காணப்படும் ஒரு சொல் சமசுகிரதத்திலும் காணப்பட்டால் சரியான ஆய்வு எதுவும் இன்றி உடனே அது சமசுகிரதச் சொல் என்ற விட்டுவிடும் குணமே பெரும்பான்மை தமிழார்வளர்களிடம் காணப்படுகின்றன. உண்மையில் இன்று சமுசுகிரதம் என பலர் கருதும் எண்ணற்றச் சொற்கள் ஆய்வுகளின் பின்னர் தமிழாக இருப்பதும் அறியக்கிடைக்கிறது. இங்கே யுகம் எனும் சொல் தமிழ் உகம் சொல்லில் இருந்து உகம்> உக > யுகம் > யுகா என வடமொழியில் மருவியுள்ளதை நான் மதிக்கும் இராம.கி ஐயா எடுத்துக்காட்டுவார். இப்படி எண்ணற்றவை உண்டு.

கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் தமிழரின் நிலங்களை ஆட்சி செய்த ஆங்கிலேயரின் மொழியில் நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்கள் கலந்திருக்கும் போது, பார்க்க: [1] ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உறவும் பகையும் ஆக ஒரே நிலப்பரப்புக்குள் இருந்த சமகிருதத்தில் எத்தனை தமிழ் சொற்கள் கலந்திருக்கும் என்று சிந்திக்க வேண்டும்.−முன்நிற்கும் கருத்து 219.77.138.138 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

--- அபிதான சிந்தாமணியிற் தமிழ் ஆண்டுகள் என்று குறிப்பிட்டுவிட்டாலே அது ஆதாரமாகிவிடாது. தமிழ் ஆண்டுகளாயின் தமிழ்ப் பெயர்கள் இருந்தாக வேண்டும். கட்டுரையை வேண்டுமானால் அபிதான சிந்தாமணியிற தமிழ் ஆண்டுகளெனக் குறிப்பிடும் ஆண்டுகள் என நகர்த்தலாம். மாறாக, ஆட்களின் பெயர்களும் தூய தமிழ்ச் சொற்களும் ஒன்று போலிருக்க வேண்டுமெனக் கருதுவது தவறு. எத்தனை சமசுகிருதச் சொற்கள் கலந்தாலும் அவை தமிழ்ச் சொற்களாக மாட்டா. இங்கு கட்டுரையில் இருக்கும் சொற்களைத் தமிழ்ச் சொற்களென ஏற்பதாயின் தமிழ் இலக்கணத்திற் பயனற்றுப் போகும்.--பாஹிம் (பேச்சு) 13:26, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply


பார்க்கவும் [2] & தமிழ் ஆண்டுப்பெயர்கள் தமிழில் இரண்டு கட்டுரையையும் ஒன்றிணைத்து தமிழ் ஆண்டுகள் என்ற தலைப்பிலான கட்டுரையில் தமிழ்ப் பெயர்கள், இணையான சமஸ்கிருதப் பெயர்கள் என அட்டவணைப்படுத்தலாம் என்பது எனது கருத்து--சண்முகம்ப7 (பேச்சு) 14:05, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply
தமிழ் மொழி வளராமல் இருப்பதறகு காரணம் தமிழ் தீவிரவாதிகள்தான். இப்படி சமஸ்கிரதமா தமிழா என்று சண்டை போடாமல் அதன் அர்தங்கள் எளிய தமிழில் ஆண்டுகளின் அருகில் கொடுத்தால் நன்றாக இருக்கும். ஆங்கிலம் ஆலமரமாக விழுது விட்டு நிற்பதற்கு காரணம் வேற்று மொழிகளில் இருக்கும் சொற்களை ஏற்றுக்கொள்வதால்தான். மக்களுக்காக மொழியே தவிர மொழிக்காக மக்கள் அல்ல. பாலாஜி (பேச்சு)

