பேச்சு:அலையாத்தித் தாவரங்கள்

பிழையான வழிமாற்று. சதுப்பு நிலம் என்பது marsh - இது குறிப்பான ஒரு வகை ஈரநிலத்தைக் குறிக்கும். அலையாத்திக் காடு என்பது mangrove - இது ஈரநிலங்களில் காணப்படும் தாவரங்களைக் குறிக்கும். மாற்றுக.--பாஹிம் 08:22, 16 ஏப்ரல் 2011 (UTC)

உரிய ஆதாரங்களையும் தாருங்கள் பாகிம். அது மாற்றல் வேண்டுகோளை மேலும் உறுதியாக்கும். --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 08:59, 16 ஏப்ரல் 2011 (UTC)

சதுப்பு நிலம் என்ற வழிமாற்றை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 09:09, 16 ஏப்ரல் 2011 (UTC)


வழிமாற்றை நீக்கியதற்கு நன்றி Kanags. சதுப்பு நிலம்(Marsh), ஈரநிலம்(Wetland) இரண்டும் வேறு வேறு.அலையாத்திக் காடு (mangrove) என்பது உவர்சதுப்பு நிலத்துக்குரிய ஒரு தாவர சாகியம். இலங்கையில் கண்டல் தாவரங்கள் என அழைக்கப்படுகிறது. --சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 10:40, 16 ஏப்ரல் 2011 (UTC)

இது ஒரு வகைத் தாவரத்தைக் குறிப்பதால் காடு என்பதற்று அலையாத்தி என்றிருக்கட்டும். --Anton·٠•●♥Talk♥●•٠· 09:56, 8 பெப்ரவரி 2014 (UTC)
ஒரு வகைத் தாவரத்தைக் குறிக்கின்றது என்பது சரியல்ல. சஞ்சீவி எழுதியிருப்பதுபோல் ஒரு தாவர சாகியம் என்று கொள்ளலாம். பல்வேறு வகையான தாவரங்களை உள்ளடக்கியதே அலையாத்திக் காடுகள். இவற்றில் மரங்கள், புதர்வகைச் செடிகள் என பல்வேறு வகையான தாவரங்கள் அடங்குகின்றன. ஆங்கிலத்தில் Mangrove forest என்றோ, அல்லது Mangrove என்றோ இரு பெயராலும் அழைக்கப்படுகின்றதென நினைக்கின்றேன். எனவே கட்டுரையில் முதல் வரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தையும் திருப்பி அமைப்பதே நன்று. கட்டுரையில் தொடர்ந்து வரும் வரிகள் இதனை மேலும் விளக்குகின்றதெனவே நினைக்கின்றேன். பல்வேறு மரம் செடி கொடிகளுடன், ஒரு சிறிய காடு போன்றே தோற்றம் தருவதனால், இதனை அலையாத்திக் காடு என்று அழைப்பதும் தவறில்லை என்றே தோன்றுகின்றது.--கலை (பேச்சு) 14:02, 8 பெப்ரவரி 2014 (UTC)
ஆம் அது தாவரங்களைத்தான் குறிக்கிறது. இலங்கையில் கண்டல் தாவரங்கள் என அழைக்கப்படுகிறது. இப்பெயர் கூடிய பொருத்தமுள்ளது. அல்லது அலையாத்தித் தாவரங்கள் எனலாமா? காடு என்பது கண்டல் தாவரங்கள் உள்ள காடு என அர்த்தப்படுவதுபோல் உள்ளது. --AntonTalk 11:10, 12 பெப்ரவரி 2014 (UTC)
ஆம். அலையாத்தித் தாவரங்கள் என்றே அழைக்கலாம். உள்ளடக்கத்தையும் அதற்கேற்ப மாற்ற வேண்டும் என நினைக்கின்றேன்.--கலை (பேச்சு) 11:48, 12 பெப்ரவரி 2014 (UTC)
Return to "அலையாத்தித் தாவரங்கள்" page.