பாலாஜி, நீங்கள் தமிழ்த் தீவிரவாதிகள் என்று தமிழ் ஆர்வலர்களை நோக்கிக் கூறுவது தவறு. அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அடுத்தது, தமிழ் ஆண்டுகள் என்பதும் வடமொழி ஆண்டுகளின் தமிழ் மொழிபெயர்ப்பு என்பதும் ஒன்றாக மாட்டா. அவை எப்போதும் வெவ்வேறாகத்தான் இருக்கும். எனவே, இந்தக் கட்டுரையில் இருப்பவை தமிழ் ஆண்டுகளென ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை.--பாஹிம் (பேச்சு) 02:41, 2 செப்டெம்பர் 2012 (UTC)Reply

தமிழ் தீவிரவாதிகள் வன் சொல் பாவனையினை வன்மையாகக் கண்டிக்கிறேன். மாற்றுக் கருத்து இருந்தால் பக்குவமாகத் தெரிவியுங்கள். --Anton (பேச்சு) 02:55, 2 செப்டெம்பர் 2012 (UTC)Reply

பெயர் குறிப்பிட விரும்பாத ஆங்காங்கு நாட்டுப் பயனரே! தாங்கள் தங்களுடைய பெயரைக் குறிப்பிட்டே கருத்தைக் கூறலாமே! Anton, ஏற்கனவே பலர் தமிழ்த் தீவிரவாதிகள், தமிழ்த் தாலிபான்கள் என்று தமிழ் ஆர்வலர்களை நோக்கிக் கூறி விட்டார்கள். இதையெல்லாம் நாம் பொருட்படுத்தவே தேவையில்லை. சண்முகம்ப7 கூறியது போலச் செய்யலாம் என்பது எனது பரிந்துரை. --மதனாகரன் (பேச்சு) 03:53, 2 செப்டெம்பர் 2012 (UTC)Reply
மேலே குறிப்பிட்டபடி [3] & தமிழ் ஆண்டுப்பெயர்கள் தமிழில் இரண்டு கட்டுரையையும் ஒன்றினைக்கும் முடிவு எடுத்தால் ஒரு வேண்டுகோல். பல தமிழ் வருட பெயர்களின் அர்த்தம் பல மக்களுக்கு தெரியாது. அதனால் இன்னொறு செங்குத்து வரிசையில் எளிய தமிழில் விளக்கம் அளித்தால் பல மக்களுக்கு உதவும். நன்றாக தமிழ் தெரிந்தவர் இதற்கு உதவ வேண்டுகிறேன்.--பாலாஜி (பேச்சு)

//பல தமிழ் வருட பெயர்களின் அர்த்தம் பல மக்களுக்கு தெரியாது.// இங்கே கட்டுரையிற் குறிப்பிடப்பட்டுள்ளவை தமிழ்ப் பெயர்களேயல்ல.--பாஹிம் (பேச்சு) 07:23, 2 செப்டெம்பர் 2012 (UTC)Reply

தாங்கெழில், விரிமாண்பு, காதன்மை, கீழறை இவை யாவும் தமிழ் வருட பெயர் (எ.க)... இவைகளுக்கு அர்த்தம் ஏதேனும் உண்டா என்று எனக்கு தெரியவில்லை. இது வெறும் எடுத்துக்காட்டு தான்.பாலாஜி (பேச்சு)

ஒரு மொழி தனித்தன்மையுடன் நீண்டகாலம் நிலைத்து வாழ்வதற்கு, பிற மொழி கலப்பினம் இல்லாததால் தான். தமிழ் மொழி அவ்வாறாக நிலைத்து வாழ்ந்து வந்துள்ளது. கடந்த சில நூற்றாண்டில் வடமொழி வார்த்தைகள் தமிழில் அதிகமாக புகுத்தப்பட்டன. தமிழ் வருடங்கள் என இங்கே பட்டியலிடப்பட்டவை தமிழில் புகுத்தப்பட்டவையே. ஆகையால் இவற்றை தமிழ் வருடங்கள் என குறிப்பிடுவது முறையாகாது. தமிழர்கள் இன்று ஆங்கில மாதங்களையே நடைமுறையில் பயன்படுத்துவதால் அவற்றை தமிழ் மாதங்கள் என கூற முடியாது. தமிழில் அர்த்தப்படுத்தி குறிப்பிட்டால் கூட இவற்றை தமிழ் வருடங்கள் என கூறக் கூடாது. - அசோக் குமார் (பேச்சு).   விருப்பம்--Kanags \உரையாடுக 12:42, 26 செப்டெம்பர் 2012 (UTC)Reply

தமிழ் ஆண்டுகள் தோன்றிய கதையாகக் கூறப்படுவது தொகு

நாரதர் ஒருமுறை ,'கடவுள்' கிருஷ்ணனிடம் "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டார். அதற்குக் கிருஷ்ணன், "என்னை மனத்தில் நினைக்காமல் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றானாம். இதற்கு நாரதன் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதன் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர்மீதே மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றார். கிருஷ்ணன் நாரதன் "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதன் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். . பின் 'கடவுள்' கிருஷ்ணனுடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு , அறுபது பிள்ளைகளைப் பெற்றனர். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்கள். (ஆதாரம்: அபிதான சிந்தாமணி - 1392ஆம் பக்கம்)

மேலே அபிதான சிந்தாமணியில் சொல்லப்பட இவை தமிழ் ஆண்டுகளா?((ஆதாரம்: அபிதான சிந்தாமணி - 1392ஆம் பக்கம்))-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:44, 2 செப்டெம்பர் 2012 (UTC)Reply

கிருஷ்ணன் தமிழ்க் கடவுளா? வட இந்தியக் கடவுளா? (நகைச்சுவையாக மாத்திரம் எடுத்துக் கொள்ளவும்) :-)--Anton (பேச்சு) 13:30, 2 செப்டெம்பர் 2012 (UTC)Reply

தலைப்பு மாற்றம் தொகு

இக்கட்டுரையை தமிழர் பின்பற்றும் ஆண்டுமுறை எனக் குறிப்பிடலாம். இதற்கு மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும். --இராஜ்குமார் (பேச்சு) 09:37, 16 ஏப்ரல் 2013 (UTC)

தமிழர் பின்பற்றும் ஆண்டு முறை என்றால் மிகப் பொதுவானதாகி விடுகிறது. ஆனால், தமிழ் முஸ்லிம்களோ தமிழ்க் கிறித்தவர்களோ இந்த ஆண்டு முறையைப் பின்பற்றுவதில்லை. தமிழ் இந்துக்கள் மட்டுமே பின்பற்றுகின்றனர். எனவே, மேற்படி பரிந்துரையை ஏற்க முடியாது.--பாஹிம் (பேச்சு) 09:54, 16 ஏப்ரல் 2013 (UTC)

தமிழ் இந்துக்கள் பின்பற்றும் ஆண்டுமுறை எனலாமா? --இராஜ்குமார் (பேச்சு) 20:36, 16 ஏப்ரல் 2013 (UTC)
பாஹிம் "தமிழ் முஸ்லிம்கள்" என்ற புதிய வார்த்தையை எழுதியிருக்கிறார். வாழ்த்துகள். இலங்கை முஸ்லிம்கள் இதனை ஏற்றுக் கொண்டுள்ளார்களா என அவரே தெரிவிக்க வேண்டும். அவர்கள் தம்மைத் தமிழர் என அடையாளப்படுத்துவதில்லை என்றே நான் நினைத்திருந்தேன். இலங்கை அரசு அதிகாரபூர்வமாக சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு என்று தான் எழுதுகிறது. பௌத்த, இந்துப் புத்தாண்டு என எழுதுவதில்லை. ஆட்சியில் பங்கு வகிக்கும் தமிழ் முஸ்லிம்கள் இதனை அரசிடம் கேட்க வேண்டும்.--Kanags \உரையாடுக 21:19, 16 ஏப்ரல் 2013 (UTC)

விக்கிப்பீடியா நிச்சயமாக ஆராய்ச்சிக்கான இடம் இல்லை. நிலவும் தரவுகளை பிரதிபலிப்பதே இதன் நோக்கமாகும். இன்றைய நாளில் தமிழக அரசும் இலங்கை அரசும் பிற நாட்டரசுகளும் இவற்றை தமிழாண்டுகளாக ஏற்றிருந்தால் அதனை பதிவு செய்தலே முறையாகும். இவை கடந்த சில நூற்றாண்டுகளில் நுழைக்கப்பட்டவை, வடமொழிச் சொற்களால் ஆனவை என்பவற்றை கட்டுரையில் சேர்க்கலாம். ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து இவை தமிழாண்டுகள் அல்லவென்றாலும் அவை பதிவாக வேண்டும். மேலும் முந்தைய காலகட்டங்களில் இவை தமிழாண்டுகளாக கருதப்பட்டன எனவும் குறிக்கப்பட வேண்டும். உரையாடலை விக்கிக்கு வெளியேத் தொடர வேண்டுகிறேன். --மணியன் (பேச்சு) 03:42, 17 ஏப்ரல் 2013 (UTC)

மணியனின் வழிகாட்டலைப் பின்பற்றலாம். தமிழ் மாதங்கள் கட்டுரை அறிவியல், வரலாற்றுப் பின்னணியோடு எழுதப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு கட்டுரை தற்காலத்தில் நிலவி வரும் கருத்து மாறுபாடுகள் பற்றிக் குறிப்பிடுகிறது. பெயரிடல் குறித்த விரிவான கலந்தரையாடலை ஏற்கனவே பேச்சு:தமிழ்ப் புத்தாண்டு பக்கத்தில் மேற்கொண்டுள்ளோம். இம்மூன்று கட்டுரைகளின் தலைப்புகளிலும் சீர்மை வேண்டும். அல்லது, ஒன்றிணைத்து எழுதுவதும் சிறப்பாக இருக்கும். http://www.tamilpaper.net/?p=5786 கட்டுரை சில குழப்பங்களுக்கு விடை தருகிறது. http://www.jeyamohan.in/?p=35004 குறிப்பிடும் கலைச்சொல்லாக்க விதிகளில் 4, 5, 6 ஆகியவற்றையும் கருத்தில் கொள்ளலாம்.--இரவி (பேச்சு) 05:46, 17 ஏப்ரல் 2013 (UTC)
இங்கு தமிழ் ஆண்டுகள் எனக் கூறப்பட்டுள்ளவை உண்மையில் இந்துக் காலக் கணிப்பு முறையில் உள்ள 60 ஆண்டுகளின் பெயர் தான். பார்க்க: https://en.wikipedia.org/wiki/Hindu_calendar#Year_names . இதே பெயரிடல் இந்தியாவின் வேறு பகுதிகளிலும் உள்ளது. எடுத்துக்காட்டுக்கு, இந்தத் தெலுங்கு ஆண்டின் பெயரும் விசய தான். பார்க்க: http://www.prokerala.com/general/calendar/telugucalendar.php . எனவே, தமிழ் ஆண்டு என்றால் இது தான் என்று வரையறுத்துக் கூறாமல், இந்தப் பெயர்களுக்கான வரலாற்றுப் பின்னணியையும் தற்காலத் தமிழரின் (நாத்திகர்கள், இந்துக்கள் அல்லாத சமயத்தோரின்) மாற்றுப் பயன்பாடுகளையும் குறிப்பிடுவது உதவும். --இரவி (பேச்சு) 05:53, 17 ஏப்ரல் 2013 (UTC)

கனகு, நான் தமிழ் முஸ்லிம் என்று குறிப்பிட்டது இந்தியாவில் தமிழ் நாட்டிலிருக்கும் தமிழின முஸ்லிம்களையே தவிர இலங்கையில் தமிழ் பேசும் சோனகர்களையல்ல. தமிழகத்து முஸ்லிம்கள் தங்களைத் தமிழர்களென்றே அழைக்கின்றனர். அதனைத்தான் நானும் குறிப்பிட்டேன். ஆனால், சோனகர்களைத் தமிழர்களென்று இலங்கை அரசாங்கமோ அல்லது சோனகர்களோ குறிப்பிடுவதில்லை.--பாஹிம் (பேச்சு) 17:41, 19 ஏப்ரல் 2013 (UTC)

இரவி, அப்படியானால் இதனை இந்துகளின் ஆண்டுமுறை என்றவாறே பெயரிடலாம். அனைத்து மொழியில் உள்ள இந்துக்களுக்கு இது பொருந்தும். தமிழ் ஆண்டுகள் என குறிப்பிடுவது நிச்சயம் தவறான ஒரு கருத்து. அதே போல், உள்ளடக்கங்களில் எந்த மொழி, இன மக்கள் இதனை பின்பற்றுகின்றனர், யார் இதனை ஏற்கின்றனர், யார் எதிர்க்கின்றனர், எதற்கு என்று என்னவெல்லாம் நிகழ்ந்ததோ அத்தனையையும் மேற்கோளுடன் தொகுத்து வழங்க வேண்டும். நானும் முடிந்த அளவிற்கு இதில் பங்களிக்கிறேன். --இராஜ்குமார் (பேச்சு) 18:28, 19 ஏப்ரல் 2013 (UTC)
அப்படியென்றால் தமிழ்ப் புத்தாண்டு தலைப்பையும் மாற்றி விடலாமா?--Kanags \உரையாடுக 23:04, 19 ஏப்ரல் 2013 (UTC)

தலைப்பை மாற்றத்தேவையில்லை. மாற்றுக்கருத்துக்களை கட்டுரையில் குறிக்கலாம். --குறும்பன் (பேச்சு) 01:50, 20 ஏப்ரல் 2013 (UTC)

தமிழ்ப் புத்தாண்டு என்ற தலைப்பை மாற்றகூடாது என்பது என் கருத்து. ஏனென்றால் வெவ்வேறு மொழி பேசும் இந்துக்களின் புத்தாண்டுகள் மாறுபடுகின்றன. ஆனால் ஆண்டுமுறை என்பது பொதுவாக அனைவருக்கும் பொருந்துவதாக உள்ளது. இக்கட்டுரையின் தலைப்பையும் மாற்ற வேண்டாம் என்று நானும் கருதுவதாய் உள்ளேன். ஏனென்றால் தமிழர்களிலும் சில சிறு சிறு மதங்கள் உள்ளன. அவர்களும் இதே ஆண்டுமுறைகளையே பின்பற்றுகின்றனர். மேலும் கேரளத்தில் வேறுவிதமாக உள்ளது. குறும்பன் சொல்வதைப்போல் உள்ளடக்கத்தில் மட்டும் குறிப்பிட்டால் போதும். நன்றி. --இராஜ்குமார் (பேச்சு) 08:24, 20 ஏப்ரல் 2013 (UTC)

தலைப்பு மாற்றம், மீண்டும் தொகு

  • விக்கித்தரவில் சம்வத்சரம் எனும் ஆங்கிலக்கட்டுரையுடனேயே இணைக்கப்பட்டுள்ளது. தெலுங்கரும் கன்னடரும் கூடப்பயன்படுத்தும் இவ்வறுபது ஆண்டுப் பட்டியலை தமிழ் ஆண்டுகள் என்பது பொருத்தமல்ல. அறுபது ஆண்டுகள் என்று பெயர் மாற்றப் பரிந்துரைக்கிறேன்.
  • சர்வஜித் என்பது முற்றறிவு என்று தவறாக மொழியாக்கப்பட்டிருக்கிறது. வடமொழி அறிந்தவர்கள் தமிழ்ப்பெயர்களை கொஞ்சம் சரி பார்க்கலாம். சில வடமொழி அகராதிகளை ஆராய்ந்தேன். ஹேவிளம்பிக்கு பொற்றடை என்பது எவ்வாறு பொருந்துகிறது எனத் தெ(ளி)ரிய முடியவில்லை. --5anan27 (பேச்சு) 19:36, 16 ஏப்ரல் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அறுபது_ஆண்டுகள்&oldid=3089720" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அறுபது ஆண்டுகள்" page.